சனி, 1 ஏப்ரல், 2017

ஏறுதழுவுதல் சங்ககால சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

4/1/16
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா
கலித் தொகை: 103 - தோழி கூற்று - ஏறு தழுவுதல்
(காளையை அடக்கும் வீரத்திலும், பொலிந்த அழகிலும் இவன் மாயோன் போல
இருக்கிறானே என்று வியப்பது)
கலி: முல்லைக் கலி
பாடியது: சோழன் நல்லுருத்திரன்
(ஆயர்கள் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,
பின்னர், அவர் ஏறு தழுவி விட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி,
குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்...நீயும் அங்ஙனம்
பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது)
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை, மறுமையும், புல்லாளே ஆய மகள்! - கொல்ல
வரும் காளையை, அதன் கொம்பைக் கண்டு ஒரு தலைவன் அஞ்சுவானேல், அவனை
மறுபிறவியிலும் விரும்ப மாட்டாள் ஒரு ஆயர் மகள்!
மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும் பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவும், கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக