ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

காயிதே மில்லத் பற்றி சிங்கப்பூர் தமிழ் நாளிதழ் தமிழ்முரசு

aathi tamil aathi1956@gmail.com

22/12/15
பெறுநர்: எனக்கு
தமிழினத்தின் நெஞ்சில் என்றும் நிலை பெறக்கூடிய தமிழ் மறவர் அவர் என்பதை
சிங்கப்பூர் தமிழ் மக்கள் அறிவார்கள். தமிழ்முரசு 1972 ஏப்ரல்
பதினைந்தாம் தேதி காயிதே மில்லத்தின் நினைவாக வெளியிட்ட கட்டுரை, அந்த
மக்கள் தலைவரின் பல பரிமாணங்களையும் சித்திரித்தது.
அதிலிருந்து சில பகுதிகள் :
“இந்தியாவில் அரசியலைப்பு உருவான நேரத்தில் அரசியல் நிர்ணய சபையில் தமிழக
சட்டசபை மூலம் இடம்பெற்றவர்களில் முக்கியமான அரசியல் தலைவர் இஸ்மாயில்
சாகிப். சட்டசபையில் உருப்படியாகப் பங்கு ஆற்றிய ஒரு சிலரில் இஸ்மாயில்
சாகிப் முதல்வர். இஸ்லாமியர்களின் மத உரிமைகள், மத போதனைச்சுதந்திரம்,
சட்டத்தில் இடம்பெறச் செய்தவர். இந்திய முஸ்லிம்களின் அரசியல் மத
உரிமைகளின் காவலர் இஸ்மாயில் சாகிப்.
அடுத்து, எந்த மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாவதற்குரிய வளமும் தகுதியும்
ஆற்றலும் உள்ள மொழி தமிழே என்று கூறி சபையை வியப்பில் ஆழ்த்தினார். இந்தி
ஆட்சி மொழியாவதை எடுத்த எடுப்பிலேயே சபையில் எதிர்த்த தமிழர் இஸ்மாயில்
சாகிப். அதோடு தமிழையே ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று தனிக்குரல் கொடுத்த
வீரர்.
தி.மு.க. வினால் நினைக்க முடியாத (அப்பொழுது தி.மு.க. இல்லை) நேரத்தில்
நினைக்க முடியாத இடத்தில் நினைத்துச் சொன்னவர் இஸ்மாயில் சாகிப். மூர்க்க
முரட்டு அரசியலோ வெத்துவேட்டு அரசியலோ தெரியாதவர் அவர்.
பாரதத் திருநாட்டிலே ராஜாஜிக்கு அடுத்த நிலையிலே இருக்க வேண்டியவர்;
வைத்துப் பாராட்டத்தக்கவர் நம்முடைய காயிதே மில்லத் ஆவார். இந்த நாட்டின்
ஜனநாயக வளர்ச்சியைக் கருதி ஆட்சி மாற வேண்டுமென்று எண்ணி அதற்கோர்
மாறுதலை ஏற்படுத்திக் கொடுத்து சரித்திரத்திலே ஒரு புனித ஏட்டை உண்டு
பண்ணித் தந்தவர்கள் அவர்கள்.
இந்த நாட்டிலே கட்டிக் காத்து வரும் இஸ்லாமியப் பாரம்பரியம் இஸ்மாயில்
சாகிப் அவர்களின் மூலம் இலக்கியச் செறிவுடையதாகத் திகழ்கிறது. தமிழ்
நாட்டு மக்களாகிய நாம் மதத்தால் இந்து, கிறிஸ்துவன் முஸ்லிம்
என்றிருந்தபோதும், மொழியால் ஒன்றாகவே நிற்கிறோம். இந்த நாட்டில்
பலமொழிகள் பேசுவோர் வாழலாம் என்றார். பல மதத்தினர் வாழ்வது ஒன்றும்
தப்பாகி விடாது. அப்படி வாழுகின்ற மதத்தினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன்
செயல்படுவது வகுப்புவாதம் ஆகிவிடாது. பல மொழி பேசுவோர் இந்திய அமைப்பில்
ஒன்றுபட்டு வாழ்வதைப் போல் பல மதத்தைப் பின்பற்றுகிறவர்களும் ஒன்றுபட்டு
வாழ முடியும்.
mudukulathur.com/?p=17791

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக