சனி, 22 ஏப்ரல், 2017

காவேரி வாய்க்கால் மேலாண்மை சோழர் அறிவியல் நீர்மேலாண்மை வேளாண்மை

aathi tamil aathi1956@gmail.com

14/8/15
பெறுநர்: எனக்கு
தன்னிகரில்லா தமிழன்
காவேரி ஆறு கல்லணையை தாண்டி பூம்புகாரில் கலக்கும் வரை ஒரு அணைக்கட்டு
கூட கிடையாது, ஆனால் தண்ணீர் பெருமளவு உபரியாகாமல் பாசனத்திற்கு
பயன்பட்டது. காரணம் என்ன தெரியுமா ?
தஞ்சை பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அமைப்பே காரணம். தலைப்பு
வாய்க்கால், வடிவாய்க்கால் என ஒவ்வொரு கிராமத்திற்கும் பாசன வாய்க்கால்
தடையுராமல் நீர் விளைச்சலுக்கு பாயும். சொல்லப்போனால் நீர் வரத்து
ஆரம்பித்தால் தஞ்சை பகுதியில் பத்து அடியில் நிலத்தடி நீர் சுரக்கும்
அந்த அளவுக்கு பரவலாக நீர் பாயும். குளம், குட்டை, ஏரி என நிறைந்து கோடை
விளைச்சலுக்கும் பயன்படும்.
சிக்கலான வாய்க்கால் அமைப்பால் தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்ல
இயலாது, பூம்புகாரில் கலக்கும் காவேரிக்கு ஆடு தாண்டும் காவேரி என்றொரு
பெயரும் உண்டு. அந்த அளவுக்கு நீர் அங்கு குறைவாகவே போய் சேரும். இந்த
வாய்க்கால் அமைப்பை உருவாக்கிவர்கள் சோழர்கள் ஆவர்.
இன்றோ திறந்து விடும் கொஞ்சநஞ்ச தண்ணீரும் அதிக அளவு கடலிலேயே கலந்து
விடுகிறது. மேலும் வாய்க்கால்கள் சாலைகளாகவும், குளங்கள் செயற்கை நீரில்
மீன்வளர்ப்பு பண்ணையாகவும், மணல் ஆறுகள் சிமெண்ட் ஆறுகளாகவும், வயல்கள்
வீடுகளாகவும் அதற்குமேல் மீத்தேன் எரிவாயு திட்டம் என்று குட்டிசுவர்
ஆகிக்கொண்டிருக்
கிறது சோழர்களின் தேசம்.
# தமிழர்_கதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக