திங்கள், 3 ஏப்ரல், 2017

ஈவேரா முரண்பாடுகள் இந்தி பள்ளி நடத்திய தகவல்

aathi tamil aathi1956@gmail.com

22/11/15
பெறுநர்: எனக்கு
முரண்பாட்டின் மொத்த உருவம் தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா.
ஈ.வெ.ரா. முரண்பாட்டின் மொத்த உருவம். நாள் ஒரு மேனியும், பொழுதொரு
வண்ணமுமாக தன் என்னத்தை மாற்றி தமிழ் இனத்தை வீழ்த்திய தமிழரின் இனப்பகை.
1916இல் இருந்து 1925 வரை தமிழ்நாட்டுக் காங்கிரசு கட்சியின்
தலைவராகவும், செயலாளராகவும் செயல்பட்ட ஈ.வெ.ரா.,
“காந்தி வாழ்க, காங்கிரசு வாழ்க!” என முழங்கிவந்த ஈ.வெ.ரா., அக்
காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி “காந்தி ஒழிக, காங்கிரசு ஒழிக!” என்று
பேசவில்லையா? பிறகு காங்கிரசு கட்சிக்கு வாக்கு கேட்கவில்லையா?
தென்னிந்திய இந்திப் பிரச்சாரச் சபையின் ஆணைப்படி 15 பேர்களுக்கு உண்டு
உறைவிடப் பள்ளி நடத்தி இந்தி ஆசிரியர்களை உருவாக்குமாறு காங்கிரசுக்
கட்சி ஆணையிட்டபோது தம் சொந்தப் பணத்தில் 30 பேர்களுக்குத் தம்முடைய
வீட்டிலேயே இந்திப் பள்ளியை நடத்திய ஈ.வெ.ரா., பின்னர் இந்தியை
எதிர்க்கவில்லையா?
1965 இந்தி எதிர்ப்பின் போது இந்தி எதிர்ப்பு போராளிகளை காலிகள் என்றும்,
சமூக விரோதிகள் என்றும் அவர்களைச் சுட்டுக்கொள்ளுங்கள் என்றும் ஈ.வெ.ரா.
பேசவில்லையா?
காங்கிரசில் இருந்த போது கதர் ஆடையை விற்ற ஈ.வெ.ரா., பின்னர் கதர்,
கைத்தறி ஆடைகளைத் தடை செய்ய வேண்டுமென்று பேசவில்லையா? கள்ளுக்கடை
மறியலில் ஈடுபட்டபோது, தென்னை மரம் கள் இறக்க மட்டுமே பயன்படும் என்று
கருதி 500 தென்னைமரங்களை வெட்டித் தள்ளிய ஈ.வெ.ரா., பின்னாளில்
மதுவிலக்கு கூடாது என்றும், மது குடிப்பது சுறுசுறுப்பைத் தரும் என்றும்
பேசவில்லையா?
தமது 49 ஆவது அகவையில் ஈசன் அருள், எல்லாம் வல்ல இறைவன், விண்ணுலகம்,
ஆன்மா என்றெல்லாம் பேசவும் எழுதவும் செய்துவிட்டு, பின்னாளில் தமக்கு
விவரம் தெரிந்த நாள் முதல் கடவுள் மறுப்பைக் கடைப்பிடித்து வருவதாகக்
கூறவில்லையா?
இப்படிபட்ட அரை வேக்காடு ஈ.வெ.ரா., தமிழரை திராவிடராக திரித்த கொள்கை
தமிழர்களுக்குத் தேவையா?
ஆகையால் தமிழர்களே! தமிழர்களே! தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா.வின்
முரண்பாடுகளை அறிந்துக்கொள்வோம்! புரந்தள்ளுவோம்!
நாம் தமிழர் என்போம்!
நம்நாடு தமிழ்நாடு என்போம்!
இறையாண்மைப் பெற்ற தமிழ்த் தேசியம் படைக்க அணிசேருவோம்! வாருங்கள்
தமிழர்களே! வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக