வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஓணம் தமிழர் பண்டிகை மலையாளி திருவோணம்

aathi tamil aathi1956@gmail.com

26/8/15
பெறுநர்: எனக்கு
Karthi Keyan உடன் தென்றல் தென்றல்
வரலாறு ஒர் பார்வை
# ஓணம் Vs # தமிழினம்
தமிழர்கள் கொண்டாடிய திருவோணம்:
தேவாரம் சொல்லும் ரகசியம்!
மலையாளம் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத பண்டிகை திருவோணம். ஆனால்
சங்க காலத்தில் தமிழர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டிர
ுக்கிறது என்பது சுவராஸ்யமான செய்தி.
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில்
விஷ்ணுவின் பிறந்தநாளும், வாமனன் அவதரித்ததும் அன்றுதான் எனவும்
குறிப்புகள் உள்ளன.
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான
# மதுரைக்காஞ்சியில் ,
பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என
மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற
வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு
செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல்
மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"
# நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில்
பெரியாழ்வார்,
“பரம்பரையாகத் திருமாலுக்கு
தொண்டுசெய்வதையும்
திருவோண நன்னாளில் நரசிம்ம
அவதாரமெடுத்து இரணியனை
அழித்தவனை நம் துன்பங்கள் போகப்
பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே” - (பெரியாழ்வார்திருமொழி 6 ).
# தேவாரத்தில்
சம்பந்தர்,
ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
மறக்கபட்ட மற்றும் மறைக்கப்பட்ட வரலாறு!
பகிருங்கள்
# கார்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக