புதன், 5 ஏப்ரல், 2017

ஓசோன் பற்றி மதுரை மீனாட்சி கோவிலில் குறிப்பு அறிவியல் வானியல்

aathi tamil aathi1956@gmail.com

5/11/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ”ஓசோன்” பற்றிய தகவல்!
700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவலை மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பூமிக்கு மேலே 15 கி.மீ. முதல் 30 கி.மீ. உயரத்தில், இயற்கையாகவே ஓசோன்
படலம் அமைந்துள்ளது.
சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத்
தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது.
இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க
உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது.
அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ஓசோன் படலம்
சேதமடைவது, சர்வதேச பிரச்னை’ என்று கூறியிருந்தது.
மீண்டும் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச்,
ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு
எப்போதிருந்து தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா?
அதை முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கான ஆதாரம்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள
சக்கரத்தில் உள்ளது என்று கூறியுள்ளனர்.
நியூ இந்தியா நியூஸ்

படலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக