ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆயுதபூசை சங்ககால ஆயுதபூஜை பண்டிகை மதம் ஆயுதபூஜை இலக்கியம் வான்மங்கலம்

aathi tamil aathi1956@gmail.com

21/10/15
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
Ancient Tamil worshipped warfare.
செய்யும் தொழிலே தெய்வம் என்பது தமிழர் கருத்து.
படைக்கருவிகளுக்கு நெய்பூசி, பொட்டுவைத்து, பூமாலை சாற்றிப் பூசெய்வது
தமிழர் வழக்கம். இது மதம்சார்ந்த ஒன்றல்ல.
ஔவையாரின் சங்க இலக்கியப் பாடல் அக்காலத்திலேயே இவ்வழக்கம் இருந்ததைக் காட்டுகிறது.
"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக