|
14/11/15
![]() | ![]() ![]() | ||
சந்தோஷ் கதிர்வேலன் என்பவர் Prakash Smart மற்றும் 35 பேர் ஆகியோருடன்.
விரிசல் இல்லாத பூமியாய்
கரிசல் காடும் மாறிப்போக
மீண்டும் பயிரிட்டுள்ளேன்
மிளகாய்த் தோட்டம்!
ஊடு பயிராக வெங்காயம் வெண்டையும்...
தக்காளி கத்தரியும்...
மேடுகளில் மல்லிச்செடியும்...
ஆங்காங்கே பந்துப்பூவும்...
அடடே...
வயலே... மணக்கிறது!
நான் இப்போது
சொர்கத்தில் நின்றுகொண்டிருக
்கின்றேன்!
எதிர்வயலில் பெரியம்மா
குண்டு மிளகாயும்
குறுக்கே பாரெடுத்து
பாதிப் பருத்தியும் பயிரிட்டுள்ளார்!
வரப்போரங்களில் அழகாய் வளர்கிறது
அகத்திக் கீரையும் அவரைச்செடியும்!
ஒத்திக்கு வாங்கிய
அத்தை வயலில்
விளைந்திருக்கும் நெல்லெல்லாம்
அத்தை மகளைப்போலவே
அவ்வளவு அழகு!
அழகிமுன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்...
ஒவ்வொரு பயிரிதழும்
உருக்கமாய் சொல்கிறது...
" என் மரணத்தில்தான்
உன்னை வாழவைக்கின்றேன்
என்னை மறந்துவிடாதே என்று"
கண்மாயியிலிருந்து பிறக்கும் அலையோசை...
சண்டைக்கார ஐயாவின் சாடைமாடைப் பார்வை...
தரிசு நிலங்களில் ஆடுமாடுகள் மேய
அதன்மீது ஈ பிடித்து தின்றுகொண்டிருக்கிறது
காகமும் கரிச்சான் குருவியும்!
கரையோரம் விளைந்திருக்கும் அதலைக்காய்
வேம்புகளில் படர்ந்திருக்கும் பீக்கங்காய்
வாகையில் விலையில்லா வீடமைத்த சுரைக்காய்
இவைகளில் ஏதேனும் ஒன்றுதான் இரவிற்கு சமையல்!
இப்போது வீட்டிற்கு சென்று கொண்டுள்ளேன்...
அழகான அமைதி...
நெற்பயிர்கள் காற்றில் அசையும் ஓசை!
நீர் தேக்கங்களில் கொக்கும் நாரையும்
ஏதோ பேசிக்கொண்டிருகிறது!
இப்பொது நான் சென்றுகொண்டிருக்கும் வயல்
தண்ணியில்லாமல் என்ன செய்வதென்று
பொம்மி சித்தப்பா விற்றுவிட்டுப் போனது!
நான் இதில் விளைந்திருக்கும் நெல்லுக்கெல்லாம்
அண்ணன் முறையாவேன்!
மகாலட்சுமியாய் தோற்றம்!
எல்லா தங்கைகளும் என்னை
நலம் விசாரிக்கின்றார்கள்!
வீடு வந்துவிட்டேன்!
வீட்டின் கொல்லைப்புறமும் சிறு விவசாயம்!
இருக்குமிடமெல்லாம் ஏதேனும் ஒரு பயிர்!
இதோ வைக்கோல் போர் அருகே பாகற்காய் பந்தல்!
அதோ முருங்கை மரம் அருகே பூசணிக்கொடி!
[][][][][][][][[][]
செவிகளில் அலைபேசி ஒலி!
தூக்கம் கலைந்தது!
எங்கே என் சொர்க்கம்?
எங்கே என் தங்கைகள்?
எல்லாம் கனவுகளா!
யார் இந்த அலைபேசியில்!
என் விவசாய கனவுகளைக்கூட
இந்த தொழில்நுட்பம் கலைத்துவிட்டதே!
எழுந்து பார்கின்றேன்...
அலைபேசியில் அம்மா பேசுகின்றாள்...
என்ன அம்மா?
" தம்பி... ஊரில் மழையில்லை!
போன மழைக்கு நட்ட மிளகாய்
வெயிலில் வாடி கருகி செத்துக்கிட்டு இருக்கு!
எல்லைப் புன்செய்யில் நட்ட நெல்லுக்கு
களை எடுத்ததோட கிடக்குது
அதுவும் சாவியா போயிடும்போல...
அத்தைவயல் பொம்மி வயல் ரெண்டும்
கருகிப்போச்சு...
இனி மழை வந்தாலும் பிழைக்காது!
காவிரி குடிநீர் வேற மூணு நாளா வரல...
மாட்டுக்கு தண்ணி இல்லாம
நாறிப்போன குளத்துநீரத்தான் ஊத்திட்டு இருக்றேன்!
என்னப்பா பண்றது?
கொஞ்சம் அமைதியாய்...
கனவுகளை அசைபோட்டபடி...
நான் கூறியது;
" போராடனும்! புரட்சி செய்யணும்!
அதிகார வர்க்க வாழ்க்கைய கனவாக்கணும்!!
எளிய மக்களோட கனவுகளை நினைவாக்கணும்!!!
# இனி என் போராட்ட களத்தில் என் குடும்பமும்!
- ஏனாதி பூங்கதிர்வேல்
விரிசல் இல்லாத பூமியாய்
கரிசல் காடும் மாறிப்போக
மீண்டும் பயிரிட்டுள்ளேன்
மிளகாய்த் தோட்டம்!
ஊடு பயிராக வெங்காயம் வெண்டையும்...
தக்காளி கத்தரியும்...
மேடுகளில் மல்லிச்செடியும்...
ஆங்காங்கே பந்துப்பூவும்...
அடடே...
வயலே... மணக்கிறது!
நான் இப்போது
சொர்கத்தில் நின்றுகொண்டிருக
்கின்றேன்!
எதிர்வயலில் பெரியம்மா
குண்டு மிளகாயும்
குறுக்கே பாரெடுத்து
பாதிப் பருத்தியும் பயிரிட்டுள்ளார்!
வரப்போரங்களில் அழகாய் வளர்கிறது
அகத்திக் கீரையும் அவரைச்செடியும்!
ஒத்திக்கு வாங்கிய
அத்தை வயலில்
விளைந்திருக்கும் நெல்லெல்லாம்
அத்தை மகளைப்போலவே
அவ்வளவு அழகு!
அழகிமுன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்...
ஒவ்வொரு பயிரிதழும்
உருக்கமாய் சொல்கிறது...
" என் மரணத்தில்தான்
உன்னை வாழவைக்கின்றேன்
என்னை மறந்துவிடாதே என்று"
கண்மாயியிலிருந்து பிறக்கும் அலையோசை...
சண்டைக்கார ஐயாவின் சாடைமாடைப் பார்வை...
தரிசு நிலங்களில் ஆடுமாடுகள் மேய
அதன்மீது ஈ பிடித்து தின்றுகொண்டிருக்கிறது
காகமும் கரிச்சான் குருவியும்!
கரையோரம் விளைந்திருக்கும் அதலைக்காய்
வேம்புகளில் படர்ந்திருக்கும் பீக்கங்காய்
வாகையில் விலையில்லா வீடமைத்த சுரைக்காய்
இவைகளில் ஏதேனும் ஒன்றுதான் இரவிற்கு சமையல்!
இப்போது வீட்டிற்கு சென்று கொண்டுள்ளேன்...
அழகான அமைதி...
நெற்பயிர்கள் காற்றில் அசையும் ஓசை!
நீர் தேக்கங்களில் கொக்கும் நாரையும்
ஏதோ பேசிக்கொண்டிருகிறது!
இப்பொது நான் சென்றுகொண்டிருக்கும் வயல்
தண்ணியில்லாமல் என்ன செய்வதென்று
பொம்மி சித்தப்பா விற்றுவிட்டுப் போனது!
நான் இதில் விளைந்திருக்கும் நெல்லுக்கெல்லாம்
அண்ணன் முறையாவேன்!
மகாலட்சுமியாய் தோற்றம்!
எல்லா தங்கைகளும் என்னை
நலம் விசாரிக்கின்றார்கள்!
வீடு வந்துவிட்டேன்!
வீட்டின் கொல்லைப்புறமும் சிறு விவசாயம்!
இருக்குமிடமெல்லாம் ஏதேனும் ஒரு பயிர்!
இதோ வைக்கோல் போர் அருகே பாகற்காய் பந்தல்!
அதோ முருங்கை மரம் அருகே பூசணிக்கொடி!
[][][][][][][][[][]
செவிகளில் அலைபேசி ஒலி!
தூக்கம் கலைந்தது!
எங்கே என் சொர்க்கம்?
எங்கே என் தங்கைகள்?
எல்லாம் கனவுகளா!
யார் இந்த அலைபேசியில்!
என் விவசாய கனவுகளைக்கூட
இந்த தொழில்நுட்பம் கலைத்துவிட்டதே!
எழுந்து பார்கின்றேன்...
அலைபேசியில் அம்மா பேசுகின்றாள்...
என்ன அம்மா?
" தம்பி... ஊரில் மழையில்லை!
போன மழைக்கு நட்ட மிளகாய்
வெயிலில் வாடி கருகி செத்துக்கிட்டு இருக்கு!
எல்லைப் புன்செய்யில் நட்ட நெல்லுக்கு
களை எடுத்ததோட கிடக்குது
அதுவும் சாவியா போயிடும்போல...
அத்தைவயல் பொம்மி வயல் ரெண்டும்
கருகிப்போச்சு...
இனி மழை வந்தாலும் பிழைக்காது!
காவிரி குடிநீர் வேற மூணு நாளா வரல...
மாட்டுக்கு தண்ணி இல்லாம
நாறிப்போன குளத்துநீரத்தான் ஊத்திட்டு இருக்றேன்!
என்னப்பா பண்றது?
கொஞ்சம் அமைதியாய்...
கனவுகளை அசைபோட்டபடி...
நான் கூறியது;
" போராடனும்! புரட்சி செய்யணும்!
அதிகார வர்க்க வாழ்க்கைய கனவாக்கணும்!!
எளிய மக்களோட கனவுகளை நினைவாக்கணும்!!!
# இனி என் போராட்ட களத்தில் என் குடும்பமும்!
- ஏனாதி பூங்கதிர்வேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக