|
21/10/15
![]() | ![]() ![]() | ||
Asa Sundar
யார் இந்த ஜெயமோகன்?? (மீள் பதிவு)
=======================
எனக்கு இந்த ஜெயமோகனை சிறிதளவே தெரியும். இவர் ஓர் எழுத்தாளர், அவரின்
எழுத்துத் திறனையெல்லாம் வடுகர்களான நாயர்களுக்கு ஆதரவாகவும் குறிப்பாக
நாடார்களுக்கு எதிராகவும் தான் பயன் படுத்துவார் என்று தெரிய வந்தது.
இப்படியான ஜெயமோகன் பின்னணியை ஆராய்ந்தால் அவர் குமரி மாவட்டம்
விளவங்கோடு வட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தை பாகுலேயன் பிள்ளை (நாயர்)
தாய் விசாலாட்சி ஆவர். திருவிதாங்கூரில் பிள்ளை, தம்பி, குறுப்பு, மேனன்,
நம்பியார், உன்னிதன் என்று பட்டங்களை சூட்டிக் கொள்வர் வடுகர்களான இந்த
நாயர்கள். நான் கூட முதலில் ஜெயமோகனை பிள்ளை என்றே நினைத்தேன். அவரின்
நாயர் சார்பு மற்றும் தமிழர்களுக்கு எதிரான மனப்பான்மை அவரை நாயர் என்று
அறிய வைத்தது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சிறுகதைகள் எழுதி த.மு.எ ச
என்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் விழாக்களில்
மேற்படியார் அடிக்கடி தோன்றி பாராட்டப்படுபவரும் ஆவர். த.மு.எ.ச என்பது
தமிழர்களை நையாண்டி செய்பவர்களை அழைத்து பாராட்டும் அமைப்பு ஆகும்.
இந்த ஜெயமோகனை பற்றி அறிந்து கொள்ள அவரின் பல்லக்கு மற்றும் ரப்பர் ஆகிய
கதைகளை படித்தேன். அதில் ஒய்யாரமாக பவனி வரும் நாயர்கள் பின்னர்
போண்டியாகின்றனர், அதற்கு நாடார்கள் காரணியாக இருப்பது தான் ஜெயமோகனின்
கோபத்திற்கு காரணம். பனையேறும் சாணார்கள் பல்லக்கில் செல்வதா என்று நாயர்
ஒருவர் சொல்வதாக அமையும் காட்சியில் ஜெயமோகனின் நாயர் சார்பு அப்பட்டமாக
வெளிப்படும்.
பல்லக்கு:
=========
தென் திருவிதாங்கூரில் நாடார்கள் மதம் மாறுகிறார்கள். எஸ்.ஐ.யூ.சி,
சிரியன் கத்தோலிக் , லத்தின் கத்தோலிக் மிஷனரிகள் நாடார்களின் கல்விக்கு
பாரிய பங்காற்றுகின்றன. ஐயா வழியை பின்பற்றிய நாடார்கள் நாயர்களை
கடுமையாக எதிர்த்தனர். ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக சுரண்டிக் கொழுத்த
நாயர்கள் எந்த வேலைக்கும் போகாமல் ஆடம்பரமாக வாழ்கின்றனர். ஏற்றம்
பெறாமல் பனையேறிக் கொண்டிருந்த சில சாணார்கள் நாயர்களின் வீடுகளில்
ஊழியம் செய்கிறார்கள். நாயர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறிகளாக
இருந்தமையால் சொத்துக்களை இழக்கின்றனர். காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு
ஏழ்மையின் விளிம்புக்கு வருகின்றனர். அப்படியான நாயர் ஒருவர், தமது
வீட்டில் உள்ள பொருள்களை தமது வீட்டின் நாடார் வேலையாளான ஒருவனிடம்
ஒப்படைக்கிறார். அவ்வேலையாளான நாடார் அதனை விற்று வரும் பணத்தை நாயரிடம்
ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு. விரைவில் நாயர் சாதியின் உயர்வை பறை
சாற்றும் "பல்லக்கு" ஒன்றினை விற்க வேண்டிய நிலை. அதே நாடார் வேலையாள்
அதனை விற்று பணம் கொடுக்க, நாயர் அதனை நீதிமன்ற வழக்கில் செலவு
செய்கிறார். வறிய நோய்க்கு நாயர்கள் ஆளாகின்றனர். அம்மச்சிகள் நொந்து
நூலாகின்றனர். அப்படியான நிலையில் "பல்லக்கினை" விற்ற நாயர் தெருவில்
நடந்து செல்ல, தமது பல்லக்கில் ஒருவர் ஒய்யாரமாக செல்வதைக் காண்கின்றார்.
யார் அவர் என்று கேட்ட போது, தமது வீட்டில் வேலையாளான நாடாரின் மகன்,
கிறிஸ்தவ மிஷனரிகளில் கல்வி கற்று ஆசிரியர் பணிக்கு வந்து நிரம்ப
சம்பாதிக்கிறான் என்பதை அறிந்தவுடன் துணுக்குற்று பனையேறி நாடானுக்கு
வந்த வாழ்வைப் பார் என்று பிதற்றுவதாக அமைகிறது.
ரப்பர்:
=====
திருவிதாங்கூரின் ஒட்டு மொத்த நன்செய் நிலங்களும் நாயர்களின் கைகளில்
உள்ளன. சாணார்கள் அவர்களின் நிலங்களில் கூலிகளாக உள்ளனர். பொன்னுமணி என்ற
நாடார் சிறுவன் வயல்களில் கூலியாக பணிபுரிகிறான். மிஷனரி பள்ளிகளில் மாலை
வேளையில் கல்வி கற்கிறான். சோம்பேறி நாயர்கள் கேளிக்கைகளில்
ஈடுபடுகின்றனர். நெடுமங்காடு சந்தைகளில் சாணார் பெண்களின் முலைகளை எள்ளி
நகையாடுகின்றனர். பொன்னுமணி நாயர்களைப் போற்றுவது போல் அவர்களிடமிருந்து
பொருளுதவி பெறுகிறான். பின் வறிந்து போன நாயர்களின் வாழைத்தோப்புகளை
குறைந்த விலைக்கு வாங்குகிறான். அவ்வாழை இருந்த இடங்களில் ரப்பர்
மரக்கன்றுகளை நடுகின்றான். ரப்பர் நல்ல விலைக்கு போகின்றது. அருவிக்கரை
ரப்பர் மரங்களின் பகுதியாக மாறுகிறது. பொன்னுமணி போலவே மிஷனரி மூலம்
நாடார்கள் கல்வியில் ஏற்றம் பெறுகின்றனர். செல்வம் நாடார்களுக்கு வந்து
குவிகிறது. நெய்யாற்றின்கரை, காட்டாக்கடை சந்தைகளில் நாடார் வணிகர்கள்
குவிகிறார்கள். நாயர்கள் நாடார்களின் செல்வச்செழிப்பைக் கண்டு அஞ்சி தொலை
தூர மாவட்டங்களுக்கு ஓடுகின்றனர். திருவனந்தபுரம் முழுவதையும் நாடார்கள்
தங்களது வணிக கேந்திரமாக மாற்றுகின்றனர். நாயர்கள் பலர் தங்களது பூர்வீக
பகுதிகளை வந்தேறி நாடான்களுக்கு விற்று விட்டு செல்வதாக நச்சுக்
கருத்தினை இக்கதையில் பரப்புவதோடு, நாயர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க
முயல்கிறார் ஆசிரியர்.
இரு கதைகளிலும் நாடார் சாதியினர் மையப்படுத்துவப்
படுவதோடு அவர்களின் உழைப்பின் மீதும் கல்வியின் மீது புழுதி வாரி
தூற்றுகிறார் ஜெயமோகன் நாயர். இது பொறாமையின் வெளிப்பாடாகும். நாடார்கள்
திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்டு முன்னேறிய கால கட்டத்தில் நாயர்கள்
உழைக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே உண்டு களித்து கேளிக்கைகளில்
ஈடுபட்டமையாலும், அம்மச்சிகளின் வீடுகளில் பொழுதைப் போக்கி
இருந்தமையாலுமே வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும், இந்த
நாயர்களே திருவிதாங்கூரின் வந்தேறிகள் ஆவர். பொன்னுமணி நாடானை
எங்கிருந்தோ வந்தவன் என்று கூறுவதன் மூலம் நாடார்களை வந்தேறிகள் என்று
உருவகம் செய்கிறார் ஜெயமோகன் நாயர். இப்படியான ஜெயமோகனின் இதர
நூல்களிலும் தமிழர்களை ஒரு பிடி பிடிப்பதையே கடமையாக வைத்துள்ளார். இவர்
சிறந்த இலக்கியவாதி என சொல்கிறார்கள் வடுகர்களின் தலைமையில் இயங்கும்
எழுத்தாளர் சங்கவாதிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக