திங்கள், 3 ஏப்ரல், 2017

ஈழவர் இல்லத்து பிள்ளை தொடர்பு பணிக்கர் பட்டம் கொங்கு சாதி ஈழம் மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

30/11/15
பெறுநர்: எனக்கு

இல்லத்துப் பிள்ளைமார்
(ஈழவர்)
Narayana Guru.jpg
மொத்த மக்கள்தொகை
10 இலட்சம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம் (96%), கிறித்துவ சமயம் (4%)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஈழவர்பில்லவாநாடார்
இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இடத்திற்கேற்ப ஈழவர், இல்லத்தார், பணிக்கர் என பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இந்த சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் தந்தை வழி உறவுத் துவக்கத்தில் மாறுபட்டு தாய் வழி உறவுத் துவக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தச் சமுதாயத்தினரில் ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது. இந்த சமுதாயத்தில் மூட்டு இல்லம், பளிங்கில்லம், தோரணத்தில்லம், சோழிய இல்லம், மஞ்சநாட்டு இல்லம் எனும் ஐந்து இல்லங்கள் வழியிலான உட்பிரிவுகள் உள்ளது. இந்தப்பிரிவுகளை மையமாகக் கொண்டே உறவுமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்ணிற்கு சமனுரிமை கோரிப் போராடி வரும் இன்றைய நிலையில் துவக்கத்திலேயே முன்னுரிமை கொடுத்த முதல் சமுதாயம் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

பொருளடக்கம்

இல்லம் எனும் உட்பிரிவுகள்

இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தில் மூட்டு இல்லம், மஞ்சநாட்டு இல்லம், பளிங்கு இல்லம், சோழிய இல்லம், தோரணத்து இல்லம் என ஐந்து இல்லங்கள் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மூட்டில்லம்

சிவருத்திரரின் முதல் மனைவியான பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவி இந்தக் குடும்பத்திற்கு ஆதி மூட்டானவள் என்பதாலும், முதலில் இல்லற இன்ப மூட்டியவள். துணி மூட்டும் தொழில் செய்யும் வகுப்பைச் சேர்ந்தவள் மற்றும் வீணை மீட்டும் வீட்டிலிருந்து வந்தவள் ( மீட்டுதல் மூட்டுதல் என மருவியது) என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டு இல்லத்தாள் என்று அழைத்து , அவள் குழந்தைகள் "மூட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சிவருத்திரருக்கு கண்டிகைதேவி முதல் மனைவியானதால் அவளை முதலில் பெருமைப் படுத்துவது போல மூட்டில்லத்தவருக்கு எவ்விடத்திலும் முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

மஞ்சநாட்டில்லம்

சிவருத்திரரின் இரண்டாவது மனைவியான மஞ்சளை உபயோகித்து மளிகை வியாபாரம் செய்து வந்த தத்த செட்டியாரின் மகளான உமையாள், மஞ்சகுப்ப நாட்டில் பிறந்தவள், மஞ்சள் வியாபாரம் செய்து வந்தவரின் மகள், மேகங்கள் (மஞ்சு) வந்து தூங்கும் அளவிலான உயர்ந்த மாளிகையில் வளர்ந்தவள், மெத்தை (மஞ்சம்) விரித்த வீடுகளில் வசித்தவள் என்ற கருத்துகளுக்கேற்ப அவளை மஞ்சநாட்டில்லத்தாள் என அழைத்து இனி அவள் குழந்தைகள் "மஞ்ச நாட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

பளிங்கில்லம்

சிவருத்திரரின் மூன்றாவது மனைவியான நள்ளி வேந்தர் குமாரியான தத்தை, அரண்மனைப் பெண், பளிங்கு மாளிகையில் வசித்தவள் என்று பொருள் விளங்க பளிங்கில்லத்தாள் என்று அழைத்தார். அவள் குழந்தைகள் "பளிங்கில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

சோழிய இல்லம்

சிவருத்திரரின் நான்காவது மனைவியான வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் மகளான மதி, சோழி எனும் மண்வெட்டி முதலிய உழவுச் சாதனங்கள் உடைய வீட்டில் பிறந்தவள், பன்னாங்குழி எனும் சோழியாடியவள், சோழிய வகுப்பினள் எனும் பல கருத்துக்கள் வர சோழியில்லத்தாள் என்று கூறினார். அவள் குழந்தைகள் "சோழிய இல்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

தோரணத்தில்லம்

சிவருத்திரரின் ஐந்தாவது மனைவியான மித்திரசேனையின் சுயம்வரம் மண்டபம் முழுவதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்டும் சுயம்வரத்தின் போது மணமாலைத் தோரணம் கையில் கொண்டு வந்ததையும், அம்மான் (தாய்மாமன்) மகள் என்கிற தோரணையிலும் தோரணத்தில்லத்தாள் என்று அழைத்தார். அவள் குழந்தைகள் "தோரணத்தில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார் -என்று சிவருத்திர புராணம் தெரிவிக்கிறது.

திருமண உறவு முறை

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி வரும் இன்றைய நிலையில், துவக்கத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிவழியை தாயின் வழிக்குக் கொண்டு வந்த ஒரு சில சமுதாயத்தில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயமும் ஒன்று. இதன் மூலம் இச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அந்தப் பெண்ணின் வழிமுறையிலேயே அழைக்கப்படுகின்றனர். அதாவது அந்தப் பெண்ணின் இல்லம் வழியே குழந்தைகளுக்கும் இல்லமாக இருக்கிறது. இந்த இல்லங்களை அடிப்படையாகக் கொண்டு திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து சிவருத்திர புராணம் இப்படி கூறுகிறது,
"சிவருத்திரர் தனது மக்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு இல்லத்து ஆணுக்கும் மற்றொரு இல்லத்துப் பெண்ணுக்குமாக திருமணம் செய்து கொள்ளும் புதிய வழிமுறையை உருவாக்கினர். இதன்படி, முதல் மனைவி மகனான மூட்டில்லத்தைச் சேர்ந்த தருமகூத்தனுக்கு நான்காவது மனைவி மகளான சோழிய இல்லத்துப் பெண்ணான மந்திரையையும், இரண்டாவது மனைவி மகனான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த தருமனுக்கு முதல் மனைவி மகளான மூட்டில்லத்தைச் சேர்ந்த காந்திமதியையும் , மூன்றாவது மனைவியின் மகனான பளிங்கில்லக் கலுழனுக்கு இரண்டாவது மனைவியின் மகளான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த மந்திரையையும் , நான்காவது மனைவியின் மகனான சோழிய இல்ல இலவனுக்கு மூன்றாவது மனைவியின் மகளான பளிங்கில்ல சுதையையும் திருமணம் செய்து வைத்தார். தோரணத்தில்ல மனைவியின் மகன் புரந்திர சிங்கருக்கு மூட்டில்லக் காந்திமதியின் மகள் சந்திராவையும், பளங்கில்லச் சுதையின் மகள் பூசனையை தோரணத்தில்லக் காரணச்சாமிக்கும், தோரணத்தில்ல மதியம்மையை சோழிய இல்ல இலவனுக்கு இரண்டாம் மனைவியாகவும் மணம் முடித்து வைத்தார்.
இப்படி திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தாய் எந்த இல்லத்தைச் சேர்ந்தவரோ அதையே இல்லமாகக் கொள்ள வேண்டும். ஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர பிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு புதிய திருமண உறவு முறையை வகுத்தார்."[1] இந்தத் திருமண உறவுமுறை தமிழகத்திலிருக்கும் மற்ற சாதியினர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டுகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையான சாதியினரில் ஒரு ஆண் தனது அக்காள் மகளை மணமுடித்துக் கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. ஆனால் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தில் அக்காள் மகள் இல்லம் எனும் அடிப்படையில் ஒரே இல்லமாக அமைந்து விடுவதால் தாய்மாமனை மணந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்தினர் நிலை

பொதுவான நிலை

  • இந்தியாவில் தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராக அறிவிக்கப் பட்டிருக்கும் இவர்கள் தமிழக அரசால் உயர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் என்று அறிவிக்கப்பட்ட சமுதாயத்தினரால் கூட இன்றும் தமிழகத்தில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைப் போலவே இருந்து வருகின்றனர்.
  • “கேரளாவில் புழுக்களைவிட மோசமாக கருதப்பட்ட ஈழவ மக்களைப் போலவே தமிழகத்தில் ‘இல்லத்து பிள்ளைமார்’ என்கிற கைத்தறி நெசவு செய்யும் சாதியினர் இருந்தனர். மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வெளியூர்களுக்குக் கிளம்பிப் போவதைப் பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் குறைந்தபட்ச மானத்தோடு வாழ வழியில்லாமல், வேறு ஊர்களில் அடைக்கலமாகப் போனார்கள். இது என்னைக் கடுமையாக பாதித்தது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.[2]

கல்வி மற்றும் பொருளாதார நிலை

  • இவர்கள் இன்னும் கல்வி, பொருளாதார நிலையில் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர். இதுவரை நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் இந்த சமுதாயத்தினர் ஒன்றிரண்டு பேர்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசு பதவிகளில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை நிலையில்தான் இவர்கள் இருந்து வருகின்றனர். மொத்தத்தில் சமூக, பொருளாதார நிலைகளில் தாழ்ந்த நிலையிலுள்ள இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் இவர்கள் (தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது வருந்தத் தக்கது.

அரசியல் பங்களிப்புகள்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்

உள்ளாட்சி அமைப்புகள்

கட்சிப் பொறுப்புகள்

செப்புப் பட்டயம்

1564 ஆம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த இராணி மங்கம்மாள் இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தவர்களைப் பாராட்டும் வழியாக செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்த செப்புப் பட்டயத்தில் இருக்கும் தகவல்:
முதலில் அக்கால நடைமுறைப்படி, ராணியின் பராக்கிரமங்களையும், மதுரையம்பதியின் சிறப்பையும் கூறி, அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதரையும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியக் கடவுளையும் போற்றுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரையில் வாழும் ஐந்தில்ல முறைப் பணிக்கமார் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் அன்னதானம் உண்டு பண்ணுவதற்கு மதுரையில் வாழும் ஐந்தில்ல முறையார் முதல் தெற்கே கோட்டாறு, நாஞ்சில் நாட்டுக்கு வடக்கே, மலையாளத்திற்கு கிழக்கே, வடக்கே வேங்கட மலை வரையும், தஞ்சாவூர் உள்ளிட்ட சூரிய கிரகணம் படும் பூமியில் வாழ்ந்து வரும் ஐந்தில்லப் பணிக்கமார் அனைவரும் சேர்ந்து, மதுரையில் கூடி சேர்த்த பொது நிதியைக் கொண்டு சத்திரம் கட்டி, அன்னதானமும், விளக்கு நைவேத்தியமும் உண்டு பண்ணினார்கள் என்றும் கூறி, இவர்களது இந்த சேவை சூரிய சந்திரர்கள் உள்ளவரை தொடரும் என வாழ்த்தி, இவர்களுக்கு யாராவது இடைஞ்சல் செய்தால் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செப்புப் பட்டயம் பொதுமக்கள் பார்வைக்காக மதுரை அருங்காட்சியகம் வழியாக மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டுள்ளது.

சமுதாயச் சிறப்புகள்

நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார்

வைணவக் கொள்கையில் ஈடுபாடுடைய பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவர் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் குலத்தில் பிறந்தவர் என்பதைக் கீழ்காணும் தகவல்கள் மூலம் அறியலாம்.
  • பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
  • தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினரான சான்றோர்குலத்தை சேர்ந்தவர்.[3]

மருதநாயகம்

மருதநாயகம், கான் சாஹீப் என்று அழைக்கப்பட்ட முகமதுயூசுப்கான் சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725 ஆம் ஆண்டு இல்லத்துப் பிள்ளைமார் இனத்தில் பிறந்தார். பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார்.[4],[5]

இல்லத்துப் பிள்ளைமார் கல்வி நிறுவனங்கள்

இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் இச்சமுதாயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நிறுவனர்களின் நிர்வாகங்களிலுள்ள சில கல்வி நிறுவங்கள்

அமைப்புகளின் நிர்வாகங்கள்

  • மதுரை பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளி, சம்மட்டிபுரம், மதுரை.
  • இல்லத்தார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி.

தனிப்பட்ட நிறுவனர் நிர்வாகங்கள்

தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த வி.பி.எம்.சங்கர் என்பவரின் தலைமையிலான வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்:
  • வி.பி.எம்.எம். மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்
  • வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்.
  • வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்.
  • வி.பி.எம்.எம். மகளிர் ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணன் கோயில்.
  • வி.பி.எம்.எம். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணன் கோயில்.

கேரள ஈழவர்கள்

  • தமிழ்நாட்டின் அருகிலுள்ள கேரளாவில் இருக்கும் ஈழவர்கள் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்துடன் தொடர்புடையவர்கள். கேரளாவின் அனைத்துப் பகுதி ஈழவர்களிடமும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே உள்ள இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக கேரளாவின் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஈழவர்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் ஒன்றாக இருக்கிறது. இவர்கள் மொழியால் மட்டுமே வேறுபட்டு இருக்கிறார்கள்.
  • கால்டுவெல் எழுதிய "Sannars of Tamilnadu என்ற புத்தகத்தில் வரும் ஒரு கதையில் நாடார்கள் ஈழத்துல இருந்து பனங்கொட்டையோட வந்தாங்க என்றுள்ளது. ஈழம் என்ற சொல்லுக்குத் தமிழில் பனை என்ற பொருள் உண்டு. பனைமீது விதிக்கப்பட்ட வரிக்கு ஈழம்பூச்சி என்றே பெயர். ஈழவர் என்று கேரளாவிலே சொல்லப்படுகின்ற சாதியார் ஈழத்திலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். அதுபோல நெல்லை மாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள். அவர்களும் அங்கிருந்துதான் வந்திருக்கணும்.[6]
  • கேரளாவில் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதியான ஈழவர் சமுதாயத்தில் பிறந்த ஸ்ரீ நாராயணகுருவின் படம் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வீடுகளில் இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சில தொடர்புத் தகவல்

  • சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய "வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" என்ற நூலின் மூலம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் குறித்து கீழ்கண்ட தகவல்கள் தெரியவருகிறது.
கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திராகர்நாடகா மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர்.[7] சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை.கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.
  • சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். இக்குறிப்புகளே மேற்படிச் சமூகத்தவர்க்கும் சான்றோர் குலத்தவர்க்கும், உள்ள தொடர்புகளை உணர்த்த போதுமானவையாகும். சான்றோர் குலத்தில் தோன்றி, அந்தஸ்தை இழந்து "காவிதி" பட்டம் பெற்றவர்கள் இல்லத்தார் எனப் பத்திரகாளியம்மன் கதை [வரி 1884 – 85] கூறும்.
  • பிரபுக்கள் வர்க்கத்துக்குரிய அல்லது சத்திரிய வர்ணத்துக்குரிய "சான்றோர்" பட்டம் தமக்குக் கிடைக்காததாலும், தாம் வைசிய வருணத்துக்குரிய அந்தஸ்தோடு மட்டுமே விடப்பட்டதாலும் ஈழவர் காலப் போக்கில் "இல்லத்துப் பிள்ளை" என்ற தமது குலப் பட்டத்தின் வழியாக வேளாளர் குல அடையாளத்தை ஏற்றிருக்க வேண்டும்" [ பக்கம்.174 – 175 ]
  • ஈழத்தின் மீது தமிழக அரசர்கள் போர் தொடுத்த நிகழ்ச்சி முதன்முதலாகக் கரிகாலனின் படையெடுப்பாகவே நம் கவனத்திற்கு வருகிறது. அப்படையெடுப்பின் போது பன்னீராயிரம் இலங்கையரைக் கரிகாலன் சிறைப்பிடித்து வந்தான். காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினான். இவ்விலங்கையரே ஈழவர் என்றும் பணிக்கர்களென்றும் தீயர்களென்றும் கேரளத்தில் அழைக்கப்படுகிற மக்களாகும் என்று சிலர் கருதுகிறார்கள். தமிழகத்தினுள் இல்லத்துப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மக்களும் இவர்களே. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஈழத்துப் பிள்ளைகள் என்பதே இல்லத்துப் பிள்ளைகள் என மருவி வழங்குகிறதென்ற உண்மைக்குச் சான்றுகள் உள்ளன. பட்டப்பெயர்கள், சாதி உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு கரிகாலன் பிடித்துவந்த மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பது தெரியவில்லை. இதையும் ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முறையான வரலாற்றாய்வு என்று எதுவுமே நடைபெறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
  • சிங்களர்களின் வெறியால் முதலில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது,இன்றைய கேரளாவில் இருக்கும் ஈழவர்கள்.அடுத்து இல்லத்துப் பிள்ளைமார் என்று தமிழகத்தில் அழைக்கப்படும் ஈழத்துப் பிள்ளைமார் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தனர்.

மேற்கோள்கள்

இதையும் பார்க்க

வெளி இணைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக