ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பாரதியார் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்ப்பற்று பார்ப்பனர்

aathi tamil aathi1956@gmail.com

11/12/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்
11.12.1882
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்:
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும்
அறிந்து
வளர்மொழி வாழியவே!
-சுப்பிரமணிய பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக