ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பாரதி ஆங்கிலேயர் மன்னிப்பு கடிதம் பிறகும் பத்தாண்டுகள் பணி பாரதியார்

aathi tamil aathi1956@gmail.com

12/12/15
பெறுநர்: எனக்கு
Kannan Mahalingam
இன்று புதிய தமிழகத்தின் முதல் பெண்ணியவாதி பிறந்த நாள்.
பாரதியாரைப் பற்றி திராவிட இயக்கங்கள் திட்டமிட்டே பல வதந்திகளை பரப்பி
வைத்திருக்கின்றன.
ஆம். அவர் பிராமணர் என்ற குற்றச் சாட்டு.
அடுத்தது அவர் ஒரு மதவாதி என்ற குற்றச் சாட்டு.
இந்த இரண்டும் திராவிடர்களின் குற்றச் சாட்டுக்களில் முதன்மையானவை.
ஆனால் நாம் வரலாற்றுப் பதிவுகளை ஆராய்ந்த வரையில் பாரதியார் தம்மை ஒரு
பிராமணராகவே கருதியதில்லை என்பதுதான் உண்மை. பிராமண வேடத்தைத் துறந்து
நாத்திக வேடம் பூண்டார். அதனால், பிராமணர்களால் சாதியை விட்டு ஒதுக்கியே
வைக்கப்பட்டார். ஒரு முறை கீழ்ச்சாதி என்று கற்பிக்கப்பட்ட ஒரு சாதியைச்
சேர்ந்த இளைஞனுக்கு அவர் பூணூல் அணிவித்தார். இது அவரது அறியாமையையும்,
உயர்ந்த மனப்பான்மையையும் சேர்த்துக் காட்டுகிறது. ஆம்...அறிவு பாதி,
அறியாமை பாதி..அவர்தான் பாரதி! மற்றொரு முறை வீதியில் போன ஒரு கழுதைக்கு
அவர் முத்தம் கொடுத்தார். அதாவது அவர் ஸென் மனநிலையில் இருந்தார்.
மதம்....அவர் பக்தி வயப்பட்டவர். அது ஒன்றும் குற்றமில்லையே.
மதத்தை ஊடகமாகப் பயன்படுத்தி அன்று ஏகாதிபத்தியமாக விளங்கி இந்தியத்தை
ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார். அதற்காக அவர்
சிறைப்பட்டார். கடலூர் சிறையிலிருந்த அவர் (வழக்கம்போல்) சிறை அதிகாரிகள்
எழுதிக்கொடுத்த 'மன்னிப்புக்' கடிதத்தில் கையொப்பமிட்டுவி
ட்டு சிறை மீண்டு புதுச்சேரி வந்து தனது ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியை
பத்தாண்டுகள் தொடர்ந்தார். மாபெரும் இலக்கியங்களை அவர் புதுச்சேரி
மண்ணிலேயே படைத்தார்.
கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டை 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி அழைத்த
முதல்வர் பாரதியார்.
சாலையில் கணவனும் மனைவியும் நடந்து போகும்போது அந்தக் காலத்தில் மனைவி
கணவனுக்கு ஓரடி, இரண்டடி பின்னால் தலை குனிந்தபடியே நடக்க வேண்டுமென்பது
விதி. ஆனால் அவர் தனது மனைவியுடன் நடந்துப் போகையில் "என்னோடு சேர்ந்து
வா...தலை குனியாதே...நிமிர்ந்து நட" என்று சத்தம் போட்டவர். அவரே புதிய
தமிழகத்தின் முதல் பெண்ணியவாதி.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த
வந்தோம்" என்று கவிதை செய்தார். புதிய தமிழகத்தின் முதல் பெண்ணீயவாதி
அவரே.
உலகையே புரட்டிப்போட்ட ரஷியப் புரட்சியை வரவேற்று தமிழகத்தில்
அறிமுகப்படுத்தியவரும் அவரே. ஆனால் அதையும் தனது பக்தி ஊடகத்தின்
மூலமாகவே அவரால் செய்ய முடிந்தது. எனவே "மாகாளி பராசக்தி உருசிய
நாட்டின்கண் கடைக்கண் வைத்தாள், ஆகவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி"
என்று தொடங்குகிறார். அந்தக் கவிதையிலே உலகைப் புரட்டிப்போட்ட புரட்சி
வரலாற்றை சுருக்கிச் சொல்லி முடிக்கிறார். இப்படி எந்தக் கவிஞனும்
தமிழகத்தில் இதுவரை சொன்னதில்லை.
ஆனால் திராவிட முடிச்செறுக்கிகள் அவரை இழித்துப் பேசுவதற்கு ஓர்
அளவில்லை. தமிழ்த்தேசியக் கவிஞராக விளங்கி ஈ.வெ.ராமசாமியை எதிர்த்து
கவிதை எழுதிய பாரதிதாசன் பத்தாண்டுகள் பாரதியாரின் சொம்பு தூக்கியாகத்
திரிந்தார். ஆனால் பாரதிதாசனாரை திரித்து உள்வாங்கி, திராவிடக் கவிஞர்
பட்டம் சூட்டி, பாரதியாரை தமிழர்களுக்கு எதிராக நிறுத்துகின்றனர் திராவிட
இயக்கத்தார்.
பாரதியாரும், பாரதி தாசனாரும் தமிழகத்தின் இரு கண்கள்.
ஒரு கண் பிறந்த நாள் இன்று. வணங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக