ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

செ வெள்ளம் அரசு பொறுப்பு முன்னறிவிப்பு இல்லாமல் அணை திறப்பு வானிலை முன்னெச்சரிக்கை அலட்சியம் ஜெ. ஜெயலலிதா அலட்சியம் அலட்சியப்போக்கு மெத்தனம்

aathi tamil aathi1956@gmail.com

8/12/15
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmi Dhananjeyan
திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன், சென்னையில் ஏற்பட்ட பேரழிவு 36
மணிநேரம் தொடர்ச்சியாக பெய்த மழையால் அல்ல. மழையால் அல்ல. மழையால் அல்ல.
இந்த அழிவு செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளை அரசாங்கம்
முன்னறிவிப்பின்றி திறந்ததால் ஏற்பட்ட அழிவு.
மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பெய்தது என்பதும்---
பஞ்சாங்கத்தில் போட்டிருந்தது, பெரிய சேதம் இந்த ஆண்டு வரும், அது நமக்கு
முன்னரே விதிக்கப்பட்டது என்பதும்--- பி.பி..சி. யில் 15 நாள் முன்பே
சொன்னான், சென்னை பெருமழையை சந்திக்கும் , அதுதான் நடந்தது என்பதும்---
இது பருவ நிலை மாற்றம், விஞ்ஞானிகள் சொல்லி வரும் எல்-நினோவின் தோற்றம்
என்பதும்--- திடீரென ஒரு இஸ்ரோ விஞ்ஞானி பத்திரிக்கையாளர்களை கூட்டி,
நாங்கள் மூன்று மாதம் முன்னரே எச்சரித்திருந்தோம், அரசு அதை கவனத்தில்
கொள்ளவில்லை என்பதும் ---- கவனத்தில் கொள்ளுங்கள், இது எல்லாம், நடந்த
உண்மைகளை மறைக்க எல்லோருமாக சேர்ந்து நடத்தும் ஒரு நாடகம்.
இதை விட பெரிய மழை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். 2 இரவு, 1 பகல் என
36 மணி நேர மழை என்பதெல்லாம் நமக்கு ஒரு மழையே அல்ல. ஐப்பசி, புரட்டாசி
மாதங்களில் பிடித்துக் கொள்ளும் மழை பிசுபிசு என்று 10 நாள், 20 நாள்
பெய்த வரலாறுகள் எல்லாம் நம்மிடம் உண்டு. தீபாவளிக்கு முன்னும் பின்னும்
மூன்று முறை நான்கு முறை பெய்த மழைகளை நாம் பார்த்து இருக்கிறோம். ஒரே
பருவத்தில் மூன்று, நான்கு புயல்களை சந்தித்து இருக்கிறோம்.
சூறைக்காற்று, இடி மின்னல், பேய் மழை எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால்
இந்த முறை புயல் இல்லை, இனி மின்னல் இல்லை, பெருமழை இல்லை. ஆனால்
அப்போதெல்லாம் ஏற்படாத சேதம் இப்போது ஏற்பட்டது எப்படி ?
தீபாவளி நேரத்தில் முதல் மழை பெய்து முடிந்து இருந்தது. அது நிதானமான
ஆனால் திடமாக பெய்த மழை தான். அப்படியொன்றும் கனமழை இல்லை. அந்த முதல்
மழைக்கே எல்லா ஆறுகளும், ஏரிகளும், குளம், குட்டிகளும் நிரம்பி விட்டன.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இருந்தது. போக்குவரத்து பாதை
சுரங்கங்களில் நிரம்பி விட்டன. அந்த தண்ணீர் மெல்ல வடிந்து விட்டது.
மற்றும் அகற்றப்பட்டு விட்டது. சில இடங்கள் மட்டும் தண்ணீர் தேங்கி
இருந்தது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் சமூக விரோதிகள் திட்டமிட்டு
ஏரிகளை உடைத்ததால் ஏற்பட்டவை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா பக்கம்
போய் விட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பி இருந்தது. பூண்டி ஏரியும்
புழல் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி விட்டது. ஆகவே சென்னையில் இந்த ஆண்டு
குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று முதல்வருக்கு செய்தி
சொல்லப்பட்டது. இந்த நேரத்தில் கவனிக்கவேண்டும், முதல் மழையை அழகாக
சமாளித்த பெருமையில் முதல்வர் ஜெயலலிதா உடனடியாக ஒரு அறிக்கை விட்டார்,
'இனி சென்னை வாழ் மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்' . இந்த
பெருமையில் இருந்து தொடங்கியது நமது பேரழிவு.
இது மழைக்காலம். அடுத்து அடுத்து மழை வரும் என்பதை அவர்கள் நினைவில்
கொள்ளவே இல்லை. ஆனால் அது வந்து விட்டது. 36 மணி நேர மழை. திங்கள் இரவு
தொடங்கி, செவ்வாய் பகல் மற்றும் இரவு பெய்தது. இதுவும் அப்படியொன்றும்
கனமழை அல்ல. ஆனால் இந்த மழை நீரை சேமிக்க எங்கும் இடமில்லை. முதல்
மழையிலேயே ஏரிகள் தம் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் இந்த மழையை அவற்றால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
செவ்வாய்கிழமை சாயந்தரம் போல செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உடையும் நிலை
ஏற்பட்டது. அரசு தவித்துப் போனது. மொத்தமாக உடைந்தால் சென்னை முழுவதும்
அடித்துக் கொண்டு போய் விடும். ஆகவே ஏரியை திறந்து விடுவதென முடிவு
செய்யப்பட்டது. பெரிய அழிவினைத் தடுக்க சிறிய அழிவு ஏற்பட்டால்
பரவாயில்லை என்று பேசி முடிவெடுத்தார்கள். இதை எதிர்க்கட்சி பெரிய
பிரச்சினை ஆக்கும் என்று தெரிந்து அவசர அவசரமாக அங்கும் பேசி சம்மதம்
வாங்கினார்கள். ' நாமும் மொத்தமாக போய் விடலாமா அல்லது நாம் தப்பித்துக்
கொண்டு மக்களை ஓரளவு பாதிப்புக்கு உள்ளாக்கலாமா ? ' கருணாநிதிக்கும்
ஜெயலலிதாவுக்கும் உள்ளுக்குள் நல்ல புரிதல் உண்டு என்பதை விளங்கிக்
கொண்டால் இதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஏரியைத் திறந்து
விட்டார்கள். அழிவு தொடங்கியது.
இந்த அழிவைத் எப்படித் தவிர்த்திருக்கலாம். ஆண்டின் கடைசி மூன்று
மாதங்கள் நமக்கு பருவ மழை காலம். தொடர்ச்சியாக அடுத்து அடுத்து புயல்
வரும், மழை வரும் என்பது கூட தெரியாமல் முதல் மழையிலேயே அணையை நிரப்பி
வைத்துக் கொண்டார்கள். இது முதல் தவறு. அப்போதே 5000. 5000 கனஅடி நீரை
வெளிய்ற்றி கொள்ளளவை பாதியாக்கி வைத்திருந்தால், இரண்டாம் மழைநீரை அணை
ஏற்றிருக்கும். இப்படி மொத்தமாக 29000 கனஅடி நீரை மொத்தமாக திறக்க
வேண்டிய நிர்கதி ஏற்பட்டிருக்காது. இது அரசு செய்த மிகப்பெரிய நிர்வாகத்
தவறு. இரண்டாவது தவறு, மின்சாரம் இல்லாத மாலை நேரம் முடிவு செய்து,
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் நீரை வெளியேற்றியது. முனனதாக
முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை காலைவேளையிலேயே நீரை வெளிய்ற்றி இருந்தால்
மக்கள் தப்பித்து வெளியில் ஓடி இருப்பார்கள். இருட்டில் மொட்டை
மாடிகளுக்கு ஏறி இருக்க மாட்டார்கள். மழையில் கிடந்து ஊறி இருக்க
மாட்டார்கள். மூன்றாவது தவறு, முன்னெச்சரிகை செய்யாதது. மின்சாரம் இல்லை,
தொலைக்காட்சி இல்லை, மின்சாரம் இருந்த இடங்களில் கூட தொலைக்காட்சிகளில்
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக எந்த அறிவிப்பும் இல்லை. முதல்
மழையின்போது ஏரி திறக்கப்பட்டதாக அறிவிப்பு செய்தார்கள். இரண்டாம் முறை
எதுவும் இல்லை. திறந்து விடுவதற்கு முன் குறைந்த பட்சம் அந்தந்த
பகுதிகளிலாவது அதிகாரிகள் எச்சரிக்கை செய்து இருந்தால் மக்கள் அந்த
எட்டுமணி இரவு நேரத்திலாவது வெளியேறி இருப்பார்கள். எப்படியோ பொங்கல்
என்பது போல திறந்து விட்டுவிட்டார்கள்.
தண்ணீரை சேமிக்க ஆசைப்பட்டு மக்களை தண்ணீரில் தவிக்க விட்டு விட்டார்கள்.
மழையால் வந்த பாதிப்பு இல்லை இது. ஏரி திறக்கப்பட்டதால் விளைந்த அழிவு
இது. ஏரி மூடப்பட்டதும் மறுநாள் சில இடங்களில் தவிர பல இடங்களில் தண்ணீர்
எங்கும் இல்லை. ஏரி திறக்கப்படாதிருந்தால் இந்த பல இடங்கள்
பாதிக்கப்பட்டு இருக்கவே இருக்காது. அரசின் தவறான முடிவு. தவறான முடிவால்
ஏற்பட்ட விளைவு. இதற்கு முழு பொறுப்பும் அரசே... மழை மக்களை
அழிக்கவில்லை, ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளம் தான் இத்தனை பெரிய
சேதத்தை ஏற்படுத்தியது. 3 மாத மழை, எல்-நினோ, பருவ நிலை மாற்றம்,
பஞ்சாங்கக் குறிப்பு, பி.பி.சி. அறிவிப்பு என்பதெல்லாம் அரசின் தவறை
மறைக்க திட்டமிட்டு பரப்பப்படும் தகவல்களே. நடந்த பேரழிவுக்கு தமிழக அரசு
தான் காரணம். அரசுக்கு தகவல் தரும் திறமையற்ற அதிகாரிகள் தான் காரணம்.
கருணாநிதி அரசு இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும். இந்த
ஆட்சியாளர்கள் நீரைக் கண்டார்களா, நிலத்தைக் கண்டார்களா, மக்களைக்
கண்டார்களா, மக்கள் வயிற்றைக் கண்டார்களா ? ஆட்சி, பதவி, அதிகாரம், பணம்
இவைதான் இவர்களுக்கு !
வேண்டும் இங்கே நம்மவர்களின் ஆட்சி.. நம் மக்களின் ஆட்சி... இவர்களை
நம்பினால் இதுதான் கதி அதோகதி... இவர்களை வீழ்த்தாமல் தமிழர்களுக்கு
எழுச்சி இல்லை. நம் வீடு வாசல்களை மூழ்க அடித்து விட்டு, இன்று பால்
பாக்கெட்டும், புளிய சாதமும். படுக்க பாயும், போர்வையும் தந்து நம்மை
ஆசுவாசம் செய்கிறார்கள். இந்த திராவிடப் பேய்களை இம்மண்ணிலிருந்து
விரட்டாமல் நமக்கு விடிவு இல்லை. தமிழினத்தின் பேரழிவு திராவிடம் தான் !
# நாம்_தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக