|
18/8/15
| |||
|
மறவர் என்றால் யார்?
மறவர்கள் மூவேந்தர் படைகளிலும் இடம்பெற்றிருந்தனர் என்பதைச் சங்க
நூல்களால் அறியலாம். பழங்குடி மறவரின்றி ,மூவேந்தர் படையில்லை என்றேக்
கூறலாம். சங்கப் பாடல்களில் காலாட்படை என்றச் சொல்லிற்கே இடம் இல்லை.
தேர்ப்படை , யானைப்படை, குதிரைப்படை, இவற்றுடன் மறப்படையும் நால்வகைப்
படை எனச் சங்கநூல்கள் கூறுகின்றன. தமிழ் நூல்கள் காலாட்படை வீரர்களை
மறவர் என்றேக் குறிப்பிடுகின்றன. அதனால் ,காலாட்படை வீரர்களுக்கு மறவர்
என்றேப் பெயர் வழங்கியதை அறியலாம்.
"நெடுநல் யானையுந் தெரு மாவும்
படையமை மறவரு முடையம் யாமென்று" (புறநானூறு. 72:4,5)
"ஒளிறுவாள் மறவருந் தேரு மாவும்
களிறுஞ் சூழ்தர" (மணிமேகலை 1:68,69)
"ஒளிறுவாள் மரவருங் களிறு மாவும்" (புறநா 227:4)
"கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிரதெரு நெஞ்சுடைப் புகன் மறவரும்
நான்குடன் மாண்ட தாயினுமாண்ட" (புறநா 55:7-9)
(மா,கலிமா -குதிரை, களிறு - யானை ) ஆகவே,காலாட்படை வீரர் மறவர்
எனப்பட்டதை உணரலாம். காலாட்படை வீரரில் பல்வேறு சாதியினரும்
அடங்குவர்.யானை ,குதிரை, தேர் ஆகிய மூன்றினையும் முறையானப் பயிற்சி
பெற்று, நிரந்தரமாகப் படையிளுள்ளாரே செலுத்திட முடியும். காலாட்படையில்
அவ்வப்பொழுது ,தேவைக்கேற்ப , வீரர் சேர்க்கப்பட்டனர். இதனைக் கூலிப்படை
என்றும். இடங்கை படையென்றும் கூறுவர். மறவர்கள் பெரும்பாலும்
காலாட்படையில் பணியாற்றியவர்களே.
" வில்லேர் வாழ்கை விழுந்தொடை மறவர்"
(அகநானூறு 35)
"நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்" (அகநா 67)
"ஒளிருவாள் மறவர்" (புற 227:4)
"மறப்படை நுவலும்..... துன்னரும் மறவர்" (புற 270:8,9)
(வேட்டையாடுவோர் பயன்படுத்தும் ஆயுதம், தொலைவிளிருந்தேக் கொல்லும் வில்
,அம்பு ஆகும். மறவர் வில்லை பயன்படுத்தி குறிதவறாது எய்வதில் வல்லவர் என
சங்க நூல்கள் பலவற்றிலும் கூறப்பட்டுள்ளது)
"புட்பகை கேவாநாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப" (புற 68:12,13)
(புட்பகை-மயில் ,காகம் போன்றவற்றால் தீநிமித்தங் காணப்பட்டதனால்,
களத்திலே வீழ்ந்துவிடுவோமோ என அஞ்சி படையை விட்டு விலகிவிடாமல், போரிடும்
திண்தோள் மறவர்)
"போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" (புற 31:9)
(போரென்றால் மகிழ்வுறும், கழலணிந்த போர்வீரர்) இவை போன்ற எண்ணற்ற
பாடல்கள்,மறவரின் வீரத்தை புகழ்கின்றன.
மறம் என்ற சொல்லுக்கு சினம்,பாவம்,பிணக்கு,கூற்று( எமன்), வலி,வீரம்,சண்டை
என 7 பொருள்களைப் பிங்கலகண்டு கூறுகிறது. (பிங்கலகண்டு 3939,கழகம்
வெளியீடு 1968,பக் 477)
சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள பேரகரமுதலி வீரம், சினம், பகை,
வலி,வெற்றி, போர், கொலைத்தொழில் ,எமன், கெடுதி, பாவம் எனப்பொருள்
கூறுகிறது.

மறம் என்ற சொல்லுக்கு சினம்,பாவம்,பிணக்கு,கூற்று(
என 7 பொருள்களைப் பிங்கலகண்டு கூறுகிறது. (பிங்கலகண்டு 3939,கழகம்
வெளியீடு 1968,பக் 477)
சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள பேரகரமுதலி வீரம், சினம், பகை,
வலி,வெற்றி, போர், கொலைத்தொழில் ,எமன், கெடுதி, பாவம் எனப்பொருள்
கூறுகிறது.
சங்ககால இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக