ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சிசேரியன் குழந்தை பலகீனமானது நோய்கள் அதிகம் வரும் பிள்ளைப்பேறு மருத்துவம் சுகப்பிரசவம்

aathi tamil aathi1956@gmail.com

12/10/15
பெறுநர்: எனக்கு
ஆனந்தன் ராஜகோபாலன் மங்காவிளை
சிசேரியன் நிரந்தர நோயாளிகளை உருவாக்குகிறது..........
இயற்கை நிர்ணயம் செய்யும் நேரத்திற்கு முன்பே, நான் உனக்கு பிரசவம்
செய்கிறேன் பார் என்று வயிற்றை கிழித்து எடுக்கும் மனித அறிவின்
ஆணவத்திற்கு கிடைத்த பரிசை பார்த்தீர்களா..?
சிசேரியன் செய்யப்பட்டு பிறந்தவர்கள், இயற்கையாக பிறந்தவர்களை விட
அடிக்கடி ஆஸ்துமா, வாத நோய், ஒவ்வாமை, குடல் கோளாறுகள், மற்றும்
இரத்தப் புற்றுநோய் போன்ற நாள்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்
என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது... நம் ஊர்களில் சுகப்பிரசவம்
என்ற ஒன்றை இல்லாமல் செய்ய கங்கணம் கட்டிக்கொண்டு சிசேரியன் செய்து
கொண்டுள்ளார்கள் என்பதை நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம்
இல்லை தானே..?
“மருத்துவ அறையைப் பணம் ஈட்டும் இடமாக்காதே” என்றும் “மருத்துவ மனையில்,
நோயுடன் வருபவர்களைக் காசு காய்க்கும் மரமாக உலுக்காதே” என்றும்
எச்சரிக்கிறார் மருத்துவத்தின் தந்தை ஹிபாகிரேடஸ்.
“ஒரு மருத்துவர் தன் நோயாளியைத் தன் ஒரே மகனைப்போல அன்பை முழுமையாகக்
கொடுத்து கவனிக்க வேண்டும்” என்கிறார் புத்தர்.
ஆனால், இன்றைக்கு மருத்துவத்தின் நிலையோ - “உண்மை ஓரளவுதான் மக்களை
எட்டுகிறது. பொய்மையும் மூடத்தனமும் பெரும்பான்மையோர
ை வென்றுவிடுகிறது” என்ற அரிஸ்டாடிலின் வாக்கை உண்மையாக்கி கொண்டிருக்கிறது
...
இந்த கேடுகளை எல்லாம் தவிர்க்கவும், மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன்
இல்லாமல், உங்கள் குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும் என்றும் ஆசைப்
படுகிறீர்களா..? அப்படி என்றால், “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்” என்ற
இந்த புத்தகம், உங்களுக்கு ஒரு பொக்கிஷம்.
குழந்தை பிறந்துள்ளது என்றால், அது ஆப்ரேஷனா..? அல்லது சுகப்பிரசவமா..?
(மருத்துவமனைகளில்) என்று கேட்கும் நிலை மாறி, பிரசவம் என்பது ஒரு
இயற்கையான நிகழ்வு என்ற புரிதலும், குழந்தை வீட்டில்தானே பிறந்துள்ளது
என்று கேட்கும் உணர்வும் அனைவருக்கும் ஏற்படவேண்டும். இந்த புத்தகத்தால்
பயன் பெற்றவன் என்ற காரணத்தாலும், ஒவ்வொரு பிரசவமும், ஒவ்வொரு
வீடுகளிலும் இனிமையான முறையில், சுகமான பிரசவமாக அமையவேண்டும் என்ற தீராத
ஆசையிலுமே இந்த புத்தகத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
புத்தகத்தின் முடிவில் வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவ அனுபவங்கள்
தொகுக்கப்பட்டுள்ளது :
https://www.facebook.com/notes/rk-acu/
இறைவழியில்-இனிய-சுகப்பிரசவம்/
508150835981987
(Rk Acu)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக