http://thamizhselva.blogspot.in/2015/12/2.html
நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும்
இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
சென்னையின் இன்றைய வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம் கீழ்கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள்தான். இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?
அணை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அணையின் எச்சமாக வெற்றுத்தரை தான் உள்ளது.
1. இந்தியாவில் சராசரி ஆண்டு மழை அளவு 1,170 மி.மீ.
8. இவை போன்றைவைகளால் ஆண்டுக்கு அரசுக்கு 5000 கோடி வருமானம்... காண்க:
புரிந்துகொள்ள மேலும் ஒரு படம்.
ஆனால்... ஆனால்
தமிழக நீர் மேலாண்மை பத்தி
கொஞ்சம் விலாவரியாத்தான் பாப்போமே...
I. சென்னையைச் சுற்றி
II. சென்னைக்கு வெளியே
I. சென்னையைச் சுற்றி
1. நான்கு ஏரிகளும் நாசப்படுத்தும் திராவிட ஆட்சிகளும்
1 TMC என்பது - One Thousand Million Cubic (or One Billion Cubic) அதாவது
29 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் (28,316,846,592 லிட்டர்). காண்க:
1. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவு 11 டி.எம்.சி.
2. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 1800 ஏரிகளின் கொள்ளளவு 45 டி.எம்.சி. ஆக மொத்த கொள்ளளவு 56 டி.எம்.சி. தான்.
3. ஆனால் இந்த பருவ காலத்தில் இந்த 3 மாவட்டங்களில் பெய்த மழை அளவு 383 டி.எம்.சி. தேக்கமுடிந்தது மொத்தம் 54 டி.எம்.சி. தான்.
4. கடலுக்கு வீணாகப் போன குடிநீரின் அளவு 329 டி.எம்.சி.
5. இந்த 329 டி.எம்.சி தண்ணீர் இந்த 3 மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் 10 ஆண்டுகளுக்கான தண்ணீர்த் தேவையை தீர்க்கக் கூடியது. காண்க:
நாம் ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகாவிடம் கேட்பது வெறும் 12 டி.எம்.சி. தான். சுப்ரீம் கோர்ட் திறந்துவிட சொல்லி இருப்பது 2.4 டி.எம்.சி. தான். காண்க: ஆனால் அது கூட தர மறுக்குது கர்நாடகா.
ஆனால் நமது ஆட்சியாளர்கள் வீணடித்திருப்பது 329 டி.எம்.சி.
மகா கொடுமை.
2. செம்பரம்பாக்கம் ஏரி
1. சோழர்களின் காஞ்சீபுர தொண்டை மண்டலத்தில் உள்ள 24 கோட்டங்களில் ஒன்றான புலியூர் கோட்டத்தில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. காண்க:
2. 168 கிராமங்களுக்கு வாழ்வு கொடுத்தது இன்று சென்னையால் மட்டும் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது அதுவும் தனியார் கொள்ளையர்களால்.
3. செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி இந்த நான்கு ஏரிகள் போதாது என்று வீராணம் ஏரியின் நீரையும் சென்னை பெறுகிறது.
4. ஆனால் இந்த நீர் எல்லாம் எங்கே போகிறது? பின்னர் ஏன் சென்னை மக்கள் குடிப்பதற்கு மினரல் தண்ணீரை தேட வேண்டியிருக்கு? தண்ணீர் கொள்ளை???
5. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களுடைய 50 ஆண்டு கால ஆட்சியில் ஒரே ஒரு ஏரி கட்டி இருக்கிறார்களா? உடைக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தூர் வாரப்படாத 165 ஏரிகள் உடைந்து வீடுகள் மூழ்கியது. காண்க:
மக்களுக்கான ஆட்சி இல்லாமல் நாசமாப்போனவர்களின் திராவிட ஆட்சிகள் இருப்பதால் தமிழ் நாட்டுக்கு அழிவுதான்.
3. சென்னைப்பேரழிவுக்குக் காரணம்?
இந்திய மற்றும் சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் 50 செ. மீ. மழை பெய்யும் என்கின்றன.
அதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் 83 அடி நீரின் அளவை 75 அடியாக குறைக்க அனுமதி கோரப்படுகிறது. நவம்பர் 26,27,28,29,30 எந்த நடவடிக்கையும் இல்லை. டிச. 1 சொன்னபடியே 49 செ. மீ. மழை.
1. தமிழக அரசின் இணைய தளத்தில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 900 கன அடி.
2. சென்னை கலெக்டர் சுந்தரவல்லி சொன்னது 5000-7000 கன அடி.
3. அங்கு பணிபுரிந்த பொதுபணித்துறை ஊழியர் சொன்னது 10,000 கன அடி.
4. ஆனால் உண்மையில் நடந்ததோ கொடூரமானது:
1. அரசு தளத்தின்படி டிச.1அன்று அணையில் இருந்த நீரின் அளவு 83.48 அடி(3141 மில்லியன் கன அடி)
2. டிச. 2 ந்தேதி அணையில் இருந்த நீரின் அளவு 74.08 அடி (1134 மில்லியன் கன அடி)
3. ஆக டிச.1 இரவு 10 மணிக்கு 2007 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது வினாடிக்கு 29,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு இரவு 2 மணிக்கு சென்னையில் வீடுகளை மூழ்கடிக்க தொடங்கி இருக்கிறது. காண்க:
ஹிட்லர் கூட செய்யாத இந்த செயற்கைப் பேரிடரை
ஜெயலலிதா செய்திருக்கிறார்.
4. அதிகம் மழை பெய்தது சென்னையிலா ? இல்லை
சென்னையில்தான் அதிக மழை பெய்தது என்று சொல்லி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை தமிழகத்தில் அதிகம் மழை பெய்தது
பாண்டிச்சேரியிலும், மதுராந்தகத்திலும் தான்.
கீழே உள்ள அமெரிக்க நாசாவின் (NASA) படம் தெளிவாக விளக்கும்.
மஞ்சள் நிறம் சுமாரான மழை. சிவப்பு நிறம் கன மழை பெய்த இடங்கள். காண்க:
5. சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
கொற்றலை ஆறு (கொசஸ்தலை என்று மாற்றுகிறார்கள் அவாள்கள்) வேலூர் மாவட்டத்தில் தொடங்கி திருவள்ளூர் வழியாய் பூண்டி ஏரி, புழல் ஏரி(ரெட் ஹில்ஸ் ஏரி உண்மையில் அது இரட்டை ஏரி), சோழவரம் ஏரி என 200 ஏரிகளை நிரப்பிவிட்டு சென்னை எண்ணூர் கால்வாய் மூலம் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு. காண்க:
1876 ல் ஆங்கிலேயன் கட்டிவச்ச புழல் ஏரி அணையின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் கூட கரைகள் கட்டாத நம்ம கூலிக்கு மாரடிக்கும் அரசாங்கங்கள்.
சென்னையில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் வாக்கம் என அழைக்கப்பட்டது.
ஆற்றினை சுற்றியுள்ள பகுதிகள் பாக்கம் என அழைக்கப்பட்டது.
1 பாக்கத்திற்கு 2 அல்லது 3 வாக்கம் அதாவது 1 ஆற்றிற்கு 2 அல்லது 3 ஏரிகள் என அமைத்திருந்தனர் முன்னோர். ஏரிகளாக இருந்த வில்லிவாக்கம், புரசைவாக்கம் ஏரிகள் அழிக்கப்பட்டதால் அங்கு சேரும் மழை நீர் நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றில் கலக்க வேண்டிய நிலை.
கொசஸ்தலை ஆறு பெருகினால், கூவம் வாங்கிக்கொள்ளும், கூவம் பெருகினால் அடையாறு வாங்கி வங்காள விரிகுடாவில் ஒதுக்கிவிடும்.
ஆறுகள், ஏரிகள், இணைப்பு கால்வாய்கள் எல்லாம் திட்டமிடாத ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு விட்டதால் இயற்கை கோர முகத்தை காட்டும்போது பாதிப்புக்கு உள்ளாகுவோர் அப்பாவி மக்களே. காண்க:
நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும்
1. பூண்டி (கொள்ளளவு 3.1 டி.எம்.சி),
2. செம்பரம்பாக்கம் (3.3 டி.எம்.சி),
3. புழல் (3.6 டி.எம்.சி),
4. சோழவரம் (0.8 டி.எம்.சி) ஆகிய ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
சென்னையின் இன்றைய வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம் கீழ்கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள்தான். இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?
6. சென்னை அன்றும் இன்றும்
ரொம்ப வித்தியாசமில்ல வெறும் 10 வருடங்களுக்குள்ளேயே
1. கோவளம் பூஞ்சேரியில் தொடங்கி முட்டுக்காடு, பள்ளிக்கரணை, பல்லாவரம், பொழிச்சலூர் வரை இருந்த ஏராளமான ஏரிகள், குளங்கள் எல்லாம் இருப்புப் பாதைகளாகவும் நெடுஞ்சாலை களாகவும் மாற்றப்பட்டுவிட்டன.
2. வல்லக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் மாகாணியம் மலையப்பட்டு வரை இருந்த ஏரிகள், குளங்களைக் கொண்ட நீர்வழித்தடம் நகரங்களாக வளர்ந்து நிற்கின்றன.
3. பொத்தேரி முதல் முடிச்சூர், மணிமங்கலம், ஆதனூர் வழியாக அடையாறு வரையிருந்த நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன.
4. ரெட்டேரியின் வியாசர்பாடி நீர்வழித்தடத்தில் இருந்த ஏரிகளில் ஒன்றுகூட இன்றைக்கு இல்லை.
5. வேப்பேரியின் தண்ணீர் சேத்துப்பட்டு வழியாக எண்ணூர் - கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. அதுவும் இன்று காணாமல்போய்விட்டது.
6. நந்தனம் தொடங்கி வள்ளுவர் கோட்டம் தாண்டியும் பரந்துவிரிந்திருந் தது பெரிய ஏரி (Long tank). மழைக் காலங்களில் கூவம் பொங்கினால் பெரிய ஏரி வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் தஞ்சமடையும். எதையும் மிச்சம் வைக்காமல் அழித்துவிட்டோம். மேற்குமாம்பலத்தில் அந்த ஏரியின் எச்சமாக இப்போது இருப்பது ‘லேக் வியூ’ சாலை எனப்படும் ஏரிக்கரைச் சாலை மட்டுமே.
7. சென்னை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு:
பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் காந்திமதிநாதன் மற்றும் நீரியல் ஆய்வாளர் ஒடிசா பாலு ஆகியோர் சென்னைக்கருகில் உள்ள நீர் நிலைகளை இணைத்து (காண்க:)
1. அதிக நீர் உள்ள இடத்திலிருந்து தேவைப்படும் இடத்திற்கு அனுப்பவும்
2. வெள்ளம் தவிர்க்கவும் வறட்சி போக்கவும் சொன்ன எதிர்கால திட்டப்படி:

பாலாற்றை அடையாற்றுடனும் இணைக்கலாம்.
8. சென்னை குடிநீர் திட்டம் என்ற பெயரில் கொள்ளை
1. வீராணம் ஏரியும் திராவிடக் கொள்ளையும்.
வீராணம் ஏரி (வீர நாராயணபுர ஏரி)
வீராணம் ஏரி ராஜா ஆதித்ய சோழனால் கி.பி. 907-955 கால கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த ஏரியின் நீளம் 16 கிலோமீட்டர். கொள்ளிடத்திலிருந்து வடவாறு வழியாக நீர் வருகிறது. காண்க:
இந்த மாபெரும் ஏரி யை உருவாக்கி சாதனை புரிந்ததும் தஞ்சை சோழன்தான்.
வீராணம் ஏரி குழாய் ஊழல் என்ற வேதனை யை உருவாக்கியதும் தஞ்சை ஆரூரான் தான்.
2011ல் போரூர் ஏரியை ஆழப்படுத்தி வெறும் 24 mcft (Million Cubic feet) அதிகம் தண்ணீர் சேமிக்க அரசு செலவழித்தது 20 கோடி. ஆனால் 10 ம் நூற்றாண்டிலேயே 1465 mcft தண்ணீர் சேமிக்க ஏரி கட்டி இருப்பது 2011ஆண்டு மதிப்பில் 1350 கோடி ரூபாய் செலவழிப்பதற்கு சமம். என்ன ஒரு சமுதாய முன்னோக்கு சிந்தனை அவர்களுக்கு. காவிரியில் அதிகமாய் தண்ணீர் வரும் சமயங்களில் அது வீணாகக் கடலில் கலக்க விடாமல் சேமித்து 20,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் திட்டம். காண்க:
வீராணம் ஏரியில் 47,50 அடிக்கு (1,465 மில்லியன் காண அடி) தண்ணீர் தேக்க முடியும். 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஜெயலலிதா விதி 110 ன் கீழ் வீராணம் ஏரியை தூர் வார 2013 ல் 40 கோடி ஒதுக்கினார். ஒதுங்கியது எங்கே என தெரியாது, தூர் வாரப்படவே இல்லை. 2015 நவம்பருக்கு முன்பு வரை வழக்கமாக தேக்க அனுமதியுள்ள 44 அடியையும் மீறி 46 அடிவரை தேக்கப்பட்டது. சென்னைக்கு தண்ணீர் தர பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக. மழைக்காலத்தில் அணையை திறந்துவிட்டு 20 கிராமங்கள் மூழ்கியது, 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம். ஒரு வாரத்தில் மட்டும் 7 tmc தண்ணீர் வீணாகக் கடலுக்குப் போனது.
வீராணம் திட்டம்: 1967 முதல் 2015 வரை
(50 ஆண்டுகளாக கொள்ளைடிக்கும் திட்டம்)
சென்னையிலிருந்து 235 கிலோமீட்டர் தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து நீர் வர வேண்டும்.
1. முதல் வீராணம் திட்டத்திற்கு தி.மு.க.வின் முதல் மந்திரி அண்ணாதுரை 1967 ல் அடிக்கல் நாட்டினார். பின்னர் 1969 ல் வந்த கருணாநிதி அதில் ஊழலை நாட்டினார்,
முதல் விஞ்ஞான ஊழல் கான்க்ரீட் குழாய்களில். காண்க:
2. 1993ல் ஜெயலலிதா அரசு 464 கோடியில் திட்டத்தை விரிவுபடித்தி கொள்ளையடித்தது.
3. 1996ல் கருணாநிதி அரசில் இத்திட்டம் மாற்றப்பட்டு திட்ட மதிப்பீடு 1638 கோடி ஆனது. 1073 கோடி தருவதாய் இருந்த உலக வங்கி திட்ட மாற்றத்தை ஏற்கவில்லை. காவிரியின் கிளை ஆறான கொள்ளிடத்திலிருந்து வடவாறு என்று கால்வாய் வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வரும் வழியை மேம்படுத்துவதை திட்டத்தில் கொண்டு வந்து சமாளித்தனர்.
4. 2001 ல் மீண்டும் ஜெயலலிதா அரசு புது வீராணம் திட்டம் என்று புதுப்பெயர் சூட்டியது. 720 கோடியில் புது வீராணம் திட்டம். கருணாநிதியின் கான்கிரிட் குழாய்களுக்குப் பதிலாக இரும்புக்குழாய்கள்.
ஏரியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் 45 ஆழ் துளைக் கிணறுகள் தோண்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொன்றும் 250 மீட்டர் அதாவது 820 அடி வரை ஆழமானது. இவ்வளவு ஆழம் தோண்டி நீர் உறிஞ்சினால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு போகும், எப்படி விவசாயிகள் பிழைப்பது.
வடவாறு பாசனம் பெறும் விவசாய நிலங்கள் 11,000 ஏக்கர். வீராணம் ஏரி பாசனம் பெறும் விவசாய நிலங்கள் 45,000 ஏக்கர். எங்கே போவார்கள் விவசாயிகள். 800 அடிவரை நீரை உறிஞ்சினால் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடலில் இருந்து கடல் நீர் உள்ளே வந்துவிடாதா?விவசாயிகளின் வயிற்றில் அடித்தாவது ஊழல் செய்ய நினைப்பவர்களை என்ன செய்வது? காண்க:
அவ்வாறு 45 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீரின் அளவு என்ன தெரியுமா?
0.33 டி.எம்.சி. தான். இந்த தண்ணீரை சென்னையைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தினாலே கிடைக்குமே.
ஆனால் அங்கே ஊழல் அதிகம் பண்ண முடியாதே?
சரி அப்படியாவது வீராணம் நீரைக்கொண்டு சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்திருக்கிறார்களா இந்த 50 வருடத்தில் என்று பார்த்தால் அதுவும் இல்லையே?
கேடுகெட்ட அரசாங்கங்கள், பிணந்தின்னும் கழுகுகள்,
மலத்திலும் ஒட்டுப்பொறுக்கும் பன்றிக்கூட்டங்கள்.
2. தெலுங்கு-கங்கை ஒப்பந்தம்
1977 ல் கிருஷ்ணா நதி நீர் பெற போடப்பட்ட திட்டம். முதலில் 15 டி.எம். சி. பெற ஏற்பாடு. பின்னர் எம்.ஜி.ஆர். காலத்தில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு-ஆந்திரா மாநில அரசுகள் தெலுங்கு-கங்கை ஒப்பந்தம் போட்டு தமிழ்நாடு பெற வேண்டிய தண்ணீரின் அளவு வெறும் 12 டி.எம். சி. என குறைக்கப்பட்டது. ஆனால் வந்ததோ 0.5 டி.எம். சி.க்கும் குறைவாகத்தான். வந்தார் சாய்பாபா கருணாநிதியிடம் பங்களிப்பு செய்தார். திட்டமே சாய் கங்கா என மாற்றப்பட்டது. 2006 வரை வந்த நீரின் அளவு 3.7 டி.எம். சி. மட்டுமே. காண்க:
I I . சென்னைக்கு வெளியே
1. பழந்தமிழரும் நீர் மேலாண்மையும்-அறிமுகம்
இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் இவற்றில் மட்டும் 1,66,283 ஏரிகள் உண்டு.
தமிழ்நாட்டில் இருந்த 38,202 ஏரிகளில் தற்சமயம் 18,000 ஏரிகள் தான் இருக்கின்றன. காண்க:

1. தமிழக அரசின் கணக்குப்படி தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கின்றன.
- பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவை 18,789.
- உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளவை 20,413.
இவைதவிர,
2. கோவில் குளங்கள் 3,000.
3. ஊருணிகள் 5,000.
இவற்றின் மொத்த கொள்ளளவு 390 டி. எம். சி. (1 டி. எம். சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்)
இது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளின் கொள்ளளவான 243 டி. எம். சி. என்பதைவிட அதிகம். காவிரியால் கிடைக்கும் 249.60 டி. எம். சி. யை விட அதிகம்.
இது தான் நம் பழந்தமிழரின் பாரம்பரிய அறிவியல் முறையிலான நீர் மேலாண்மை.
தமிழ்நாட்டிலுள்ள 114 அணைகளில் 38 சிறிய அணைகள் தவிர மற்ற அனைத்து அணைகளும் பெரிய அணைகள் அனைத்தும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகளுக்கு முன்னதாக
காமராஜர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் கட்டப்பட்டவையே.
முக்கிய அணைகளான
1. மேட்டூர், 2. பாபநாசம், 3. பேச்சிபாறை, 4. பூண்டி
அணைகள் ஆங்கிலேயர்களாலும்
1.ஆழியார், 2. அமராவதி, 3. கிருஷ்ணகிரி, 4, பவானி, 5. மஞ்சளாறு, 6. பெருஞ்சாணி, 7. பில்லூர்,
8. சாத்தனூர், 9. திருமூர்த்தி, 10. வைகை
அணைகள் பெருந்தலைவர் காமராஜராலும் கட்டப்பட்டவை. காண்க:
பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என அழைத்தனர்.
நீர் நிலைகளை உருவாக்குவது மன்னனின் முதன்மையான கடமையாக இருந்தது.
பழந்தமிழர் அமைத்த ஏரியின் வடிவமும் பிறைநிலா வடிவில் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் நீரை அதிகம் தேக்கும் விதத்திலும் இருக்கும். இதனைக் கபிலர் பாடல் விளக்குகிறது.
அறையும் பொறையும் மணந்த தனைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே.
புறநானூறு (48) பாடலில் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குட புலவியனார் கூறும் பாடல் :
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே
பொருள்: எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகளை அமைக்கும் மன்னன் பெயர் நிலைத்து நிற்கும். காண்க:

2. தஞ்சாவூர் பெரிய கோவிலும் மழைநீர் சேகரிப்பும்
தஞ்சை பெரிய கோவிலில் சேரும் மழைநீர் முழுவதும் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் எரிக்கும், அங்கு நீர் தெளிந்த பின் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கும் செல்லுமாறு நீர் சேகரிப்பு வசதிகள். இதனை மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர்.
ஏரிகளும் தமிழர் வரலாறும்
1. ஒழுங்கு முறைகள்:
1. நொய்யல் ஆற்றில் சோழர்களின் ஒழுங்குமுறை.
1. கோவை மாவட்டம் பேரூர் என்ற ஊரில் நீர்ப்பங்கீடு பற்றிய ஒரு கல்வெட்டு.
2. கி. பி. 1224 ம் ஆண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட வீர ராசேந்திரன் அளித்த தீர்ப்பு அதில் எழுதப்பட்டுள்ளது.
3. சோழர்கள் கொங்கு மண்டலத்தில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் தொடர்ச்சியாக குளங்களை விவசாயத்திற்காக வெட்டி இருந்தார்கள். (படத்தை பெரிது படுத்தியும் காணலாம்)
4. தேவிசிறை என்ற ஊரில் இருந்த குளம் மேல்புறத்திலும், கோளூர் என்ற ஊரில் இருந்த குளம் கீழ்புறத்திலும் இருந்தது.
5. மேல்புற தேவிசிறை ஊர்க்காரர்கள் முதலில் நீரை நிரப்பிக்கொண்டு மீதி இருந்தால் கோளுருக்கு நீரை அனுப்பினார்கள். இது தான் பிரச்சினை.
6. மன்னனின் தீர்ப்பு: கீழே உள்ள கோளூர் குளம் நிரம்பிய பிறகே தேவிசிறை குளம் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று பாதிப்புக்கு உள்ளாகுவோரின் நியாயமே நீதியானது. காண்க:
7. இன்று காவிரி பிரச்சினையில் பாதிப்புக்கு உள்ளாகும் தமிழகம் சார்பாய் நியாயம் பேசுவோர் மத்திய மாநில அரசுகளில் இல்லை. இதை வைத்து அரசியல் செய்யும் பிழைப்புவாத அரசியல் தரகர்கள் தான் நம்மை ஆட்சி செய்கிறார்கள்.
8. தொல் தமிழர்களின் ஏரிகள் இன்று சில அணைகளாக:
9. ஆனால் முழு ஆறும் சாயப் பட்டறைகளால் கழிவு சாக்கடை ஆக்கப்பட்ட இன்றைய அவல நிலை:
நொய்யல் ஆற்று வழி முழுவதும் எத்தனை சாயப்பட்டறைகள் ???
சாயப்பட்டறைகளால் சீரழிந்த ஆறும், விவசாயமும், ஒட்டுமொத்தத்தில் தமிழ் சமுதாயமும்.
2. இதே போன்று இன்னொரு தொல் தமிழர் வரலாற்று நிகழ்வு.
1. மதுரை சோழவந்தான் என்ற ஊரின் சோழர்கால பெயர் சதுர்வேதி மங்கலம்.
(இந்தமங்கலம்என்ற பெயர் வந்தாலே ஆரிய பிராமணர் சோழர்களை ஏமாற்றி
இலவசமாக பெற்றுக்கொண்ட நிலம். வைகை நதியின் பாசனம் மிக்க நிலத்தை அபகரித்த பிராமணர். அறிஞர் அண்ணாவின் ஆய்வுக்குறிப்பு காண்க:
அதனால் அவாள்கள் இருக்கும் பகுதிகளில் விரைவு இரயில்கள் கூட நின்று செல்கின்றன, அது சென்னை மாம்பலம் என்றாலும் சரி, மதுரை சோழவந்தான் என்றாலும் சரி . )
2. கி.மு. 1117 ல் வல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டிருப்பது. "காலுக்கு மேல் கால் கல்லலாகாது." ஒரு ஆற்றில் இருந்து வாய்க்கால் வழியாக ஒரு ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் இடையே இன்னொரு ஏரி வெட்டக்கூடாது.
3. கர்நாடகாவில் மீண்டும் மீண்டும் அணைகள் கட்டி தமிழருக்கு தண்ணீர் தர வழிகளை அடைக்கும் அநியாய சூழலை நினைவு கூர்வோம்.
4. இது போன்று தமிழ் முன்னோர் பின்பற்றிய பாரபட்சமற்ற நீர் மேலாண்மை முறைகள் பலவற்றை ஆய்ந்து எழுதியுள்ளார் முனைவர் பழ. கோமதி நாயகம். காண்க:

2. ஏரிகள் பராமரிப்பு:
1.ஒவ்வொரு ஏரியிலும் மீன் பிடிப்போர் ஏரிப்பராமரிப்புக்கு குறிப்பிட்ட தொகை வளங்க வேண்டும்.
2. ஏரியைப் பாதுகாக்க பகல் மற்றும் இரவுக்காவலர்கள்நியமிக்கப்பட்டார்கள்.
3. இவை பற்றிய அக நானூற்றுக் குறிப்பு (252).
துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின் மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே.
பொருள்: அடர்ந்த பனி, அடைமழை, நள்ளிரவு போன்ற நேரத்திலும் எரியைக்காக்கும் காவலன் போல் ஒரு தாய் தூக்கம் மறந்தாள். ஒரு தாய்க்கே உதாரணம் தரும் விதத்தில் ஏரிக்காவலரின் பணி இருந்திருக்கிறது.
4. செம்பரம்பாக்கம் ஏரியின் காவலர்களையும், நள்ளிரவில் ஏரியைத் திறந்துவிட்டு மக்களைத் தவிக்கவிட்ட தலைமைக் காவலர் ஜெயலலிதா அம்மையாரையும் இந்த நேரத்தில் நினைத்து நொந்து கொள்வோம்.

3. திண்டுக்கல்லும் ஏரிகளின் தொழிநுட்பமும்
திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்று குளங்கள் உண்டு.
அவை மூன்றும் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக உயரம் குறைத்து கட்டப்பட்டிருக்கும்.
காரணம் பாசனம் பெறும் நிலங்களின் உயர அளவுக்கேற்ப ஏரிகளின் உயரமும் அடுக்கடுக்காக கட்டப்பட்டிருக்கிறது. என்ன ஒரு தொழில் நுட்பம்.
அருகில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி கொண்டு இந்த ஏரிகள் கட்டப்பட்ட காலம் 2100 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

4. ஏரியின் மடை யும் அதனைத் திறக்கும் "மடை"யர்களும்.
வெள்ளக்காலங்களில் மடை திறப்பது மிகவும் சிரமம். பல அடி ஆழ ஏறி நீருக்குள் வெள்ளமாய் பாய்ந்துவரும் நீருக்கு மத்தியில் முக்குளித்து, மூச்சடக்கி மடையைக் கண்டுபிடித்து திறந்துவிட்டபின் அந்த மடைவழியாய் வெளியேறும் நீரின் அதிவேக பாய்ச்சலில் சிக்காது மீண்டு மேலெழுந்து வருவது உயிரை பணயம் வைக்கும் செயல். மடையைத் திறந்து விட்டு ஊருக்காக தங்களையே தியாகம் செய்யும் அவர்கள் "மடை"யர்கள் என அழைக்கப்பட்டார்கள். தியாகத்தின் வார்த்தை மருவி எதிர்மறைச் சொல் ஆகிவிட்டது வருத்தம் தரும் வரலாற்று உண்மை. காண்க:

5. கல்லணையும் தமிழரின் உலக அதிசயமும்
1. எகிப்தில் காராவி (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத் எல் காபாரா (Sadd El Kafara) என்ற அணைதான் உலகின் மிகப் பழைமையான அணை என்று சொல்லப்படுகிறது. காண்க:

கி.மு 2650 ல் கற்களாலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படும் அந்த அணையின் இன்றைய நிலை
அணை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அணையின் எச்சமாக வெற்றுத்தரை தான் உள்ளது.
மணற்பாங்கான பகுதி ஆதலால் zigzag வடிவில் அதாவது ஒரு கல் மற்றொரு கல்லை இணைக்கும்
காடி வடிவில் கற்களை தரை மணலின் அடி ஆழத்தில் இணைத்து அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள் சோழத்தமிழர்கள்.
இன்றும் மணல்பாங்கான கல்லணை.
(கல்லணையில் கொள்ளிட ஆற்றுக்கான திறப்புக்கருகில் மணல் புதைகுழி குளிக்க வேண்டாம் என்று எழுதி இருப்பதைக் காணலாம்)
கல்லணையின் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தித்தான்
ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் 1874ல் ஆந்திராவில் கோதாவரி தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார். அந்த அணையின் முன்பாக அவரின் சிலை:
தமிழக முல்லைப்பெரியாரில் பென்னி குக் என்பவர் போல் ஆந்திராவில் ஆர்தர்.
Arthur Cotton was promoted to the rank of Captain in 1828, and was put in charge of Investigation for the Cauveri Scheme. He started working to remove the soil settling in Kallanai dam and with the model of Kallanai dam he built the Upper Dam in Cauveri in Mukkombu near Tiruchirapalli and success of these projects paved the way for great projects on the Godavari and Krishna Rivers. Sir Cotton once told, after analyzing theKallanai dam and the basement of the dam, they learned how to build basement in place full of bed of sand. காண்க:
எகிப்தின் சாத் எல் காபாரா அணை இன்று இல்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதே தொழிநுட்பத்தில் கட்டப்பட்டு இன்றும் செயல்பாட்டில் இருக்கும்
உலகின் மூத்த அணை தமிழன் கட்டிய கல்லணை.

6. கச்சமங்கலம் அணை
1. கல்லனையைப் போன்றே பெருமை வாய்ந்த ஆனால் பிரபலம் ஆகாத அணை ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கருகில் கச்சமங்கலம் (Katchamangalam) என்ற ஊரில் வெண்ணாற்றின் குறுக்கே 2000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் அழிசியின் மகன் சேந்தன் கட்டியது. இன்னும் செயல்பாட்டில் உள்ளது. சற்று தொலைவில் உள்ள துவாக்குடி மலைக்குன்று ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து சுவர் போல அணை ஆக்கிவிட்டார்கள். இம்முறையை சோழர்கள் கற்சிறை என்கிறார்கள். காண்க:
அந்த அணையின் படம் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கூகுள் வரைபடத்திலிருந்து புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் அணையின் மையத்தில் அந்த மலைக்குன்றைக் காணலாம்.
இரு பக்கமும் இயற்கையான பாறை... நடுவில் செயற்கையாக நிறுத்தப்பட்ட பாறை.
2000 ஆண்டுகளாக இன்னும் செயல்படுகிறது. நமது முன்னோர்கள் என்ன தொழிநுட்பம் பயன்படுத்தினார்கள் ? ஆச்சரியமான கேள்விக்குறியே??

7. மணிமுத்தாறு அணையும் பெருந்தலைவர் காமராஜரும்
1950 க்கும் முன்னதாக மணிமுத்தாறு ஆறு வெள்ளக்காலங்களில் தாமிரபரணியோடு சேர்ந்து கடலுக்குள் போய்விடும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி விவசாயிகளுக்காக அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கே. டி. கோசல்ராம் முதல்வர் காமராஜரிடம் எடுத்துக்கூற கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் மக்கள் உதவி இருந்தால் செய்யலாம் என அவர் சொல்ல, பலர் நிலங்களை விற்று பணத்தை கொடுத்தனர். 1956 ல் கட்டப்பட்டது அணை. அணையில் 80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் முதல் ஆண்டு திருநெல்வேலி நான்குநேரி தாலுக்காவுக்கும், இரண்டாம் ஆண்டு தூத்துக்குடியின் சாத்தான்குளம், திருவைகுண்டம் தாலுக்காவுக்கும் என ஒழுங்கு செய்யப்பட்டது. கோடை காலத்தில் குறைவான நீர் இருப்பு தூத்துக்குடி விவசாயத்துக்கு எனப்பட்டது. அவர்கள் செய்த நிதி உதவி காரணமாக. காண்க:
8. இன்றைய நமது அரசுகள் ஏரிகளை பராமரிக்கும் லட்சணத்தை பார்ப்போமா?
1. இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
2. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா?
1. ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு.
2. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு.
3. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு.
4. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு.
5. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு.
6. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால்,
ஏரிக்கு ஒரு பிரச்சினை என்றால் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை
ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் ஏரிகளை எவ்வளவு பாதுகாக்கின்றன தெரியுமா?
1. கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணையத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
2. மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது.
3. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.
4. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது.
5. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’,
6. ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’,
7. உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’,
8. ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
1. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம்,
2. ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’,
3. இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment),
4. ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம்.
மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன.
தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது.
எந்தெந்த ஏரிகள் தெரியுமா?
ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள்.
விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா! காண்க:
9. கடலூரும் செயற்கை பேரிடர் துன்பங்களும்.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 108 கடலோர கிராமங்களுக்கும் அம்மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வரும் காட்டாறுகளின் மொத்த மழை வெள்ளமும் கடலுக்குள் செல்ல இரண்டே இரண்டு முகத்துவாரங்கள் தான் உள்ளன.
ஒன்று கெடிலம் ஆற்று முகத்துவாரம், இன்னொன்று உப்பனாற்று முகத்துவாரம்.

இந்த இரண்டு முகத்துவாரங்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தூர் வாரப்பட வேண்டும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பல கோரிக்கைகளுக்கு பின்னரும் தூர் வாரப்படவே இல்லை. கடலுக்குள் செல்ல முடியாத வெள்ள நீர் வீடுகளுக்குள். காண்க:
ஆக கடலூரின் பிரச்சினை
அலட்சிய ஆட்சியாளர்களின் பிரச்சினையே தவிர
இயற்கையின் பிரச்சினை அல்ல.
10. போரூர் ஏரியும் செயற்கைப்பேரிடரும்
சென்னை-போரூர் ஏரியின் உண்மையான பரப்பளவு 800 ஏக்கர். இன்று வெறும் 330 ஏக்கராக சுருங்கி நிற்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராமசாமி உடையாருக்கு அந்த ஏரியின் ஒரு பகுதி அத்து மீறி கொடுக்கப்பட்டது. போரூர் ஏரியின் மீது தான் மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும்.
அதனால் பாதிப்பு இன்றைய, எதிர்கால தமிழ் சந்ததிக்குத்தான்.
சேலம் பேருந்து நிலையம், காந்தி விளையாட்டு மைதானம், நாகர்கோவில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், விழுப்புரம் பேருந்து நிலையம், நீதி மன்றம், அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை உயர் நீதிமன்றக்கிளை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், இன்னும் பல எல்லாம் ஏரியை அழித்து கட்டப்பட்டவைகள் தானே. காண்க:
சென்னையில் 36 ஏரிகள், மதுரையில் 30 கண்மாய்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதே. தொல்தமிழர் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாத்து வைத்ததை நாம் நமது எதிர்கால தலைமுறைக்காக தமிழினத்துக்காக பாதுகாத்தோமா??
நமது ஆட்சியாளர்கள் இவைகளை எல்லாம் அழித்துவிட்டு அண்டை மாநிலத்தோடு சண்டை போடுவது சின்னத்தனமாகத், சிறுபிள்ளைத் தனமாகத் தெரியவில்லை ?
11. மதுரை வைகை ஆறும்
அழிக்கப்பட்ட அதன் கால்வாய், கண்மாய்ப் பாசனமும்.
மதுரை வைகை ஆறு வெறும் ஆறாக மட்டும் இல்லை 3000 ஏரிகள் மூலமாக மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உயிர் கொடுத்து வந்தது. தமிழ்நாட்டில் கடலில் கலக்காத ஆறு எனப்படுவது வைகை ஆறு மட்டுமே. வழியில் உள்ள ஏரி, கண்மாய் களையெல்லாம் நிரப்பி, இறுதியில் இராமநாதபுரம் ஏரியில் கலந்து விடும்.
பிரெடெரிக் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் 1901 ல் எழுதினார்:நீர்ப்பாசனத்தைப் பெருக்குவதென்றால் வைகையைப்போல செய்திட வேண்டும். காண்க:
கீழ் வைகை என்று மதுரையின் கிழக்கு புறத்தில் 96 கால்வாய்களையும் 400 ஏரிகளையும், நீட்சியாக 1000 குளங்களையும் வாழ்விக்கும் வைகை ஏறக்குறைய மணல் கொள்ளையால் அழிக்கப்பட்டு விட்டது.
12. பருவ மழைகளும் VS மணல் குவாரிகளும்
1. இந்தியாவில் சராசரி ஆண்டு மழை அளவு 1,170 மி.மீ.
2. கருநாடகம் 732 மி.மீ. ; ஆந்திரம் 908 மி. மீ.
3. தமிழகம்:
1. தென்மேற்குப் பருவமழை 307 மி. மீ.
2. வடகிழக்கு பருவமழை 439 மி. மீ.
3. உபரி மழை 179 மி. மீ.
ஆக தென்னிந்தியாவில் தமிழகம் தான் அதிக மழை பெறுகிறது.
ஆனால் கர்நாடகம் 1991ல் 11.20 இலட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப்பரப்பை 2015 ல் 21.71 இலட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது.
தமிழகமோ 1971ல் 28 இலட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப்பரப்பை 2014 ல் 7 இலட்சம் ஏக்கர் பாசன நிலத்தை இழந்து 21 இலட்சம் ஏக்கராக குறைந்து போய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுவும் அம்மாநிலங்களில் நம் மாநிலம் போன்று பாரம்பரிய நீர்நிலை கட்டுமான அமைப்புகள் இல்லை.
ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளில் இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள தடை விதித்திருக்கிறார்கள். 44 ஆறுகள் பாயும் கேரளாவிலும் அப்படியே. காண்க:
இன்றைய தமிழக ஆட்சி, அதிகார அமைப்புகள் பணத்திற்காக
அசுர வெறி கொண்டு எதிர்கால தமிழினத்தை படு பாதாள குழியில் தள்ளி அழிக்கும் திசையில் கொண்டு செல்கிறார்களே?
மணல் இல்லை என்றால் ஆறு இல்லை ஆறு இல்லை என்றால் குளம், ஏரி இல்லை குளம், ஏரி இல்லை என்றால் நிலத்தடி நீரும் இல்லை, கனமழை வெள்ள வடிகாலும் இல்லை.
தமிழ் முன்னோர்களுக்கு தெரிந்தது. இன்றைய மெத்தப்படித்த ஆட்சியாளனுக்கு தெரியவில்லை. தன்னுடைய வட்டம், மாவட்டம், பினாமி எல்லாம் சேர்ந்து நிலத்தை, நீரை, மணலை கபளீகரம் செய்ய வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
2004 ல் வெளியிடப்பட்ட வைகை அறிக்கை மதுரை விரகனூருக்கு கிழக்கே மணல் அள்ளப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் கால்வாய் களே இல்லை. காண்க:
என்ன ஒரு இதயத்தை சுக்கு நூறாக்கும், தமிழக அழிவை முன்னறிவிக்கும் கொடூர உண்மை.
13. சேலமும் நீர் மேலாண்மையும்
சேலம் என்பதன் தொன்மையான பெயர் சைலம்.
சைலம் என்றால் பொருள் மலைகள் சூழ்ந்த பகுதி.
1. சேலத்தின் வடக்கே சேர்வராயன் மலை. தொடர்ந்து கல்வராயன் மலை.
2. தெற்கே சருகு மலை, ஊத்து மலை, நாம மலை, கந்தகிரி மலை.
3. தவிர நகர மலை, பெருமாள் மலை, கொல்லி மலை என மலைகள் சூழ்ந்த நகரம் சேலம்.
இவை அனைத்தும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
1. சேர்வராயன் மலைகளில் இருந்து திருமணிமுத்தாறு, பொன்னையாறு, சர்பந்தா நதி.
2. கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்டா நதி, கொல்லி மலையில் இருந்து சுவேதா நதி.
திருமணிமுத்தாறு ஆறு தன் வழியில்:
1. குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கநேரி

ஏரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க்கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என 8 வாய்க்கால்கள் இருந்தன.
2. நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, சருகு மலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என 6 துணை ஆறுகள் இருந்தன.
3. மன்னார்பாளையம் வழியாய் செல்லும் திருமணிமுத்தாறு கால்வாய் மழைநீர் கன்னங்குறிச்சி புது ஏரி, மூக்கநேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, நகரமலை இஸ்மான்கான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகிய ஏரிகளை நிறைத்தது.
4. கருப்பூர் வழியாக செல்லும் கால்வாய் மழைநீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது.
5. காவிரியில் வெள்ளம் வரும் வேளையில் வெள்ளம் மற்றும் வீணாக கடலில் நீரை விடுவதற்குப் பதிலாக

தண்ணீரை சேலம், நாமக்கல் வழியாக மாற்றுப்பாதையில்விட்டு பாசன மேம்பாடு, வெள்ளத்தடுப்பு ஏற்பாடு செய்ய படத்தில் ஒரு வழிமுறை.
காரணம் ஒவ்வோர் ஆண்டும் கொள்ளிடம் வழியாக கடலுக்குள் செல்லும் குடிநீரின் அளவு 60 டி.எம்.சி. கடந்த 8 ஆண்டுகளில் வீணான குடிநீர் 400 டி.எம்.சி.
2005 ல் மட்டும் வீணான குடிநீர் 207 டி.எம்.சி. எனவே மாற்று வழி நடைமுறைப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.
5. அச்சுவான் ஏரி புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி விளையாட்டு மைதானமாகிவிட்டது.பெரும்பாலான இதர ஏரிகளும் கால்வாய்களும் அழிந்தே போய்விட்டன.
6. ஆனால் ஒரு ஆறுதல்: சேலம் மக்கள் குழு என்ற அமைப்பு
2009 ல் கன்னங்குறிச்சி மூக்கநேரி ஏரியையும்
2013 ல் அம்மாபேட்டை குமரகிரி ஏரியையும்
2014 ல் அரிசிப்பாளைய தெப்பக்குளத்தையும் தூர்வாரி புதுப்பித்தது.
மேலும் விபரமறிய காண்க:
7. ஆங்கிலேய ஆவணங்களில் கீழ்க்கண்ட விவரங்கள் காணப்படுகின்றன:
1. திருமணிமுத்தாறு பாசன வடிநிலம் 717 சதுர மைல் பரப்பு கொண்டது.
2. ஆற்றில் 25 அணைகள் கட்டப்பட்டிருந்தன.
3. 290 சங்கிலித்தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது.
4. 1889 ல் இந்த நீர்நிலைகளை மேம்படுத்த ரூபாய்.1,07,568 ஒதுக்கப்பட்டது. காண்க:
அந்நிய ஆங்கில ஆட்சியாளர்களின் இம்மண்ணின் மீது காட்டிய அக்கறை கூட
இன்றைய ஒன்றுக்கும் இலாயக்கில்லாத திராவிட ஆட்சியாளர்களிடம் இல்லையே ? ?
ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை தன்னார்வக் குழுக்களே செய்யும் நிலையில்

பல மட்டங்களிலும் (கிராம, நகர, மாவட்ட, மாநில) செயல்படாத அரசாங்கத்தையே நாம் கொண்டிருக்கிறோம் என்ற ஒரு கேடுகெட்ட அவல நிலை.
இன்றைய அரசாங்கக் கோப்புகளில் ஏதாவது இவை பற்றிய விவரங்களை காண முடியுமா. என்னவொரு அலட்சிய, ஆணவ அரசுகளை, மக்கள் மேல், இந்த மண்ணில் மேல், இந்த நாட்டின் வளர்ச்சியில் எந்தவொரு அக்கறையுமே இல்லாத அரசுகளை நாம் கொண்டிருக்கிறோம். எத்தனை கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், முதல் அமைச்சர், பல துறை அதிகாரிகள்...
ஆனால் வளர்ச்சியும் இல்லாமல், இருப்பவற்றை காக்கவும் செய்யாமல், அழிப்பது அதுவும்
பணத்துக்காக நாட்டை, ஆறுகளை, ஏரிகளை,
விலை பேசும் இவர்களுக்கு ஒரே தீர்வு
1789 ல் பிரெஞ்ச் மக்கள் எடுத்த முடிவுதான்
சரியாக இருக்கும்:
கில்லட்டின் எந்திரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக