திங்கள், 3 ஏப்ரல், 2017

திருப்பதி முருகனே நெடியோன் புல்லி திரையன்

aathi tamil aathi1956@gmail.com

29/11/15
பெறுநர்: எனக்கு
இன்று நம் எல்லோருக்கும் நன்கே பழகிய ஓர் பெயர்
பாலாஜி என்பதும் இது
திருப்பதியில் வழிபடப்படும் திருமால் தலத்தில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டு
உருவத்தின் ஓர் விளிப் பெயர் இஃது எனவும், இத்தலமே உலகில் வேறெங்கும் காண
முடியாது எனும்படி ஆண்டின் 365 நாட்களிலும் 24 மணி நேரமும் இடைவிடாது
லட்சக்கணக்கில் மக்கள் வழிபாடு நடத்தும் ஒரே கோயில் எனவும், ஆன்மீக
நிறுவனங்களிலேயே மிகமிக அதிக தொடர் வருமானமும் அசையும் சொத்தின்
மதிப்பும் கொண்டதாக ஆவணப்படுத்தப் பட்டுள்ள ஓர் அற நிலையம் ஆகும் எனவும்
நன்கறிவோம்.
திருப்பதி எனும் இத்தலம் 8-9 நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால்
பிரபந்தங்களில் போற்றப் பட்டதும் வைணவர்களுக்கு மட்டுமின்றி இக்காலத்து
இந்தியாவில் உள்ள பற்பல மாகாண மக்களும் மிக்க ஈடுபாட்டுடன்
நேர்த்திக்கடன்கள் வரை நடத்திக் கொண்டாடும் ஓர் பழமையான தலமுமாகும்.
பழங்காலம் முதலே தென்னகத்து மக்கள் வடதிசைக்கான ஆன்மீகச் சுற்றுலாவில்
காசி, மாயா, (அரித்துவாரம்) கயா, கயிலாயம் சென்று வருவது சிறப்பு
மிக்கதாகக் கொள்ளப்பட்டது போல், வடமாநில மக்களும் தென் திசைத் தலங்களான
மதுரை, இராமேசுவரம், போன்ற புண்ணியத் தலங்களில் வழிபாடுகள் நடத்தி
வருகின்றனர். இவ்வகையில் வடநாட்டு மக்கள் திருப்பதிக்
கோயிலுக்கும் வரும் ஓர் மரபு ஏற்பட்டுள்ளது.
திருப்பதிக் கோயிலின் மேற்பார்வை விவகாரங்கள் சென்ற ஓர் இரு நூற்றாண்டில்
‘ மஹந்த்’ என்னும் சொல்லால் குறிக்கப்படும்
மடாதிபதிகள் வசம் இருந்து வந்துள்ளது. இந்த ‘மஹந்த்’ என்னும் சொல்லும் வட
நாட்டினர் பயன் கொள்ளும் சொல் ஆகும் என்பது வெள்ளிடை மலை. இவர்களது
ஆட்சிக் காலத்தில் ‘பாலாஜி’ என்னும் வடசொல்லின் வாய்வழி வழக்கம்
வந்திருக்க வேண்டும் ஏனெனில் வரலாற்றில் பாலாஜி என்னும் பெயர் பயனில்
இருந்ததாக ஆவணங்களில் சான்றுகள் ஏதும் இல்லை.
இக்கருத்துக்கள் ஒருபுறம் நிற்க:
சிலப்பதிகார காப்பியத்தில் வேங்கடமலையில் திருமால்
சங்கும் (1) சக்கரமும் (2) தாமரையும்
(3) கைகளில் ஏந்தி மஞ்சள் நிற ஆடை
அணிந்து (4), கமலக்கண்ணணான (5)
நின்ற திருக்கோலம் (6) சிலம்பு மதுரைக்காண்டம்-11 காடுகாண் காதையில்
பேசப்பட்டுள்ளது.
ஆனால் சங்க நூல்களிலே தமிழகத்து எல்லையான
வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்குத் தலைவரென விளங்கியோர் புல்லி
(அகம் 61, 83, 209, 393-புறம் 385) என்றும், திரையன் (அகம் 85) என்றும்,
ஆதன் உங்கன் (புறம் 389) என்றும், மலை வளம் விளக்கும் பற்பலப் பாக்களில்
(அகம் 27, 141, 211, 213, 265, 381-புறம் 391) குறிஞ்சிப் பண்பு
பேசப்பட்டாலும் சிலப்பதிகாரம் குறிப்பது போல் பெருமை பெற்ற திருமால்
கோயில் அவர்தம் நாட்டில் இருந்தமை பற்றி குறிப்புகள் ஏதும்
காணப்படவில்லை. இவர்கள் யாவரும் இக்காலத்துக் கோயில் போன்று தெய்வ
வழிபாட்டில் நாகரீக வளர்ச்சி அடையாத காலங்களில் சிறுசிறு கூட்டம் /
குறுநிலத் தலைவர்களாக இருந்திருப்பர்
மாடக்கோயில் கற்றளிகள் என நாகரீகம் நன்கு வளர்ந்த பிறகு இப்பகுதியில் ஆண்ட மன்னனான
நந்திவர்மன் என்னும் பிற்கால பல்லவன் காலத்தில் இயற்றப்பட்ட நந்திக்கலம்பகம்
அம்மன்னனின் வேங்கடமலையும் அதன் சாரலும் குறித்தாலும்
நெடியோன் கோயில் பற்றி குறிப்பேதும் காட்ட வில்லை.
சென்ற நூற்றாண்டுகளில் அரசினரால் நூற்றுக்கணக்கானக் கல்வெட்டுச்
சாசனங்கள் திருப்பதிக் கோயிலிலிருந்து படி எடுக்கப்பட்டுள்ளன. அவை
விஜயநகர மன்னர் போன்று, ஆழ்வார்கள் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் பிறகு
வந்த பிற்கால மன்னர்களின் நிவந்தங்களை குறிப்பதாக உள்ளன. மேலும் இந்தக்
கல்வெட்டுகளின் முழுமையான வாசகங்கள் யாவும் தனி நிலையில் நடுநிலை பிறழாத
திறந்த புத்தகமாக இன்னும் வெளியிடப் படவில்லை.
முதலில் குறித்த ‘பாலாஜி’
என்னும் பெயரை மீண்டும் கூர்ந்து நோக்குவேம்,
இச்சொல் தமிழ்ச்சொல் அல்ல. வடநாட்டினர் பயன் கொள்ளும் ‘ஜி’
என்னும் ஈறு , சிவ்ஜி (சிவன்)
பிஷ்ணுஜி (திருமால்) என கடவுளரையும் காந்திஜி, நேருஜி, நேதாஜி என
தலைவர்களையும் விளிக்கும் பெயர் மரபைக் காட்டுவதால் இஃது வடநாட்டினர்
மரபில் வந்த ஓர் விளிப் பெயர் என்பது நன்கு விளங்கும். ‘பாலா’ வில் உள்ள
‘பா’ என்னும் எழுத்து தமிழ்மொழி ஒலிகளில் அமையாத வடமொழி நிரலான நான்காவது
/ப்பா/ ஆகும் ப (1) ப்ப (2) ப (3) ப்ப (4)
‘பாலா’ என்றால் வடநாட்டினர் மொழியில் ஈட்டி அல்லது வேல் ஆகும். பயன்
கொண்ட பின், வில்லின் அம்பு போன்று, மீட்கப்பட முடியாத ஓர் கைக்கொண்டு
எறி ஆயுதம்.
பாலாஜி என்னும் கடவுளர் பெயர்
‘பாலா’வை ஏந்திய ஓர் ‘ஜி’ எனப் பொருள் படுகின்றது. எனவே வேற்படை ஏந்தும்
கடவுளை விளிக்கும் சொல்லாகும். அதாவது முருகனைக் குறிக்கும். ஏனெனில்
வேல் அல்லது ஈட்டி ஏந்திய கடவுளர் வேறு எவரும் கிடையாது. கையில்
ஏந்தியவாறு விடாமல் பயன் கொள்ளும் சூலம் வேறு. இதற்கு திரிசூலம் எனும்
சொல் உள்ளது. தேவாரத்தில் இஃது
மூவிலைவேல் என குறிக்கப்படும்.
பெறப்பட்ட கருத்து : ஒரு காலகட்டத்தில் முருகனுக்கு வழிபாடு நடந்து
வந்தது. பின்பு வேறொரு காலகட்டத்தில் அவ்வழிபாடு மாற்றப் பட்டிருக்க
வேண்டும். முன்பு வழிபட்ட லட்சக் கணக்கான மக்களின் வழி வந்தோர் தங்கள்
முன்னோர்கள் பயன் கொண்ட வாய்வழி விளிப்பெயரை மட்டும் மாற்றாமல் அங்கு
அமைந்த_கடவுளைக் குறிக்க
பாலாஜி என்னும் பழைய சொல்லையே பயன் கொண்டு வருகின்றனர்
வேறு ஒரு காலகட்ட பார்வை:
உ.வே.சாமிநாதய்யர் என தமிழ்மக்களுக்கு நன்கே அறிமுகமான மாபெரும் தமிழ்
பேராசிரியர் தன் சுயசரித நூலில் இவ்வாறு குறித்துள்ளார். அப்பெருமகனார்
‘திரிசிரபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்னும் தமிழ் ஆசிரியர் பால் பாடம் கற்கச்
சென்ற போது, அறிமுக நிலையில் தன் பெயரை அவர் ஆசிரியர் யாது எனக்கேட்க
“உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன்“ என்பது பெயர் என பதிலளித்த உடனே
பேராசான் “பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருந்தான்
என்பதற்கு சான்று” என்றாராம். இக்குறிப்புகள் ஐயமின்றி அக்காலக்
கட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வந்த,
‘வேங்கடத்து முருகன்’ எனும் கருத்து பலரிடை வேரூன்றி நின்றது புலனாகின்றது.
எனவே, பாலாஜி எனும் பெயரால் நாம் கண்டது புதிய “வேங்கடத்து முருக“னுக்கு
ஒட்டிய கருத்து
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத்(து) உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்(கு) ஓங்கிய இடைநிலைத்
தானத்து மின்னுக்கோடி உடுத்து விளங்குவில் பூண்டு (45)
நல்நிற மேகம் நின்றது போலப் பகை அணங்கு ஆழியும் பால்வெண்சங்கமும் தகைபெறு
தாமரைக் கையில் ஏந்தி நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில்
பொலிந்து தோன்றிய
(50) சிலம்பு-மதுரைக் காண்டம்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் (11) – காடுகாண் காதை.
(நல்நிற மேகம் = கருமை நிறமுள்ள முகில்கள்) (மலையத்து-அத்து = எல்லை, 7
ம் வேற்றுமை உருபு அல்ல)
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத்து
அடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் (30) சிலம்பு-புகார்க் காண்டம்
காவிரி நாடும் காட்டிப் பின்னர் (6) கடலாடுகாதை
இவ்வரிகள் ‘வடக்கிருந்து தென்திசை நோக்கி வரும் ஒருவருக்குப் புலனாகும்
வெகு முக்கியமான இடங்களில் வேங்கடமும் ஒன்று’ எனக் காட்டுகிறது. சிமயம் =
உச்சி,குடுமி / உஞ்சை =உஜ்ஜெயின்
நகரம்/ விஞ்சத்து அடவி = விந்தியமலைக் காடுகள்
குமரி வேங்கடம் குணகுட கடலா மண்டினி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் சிலம்பு -நூற்கட்டுரை
வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை-
அகநானுறு 27
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் – அகநானுறு 6
கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை
நல்நாட்டு வேங்கடம் கழியினும் -
அகநானுறு 83
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை -அகநானுறு 85
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட
வைப்பிற் சுரன்இறந் தோரே -
அகநானுறு 141
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை
வேங்கடத்து உம்பர்-அகநானுறு 209
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் – அகநானுறு 211
ஓங்குவெள் அருவி வேங்கடமத்து உம்பர் – அகநானுறு 213
செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ –
அகநானுறு 265
நிரைபல குழீஇய நெடுமொழிப்
புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டும்பர் வேங்கடம் –
அகநானுறு 393
ஒலிவெள் அருவி வேங்கட நாடன் -
புறநானூறு 381
நெல்விளை கழனி அம்பர் கிழவோன் நல்அருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட –
புறநானூறு 385
கல்லிழி அருவி வேங்கடம் கிழவோன் செல்வுழி எழாஅ நல்லேர் முதியன் ஆதன்
உங்கன் போல நீயும் – புறநானூறு 389
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென – புறநானூறு 391
வடதிசை வாகை சூடித் தென்திசை ஓர் மேற்கோள் கலிப்பா
வென்றி வாய்த்த வன்தாள் வளவன்
தொல். பொருள். செய்யு.
இமிழ்இசை வேங்கடம் போலத் தமிழகத்து – நச்சினார்க்கினியர் உரை
வெறிகொள் அறைஅருவி
வேங்கடத்துச் செல்லின் புறப் – வெண்பாமாலை 230
வனையும் வடவேங்கடத்தார் தண்சாரலின் வார்புனமே –
நந்திக்கலம்பகம்33
வடவேங்கட நாடுடை மன்னர் பிரான் – நந்திக்கலம்பகம்55
வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வடவேங்கட மலைவாய் –
நந்திக்கலம்பகம் 67
இவ்வாசிரியர் தலைநகர் டில்லியில் பணியில் இருந்த போது, அப்பகுதியில்
சிறார்கள் கற்க   உள்ள பாடப்புத்தகத்தில், நம் நாட்டில் படங்களுடன் கூடிய
‘அணில், ஆடு, இலை, ஈ’ எனக்   காணும் அறிமுக நிலை பாடப்புத்தகத்தில்
அட்சரமாலாவில் நான்காவது ‘பா’
விற்கு நம் நாட்டில் வேல் என வழங்கப்படும் கையால் எறியும் ஆயுதப்
படைதனையே காட்டி இருந்தனர். அதனைக் கண்ட போது பளிச்சிட்ட கருத்துதான்
இக்கட்டுரை.
வடமொழியில் பகர ஒலி உள்ள எழுதுக்கள் 4 உள்ளமை அறிவோம்
முதலாவது ப (பா- கோபாலன். தனபாலன், மகிபாலன், தர்மபாலன் என வரும்
சொற்களில் காணும் பாலன் = காப்பாற்றும் செய்கை [ = இரட்சிப்பவன் = நாதன்
எனப் பொருள் படும் சொல்லில் உள்ள பா ஆகும் ]
இரண்டாவது ப பழங்களுக்கான சொல், பல் என்பதில் வரும் ப.
மூன்றாவது ப (பா-சிறார் குழந்தை இளையான் எனப் பொருள்படும் பாலன் என்பதில் வரும்
ப)
நான்காவது ப (பா-
வைக்கொண்டுதான் மேற்கண்ட
பாலாஜி எனும் பெயர் எழுதப்படும்)
இவ்வாசிரியர் பணியாற்றிய வேறு ஒரு தொழில் நிறுவனத்தின் (Lucas-TVS group)
தலைமை ஆட்சியர் (C E O ) பெயர் திருமலை குமரன் பாலாஜி
(T K Balaji) என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக