|
24/10/15
![]() | ![]() ![]() | ||
Puli Vamsam - புலி வம்சம்
'விசாகப்பட்டினம்', இவ்வூரின் பழைய பெயர் என்னவென்று தெரியுமா?
குலோத்துங்க சோழப் பட்டினம் என்பதாகும்.
இக்குலோத்துங்க சோழனின் இயற்பெயர் என்னவென்று தெரியுமா?
இராசேந்திரன் என்பதாகும். இவனது அன்னை தன் தந்தையான முதலாம் இராசேந்திர
சோழரின் பெயரையே இவனுக்கும் சூட்டினார். பிற்காலத்தில், சோழப்பேரரசின்
அரியணை ஏறுகையில்தான் 'குலோத்துங்க சோழன்' என்னும் பட்டப் பெயர்
இடப்பட்டது.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் நீண்ட, நிலைத்த ஆட்சியைத் தந்த இவன், தனது
ஆட்சியின்போது வணிகர்களுக்குச் சாதகமாகச் சுங்கவரியை நீக்கியதால்,
‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற பெயரையும் பெற்றான்.
இவன் தமிழன்னைக்கும், தெலுகுத் தந்தைக்கும் பிறந்திருந்தாலும், தமிழில்
பெரும் புலமையோடு விளங்கியதாகச் செயங்கொண்டார் குறிப்பிடுகிறார்.
இவன் சோழப் பேரரசின் ஆட்சிக்கேறுகையில், சோனாடெங்கும் மிகப்பெரும்
குழப்பமும் கழகமும் சூழ்ந்திருந்ததாகவும், பின்னர் குலோத்துங்கன்
ஆட்சிக்கேரியதன் பின்னே அனைத்தும் இவனால் அடக்கப்பட்டு, நீடித்த
நல்லாட்சி நடந்ததாகவும் செயங்கொண்டார் தனது கலிங்கத்துப் பரணியில்
குறிப்பிடுகிறார்.
"மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27
சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்து போயே. 28
ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29
கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30
காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே" 31
அதாவது,
"வேதம் ஓதியோர் வேதமரபை மறந்தனர். நீதி குலைந்தது, நேர்மை அழிந்தது,
ஒழுக்கம் மறைந்தது, எங்கெங்கு நோக்கினும் அடிதடி, கொலை, கொள்ளை என
நடந்தது. ஆட்சியாளர் தர்மம் மறந்தனர், ஆலயங்கள் சோம்பிக்கிடந்தன.
தேவதைகள் வலுவிழந்து நின்றன. மங்கையரின் கற்பு சீர்கெட்டது. சாதிகள்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அழிவைப் பெரிதாக்கின. எங்கும் காரிருளான
வாழ்க்கை இருந்தது. அந்தக் காரிருளான வாழ்க்கையில் ஒளிபுகுத்த வந்தவன்
குலோத்துங்க சோழன்..."
என்று குறிப்பிடுகிறார்.
இப்படியான வேளையில் இந்தக் குலோத்துங்கன் ஆட்சியைப் பிடித்து அரசனானதும்,
அமைதி எங்கும் நிலவி, தர்மம் தலையெடுத்துத் தழைத்தோங்கி, கோயில்கள்
சிறந்து, சாதிப் பிரிவினைகள் மட்டுப்படுத்தப்
பட்டு, எதிரிகளைக் கட்டுப்படுத்தி ஒரு பேரரசனாக இவன் உருவானதாகவும் குறிப்பிட்டுள்ள
ார்.
(ஆயினும், சோழப் பேரரசைக் கைப்பற்றுவதற்காக இத்தகையக் குழப்பங்களனைத்தும்
குலோத்துங்கனாலேயே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட
தாகவும் ஒரு கூற்று உண்டு)
விசாகப்பட்டினத்துக்கும் குலோத்துங்கனுக்கும் தொடர்பு உண்டுதான்.
கலிங்கத்துப் போர் நடந்து முடிந்ததும், குலோத்துங்கன் தன்னுடைய பெயரை
இந்த விசாகப் பட்டினத்திற்கு வைத்துவிட்டுப் போனதாகப் பல அறிஞர்கள்
சொல்லியிருக்கின்றனர்.
கோதாவரி வடகரை புண்ணியத் தலமான 'திராட்சாராமம்' என்னும் அழகிய ஊர்,
குலோத்துங்கன் காலத்தில் ’இடர்க்கரம்பை’ என்னும் அழகிய தமிழ்ப்பெயரில்
வழங்கி வந்தது. 'விஜயவாடா'கூட 'இராஜேந்திர சோழபுரம்' என்றும் அப்போது
அழைக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு ஏன்? ஆந்திரத்தையும் தாண்டிச் சட்டிஸ்கரில் இன்றுள்ள 'பஸ்தார்'
என்னும் நகரம், சோழர்கள் காலத்தில் ‘சக்கரக்கோட்டம்’ என்ற தமிழ்ப்
பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இப்படியெல்லாம் இன்று குறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தமிழக
எல்லை தாண்டி, ஏன்? கடலையும் தாண்டித்தான் அன்றைய தமிழ் நிலம்
விளங்கியது!
இன்றோ, இருக்கும் தமிழகத்திற்குள்
ளும் தமிழரல்லாதோரின் ஆக்கிரமிப்பு, ஆளுமை, போன்றவற்றால் தமிழகம்
மட்டுமல்ல, தமிழனும்தான் சீர்கெட்டுக் கிடக்கிறான்.
இழந்த பெருமையையும் நிலத்தையும், அழிந்த நம் பண்பாட்டையும் மீட்டெடுக்க,
மீண்டும், எப்போழுதய்யா வருவான், ஒரு உண்மைத் தமிழ்த் தலைவன்!!!?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக