|
17/12/15
| |||
Raja Thangasamy
12
சொக்கம்பட்டி 'வேட்டை'க்குப் போன நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி
கோட்டைக்குள் ஓட்டையைப் போட்டு புல்லார்ட்டன் ஆட்டையைப் போட்டதை அடுத்து
ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் எடுத்த ஓட்டம் சிவகிரிப் பாளையத்தில்தான்
வந்து நின்றது.
சிவகிரிப்பாளையத்திற்கு அதிகாரியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்
பட்டிருந்த கேப்டன் கிரகாம்பெல் என்பவன் படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
எனவே சிவகிரிக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது. 'எதிரியின் எதிரி நன்பன்'
எனும் சித்தாந்தத்திற்கு ஏற்ப டச்சுக்காரர்கள் சிவகிரிப் பாளையத்திற்கு
நிறைய அளவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலிய உதவிகளை அளித்திருந்தனர்.
அந்தச் சிவகிரிப் பாளையத்தில்தான் ஜெகவீரபாண்டியன் அடைக்கலமாகி
இருந்தான்.
ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் மீது அப்படி என்ன பாசமோ புல்லார்டானுக்கு.
சிவகிரிப் பாளையத்தையும் முற்றுகை இட்டான். பூவோடு சேர்ந்த நாரும் நாறிய
கதையாக ஜெகவீர பாண்டியனுடன் சேர்ந்து சிவகிரிப் பாளையக்காரர்களும்
சிவகிரியை கைவிட்டு விட்டு ஓடி கோம்பை வந்தனர்.
கோம்பையில் ஒரு பெரிய காடு. காட்டைச் சுற்றி முள்வேலி. புல்லார்ட்டன்
விடவில்லை. அங்கும் முற்றுகையிட்டான். பாளையக்காரர்கள் முதலில்
சமாதானமாகப் போவதற்கு முயற்சி எடுத்தனர். சமாதானப் புறாக்களை நெய்போட்டு
பொன்னிறமாக நன்கு வறுத்துச் சாப்பிட்டான் புல்லார்ட்டன். போர் வெடித்தது.
கடுமையான தாக்குதலுக்குப் பிறகு காட்டின் பெரும்பகுதி புல்லார்ட்டன்
வசமானது. அந்தச் சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தகவல் வந்தது.
திடீரென தின்டுக்கல் பகுதியில் நிகழ்ந்த மைசூர் மன்னனின் படையெடுப்பை
சமாளிக்க வேண்டியிருப்பதால் உடனே திரும்பி வருமாறு ஆங்கிலேயர் உத்தரவு
அனுப்பியிருந்தனர்.
கதைமுடிக்கும் நேரத்திலா இப்படி ஒரு உத்தரவு வரவேண்டும்? கம்பெனியின்
உத்தரவை மீற முடியாது. வேறு வழியில்லை. சிவகிரியானையும்
ஜெகவீரபாண்டியனையும் நேரில் அழைத்தான். "நீங்கள் இருவரும் உடனே பனிந்து
கப்பத்தொகை முழுவதையும் கட்ட வேண்டும். அப்படிக் கட்டாவிட்டால் நீங்கள்
எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பேன் " என்றான். இருவருக்கும் அந்த
டீலிங் பிடித்திருந்தது.
ஒவ்வொருவரும் தத்தமது கப்பப் பாக்கியாக முப்பதாயிரம் சக்கரங்களை
செலுத்தினர். பதினைந்தாயிரம் வராகன்களைக் கொடுத்து பழைய கோட்டைகளைத்
திரும்பப் பெற்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கைது செய்து வைக்கப்
பட்டிருந்த ஜெகவீர பாண்டியனின் மகளும் உறவினரும் விடுவிக்கப் பட்டனர்.
அன்றுமுதல் ஆங்கிலேயரின் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனான் ஜெகவீர பாண்டிய
கட்டப்பொம்மன். அவ்வப்போது அவர்கள் காலால் இட்ட வேலைகளை தன் தலையால்
செய்து காட்டி விசுவாசத்தை மெருகேற்றிக் கொண்டான். டச்சுக்காரனை நம்பி
யார் தெருத்தெருவாக ஓடி ஒளிவது? போதுமடா சாமி!
அதாவது, அவனின் விசுவாசம் எத்தகையது தெரியுமா? மீன்டும் ஒருமுறை
சிவகிரிப் பாளையத்திற்கும் ஆங்கிலேயருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆங்கிலேயர் சிவகிரி மீது படையெடுத்தனர். ஜெகவீர பாண்டியனும் சேர்ந்து
கொண்டு சிவகிரி மீது படையெடுத்தான். சிவகிரி பாளையம் ஜெகவீர
பாண்டியனுக்கு எத்தகைய உதவிகளை செய்து வந்தது என்பதை ஏற்கனவே அறிவோம்.
இத்தகைய செய் நன்றி மறவா பேராண்மை கொண்ட பேராளனை வரலாற்றில் எங்கும் காண
இயலாது!
ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மனின் அலும்பு நாளுக்கு நாள் கூடியது.
ஆங்கிலேயரை எதிர்க்கும் பாளையங்களை எல்லாம் தாமே முன்னின்று
எதிர்ப்பதாகக் கூறி, மிதிவண்டி இடைவெளியில் பக்கத்துப் பாளையங்களைக்
கொள்ளையடிக்கத் துவங்கினான்.
அவனின் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சம்பவம்
அருங்குளம், சுப்லாபுரக் கொலை, கொள்ளை! இரண்டு கிராமங்களையும் சூரையாடி
தன் வசப்படுத்திக் கொண்டான். இந்த இரண்டு கிராமங்களும்
எட்டயபுரத்துக்குச் சொந்தமானது.
எட்டயபுரத்தான் ஆங்கிலேயரிடம் முறையிட்டுப் பார்த்தான். ஆங்கிலேயரின்
அல்லக்கையாக மாறியிருந்த ஜெகவீர பாண்டியனை அவர்கள் கண்டிக்க
முன்வரவில்லை. கப்பத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறான். தவிர
கப்பத்தொகை தராத பாளையங்களிடம் இருந்து அவனே வசூலித்துக் கொடுக்கிறான்.
வீனாக கண்டித்து ஏன் அவன் உற்சாகத்தைக் குறைக்க வேண்டும்? தவிர, நாம்
வந்தது வரிவசூலுக்காக. நீதி நேர்மையை நெட்டி நிமிர்த்த அல்ல. நோக்கம்தான்
பெரிது.
ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மனுக்
கு எட்டயபுரத்தானிடம் ஏற்பட்ட அந்த பகை காலங்காலமாக தொடர்ந்து அவன்மகன்
வீரபாண்டிய கட்டப்பொம்மன் கயத்தாறு புளியமரத்தில் தொங்க வைப்பதற்கு
பேருதவி புரிந்தது!
1790 பிப்ரவரி 2ல் ஜெகவீரபாண்டியன் காலமானான். அப்போது ஆங்கிலேய அரசு ஒரு
அனுதாபச் செய்தி வெளியிட்டது. அது என்ன தெரியுமா?
"ஆங்கில ஆட்சி ஒரு விசுவாசமுள்ள ஊழியரை இழந்து நிற்கிறது!". இதுதான் அந்தச் செய்தி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக