|
6/1/16
| |||
விதை
வைணவ பரையரும் திருமழிசை ஆழ்வாரும்:-
============================== =
பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் என்பவர் பரையர் சமுதாயத்தை சேர்ந்தவராவார்.
பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு
வாக்கில் பிறந்தவர் திருமழிசை பிரான், "நான்முகன் திருவந்தாதி" என்னும்
நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் "திருச்சந்த விருத்தம்" என்னும் 120
விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.
இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத்
தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம்,
நாத்திகம்(கடவுள் மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார்.
சைவசமயத்தைச் சார்ந்திருக்கும
்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார்.
சைவசமய சிவவாக்கியார் தான் பின்னாளில் திருமழிசையாழ்வார் என
அழைக்கப்பட்டார் எனும் கருத்தும் நிலவுகிறது. அதற்கு சான்றாக இவருடைய
பாடல்கள் மட்டும் திவ்விய பிரபந்தத்தில் மற்றைய ஆழ்வார்களின்
பாடல்களிலிருந்த
ு வேறுபடும் வகையில் சித்தர்வகை பாடல்களாய் பரிபாஷை எனப்படும்
மறைப்பொருள் நிறைந்தனவாக விளங்குகிறது.
மங்களாசாசனம் செய்த கோயில்கள்:-
------------------------------ ---------------
1. அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்
2. அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி
3. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
4. அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை
5. அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்
6. அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குட
ி, திருநெல்வேலி
7. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்
8. அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்
9. அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை
10. அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
11. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா
12. அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி.
வைணவர்கள் சங்கு மற்றும் சக்கரத்தை தங்கள் உடலில் பச்சை குத்தி
இருந்தனர். இது தங்களை வைணவர்கள் என்று காட்டிக்கொள்ள பயன்படுத்திக்கொண்ட
ஒரு அடையாளம்.
திருமழிசை ஆழ்வாரின் மூலமாக பரையர்கள் முனிவர்களாகவும் பல்வேறு சமயங்களை
ஆராய்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
வைணவ பரையரும் திருமழிசை ஆழ்வாரும்:-
==============================
பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் என்பவர் பரையர் சமுதாயத்தை சேர்ந்தவராவார்.
பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு
வாக்கில் பிறந்தவர் திருமழிசை பிரான், "நான்முகன் திருவந்தாதி" என்னும்
நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் "திருச்சந்த விருத்தம்" என்னும் 120
விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.
இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத்
தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம்,
நாத்திகம்(கடவுள் மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார்.
சைவசமயத்தைச் சார்ந்திருக்கும
்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார்.
சைவசமய சிவவாக்கியார் தான் பின்னாளில் திருமழிசையாழ்வார் என
அழைக்கப்பட்டார் எனும் கருத்தும் நிலவுகிறது. அதற்கு சான்றாக இவருடைய
பாடல்கள் மட்டும் திவ்விய பிரபந்தத்தில் மற்றைய ஆழ்வார்களின்
பாடல்களிலிருந்த
ு வேறுபடும் வகையில் சித்தர்வகை பாடல்களாய் பரிபாஷை எனப்படும்
மறைப்பொருள் நிறைந்தனவாக விளங்குகிறது.
மங்களாசாசனம் செய்த கோயில்கள்:-
------------------------------
1. அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்
2. அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி
3. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
4. அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை
5. அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்
6. அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குட
ி, திருநெல்வேலி
7. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்
8. அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்
9. அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை
10. அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
11. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா
12. அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி.
வைணவர்கள் சங்கு மற்றும் சக்கரத்தை தங்கள் உடலில் பச்சை குத்தி
இருந்தனர். இது தங்களை வைணவர்கள் என்று காட்டிக்கொள்ள பயன்படுத்திக்கொண்ட
ஒரு அடையாளம்.
திருமழிசை ஆழ்வாரின் மூலமாக பரையர்கள் முனிவர்களாகவும் பல்வேறு சமயங்களை
ஆராய்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக