ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

எண்ணெய் வளம் தமிழகம் பெட்ரோல் நரிமணம் மட்டுமன்றி தஞ்சாவூர் சென்னை வரை

aathi tamil aathi1956@gmail.com

19/9/15
பெறுநர்: எனக்கு
Vijaya Kumar
தமிழகத்தில் தஞ்சையின் கடற்கரைப் பகுதியிலிருந்து சென்னை வரை சுமார் 200
கல் தொலைவுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு (கடற்பகுதியிலும் தரைப்
பகுதியிலும்) வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவை குறித்த ஆய்வுகள் 1990
வாக்கிலேயே நடந்தாலும் அவற்றை மூடி வைத்திருந்தனர், இப்போது அவற்றைத்
தோண்டி எடுக்கும் வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன, எதிர்காலத்தில்
இப்பகுதி அமரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் டெக்சாஸ் போன்று எண்ணெய்
வளம் மிக்கதாகவும் அது சார்ந்த தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு
என்று அன்றே செய்திகள் வெளிவந்தன, அதற்காகத் தான் திட்டமிட்டே இந்திய
அரசு காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரைக்
குறைத்து வேளாண்மையை அழித்து வந்திருக்கிறது,
3 போகம் நடந்த தஞ்சை இன்று ஒரு போகத்துக்கு வேண்டிய தண்ணீருக்கே தவிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இதற்கு அடிப்படைக் காரணம் திராவிட
இயக்கங்கள் என்றாலும் அதிலும் மிக நுணுக்கமாகப் பார்த்தால் 1969 முதல்
இன்று சுமார் 50 ஆண்டுகள் அது திமுக எனில் கருணாநிதி. அதிமுக என்றால்
சசிகலா குடும்பம் ஆகியவற்றின் கைகளிலேயே இருந்து வந்துள்ளது, அதேபோல்
பெரும் நிலக்கிழாரான மூப்பனாரும் அவரது மகன் ஜி,கே. வாசனும் நடுவண்
அரசில் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர், இன்று தமிழகம்.
குறிப்பாக தஞ்சை மற்றும் அதனைச் சார்ந்துள்ள அண்டை மாவட்டங்களும் இவ்வளவு
பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கு இவர்களின் துரோகமே காரணம்,
எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள், அது ஆயுதப் போராட்டமாக இருந்தாலும்
அமைதி வழிப் போராட்டமாக இருந்தாலும்,
நான் சொல்வது சற்று அந்த மாவட்டத்து நல் உள்ளங்களுக்குச் சற்று
வருத்தத்தை அளித்தாலும் அந்தத் துரோகிகளை தமிழக அரசியலில் இருந்து
அப்புறப்படுத்த உங்களால்தான் முடியும், இவர்களைத் தமிழக அரசியலில்
வெளியேற்ற காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் சக்திகள்.
விவசாயிகள். தமிழின உணர்வாளர்கள் கொண்ட மக்கள் கூட்டணி வேட்பாளர்களை
நிறுத்துங்கள்,
உங்கள் சிந்தனைக்கு வைக்கப்படும் இதனைச் சரியாக இருந்தால் மற்றவர்களோடு
பகிர்க, இலலையெனில் புறக்கணிக்கலாம்,
தமிழகத்தின் தலையாய பிரச்சினை மதுவல்ல,
தமிழகத்தின் தலையாய பிரச்சினை தண்ணீர்,
சரி.
காவிரி நீர் நமக்கு இல்லை, கிடக்கட்டும்,
அந்த மண்ணிற்கடியிலிருந்து கிடைக்கும் ஏராளமானகோடி மதிப்புமிக்க
பெட்ரோலியமும் நமக்குக் கிடையாது,
காவிரி கர்நாடகத்திற்குச் சொந்தம்
பெட்ரோல் இந்திய அரசுக்குச் சொந்தம்,
தமிழனுக்கு ?

கச்சா எண்ணெய் பெட்ரோலியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக