சனி, 8 ஏப்ரல், 2017

கபிலர் தாவரவியல் 99 தாவரம் ஒரே பாடலில் அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

22/10/15
பெறுநர்: எனக்கு
Kamala Balachandar > Kurinjiகுறிஞ்சி
ப்பாட்டில் மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..
http://www.tamilmantram.com/vb/archive/
index.php/t-25979.html
கபிலர்….தமிழ்ச்சங்கப்புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள்
பாடப்பெற்றுள்ளது. இவர் புலனழுக்கற்ற அந்தனாளன் எனும்
பாராட்டைபெற்றவர்.இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில்
பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும்
ஒன்று.இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின்
பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல
தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர். வால்மீகியும், காளி தாசனும் தங்கள்
பாடலக்ளில் தாவரங்களைக்குறித்து பாடி இருந்தாலும் இப்படி 99 தாவரங்களின்
பெயர்களை ஓரே பாட்டின் மூலம் கூறவில்லை.
குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் பாடல் வரிகள்...
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக