புதன், 12 ஏப்ரல், 2017

இயற்கை தமிழ் செய்யுள் தொடர்பு உயிரினங்களின் நகர்வை வைத்து செய்யுள் இயற்றும் முறை அறிவியல் தமிழ்மொழி

aathi tamil aathi1956@gmail.com

8/9/15
பெறுநர்: எனக்கு
சத்தியசீலன் ஆழிவடிம்பலம்ப நின்ற நெடுமாறன்
# தமிழ்ச்சூத்திரம்
பழந்தமிழர் இயற்கையோடு இயை(சை)ந்து வாழ்ந்ததின் காரண காரியங்களை
சூத்திரமாக வைத்து தமிழை எழுதியுள்ளனர்..!
"ஆற்றொழுக்கு அரிமாநோக்கம் தவளைப்பாய்த்து
பருந்தின்வீழ்வு அன்ன சூத்திரநிலை.." ~நன்னூல்
ஆற்றுநீர் ஓடும் ஒழுக்குமுறைமை, சிங்கம் இரைதேட முன்னும் பின்னும்
பார்த்து நகருதல், தவளை அங்கும் இங்கும் தாவும் முறை, பருந்து மேலிருந்து
திடீரென இரையை நோக்கி வருவதல் போன்ற முறைகளில் தமிழச்செய்யுள் இயற்ற
சூத்திரம் வகுத்தனர். இவ்வாறான முறைமைகளை வகுத்து சொற்களை கையாண்டு
பாடுவர்..!
ஆக, பாடலின் பொருள் கொள்ள எந்த முறையில் பாடப்பட்டது என்பது
தெரியவேண்டும்..! இப்படியான தமிழ் சூத்திரங்களை அறியாது, செய்யுள்களை
படித்தால் பொருள் கொள்ளுதல் பிழையாகவே இருக்கும்..!
# குறிப்பு : தமிழ் வெறும் மொழியல்ல; இயற்கை நுட்பக்கூறுகளின் தொகுப்பு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக