புதன், 5 ஏப்ரல், 2017

நாயக்கர் ஆட்சி 50% கன்னட கல்வெட்டு கர்நாடகம் பழமை தமிழிசை

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
கருநாடகம் எனும் வழக்கு
விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த சங்கம மரபும், அடுத்தடுத்து ஆட்சிசெய்த சாளுவ,
துளுவ மரபுகளும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவை என்பதை ஏற்கனவே கண்டோம்.
விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தவை எனக் கண்டறியப்பட்ட 7000 கல்வெட்டுகள்
மற்றும் 300 தாமிரப் பட்டயங்களில் பாதிக்கும் மேலானவை கன்னட மொழியிலானவை
என்பது சிந்திக்கத்தக்கது.
விஜயநகரப் பேரரசு தம்மை விஜயநகர சாம்ராஜ்யம் என்றும், கருநாடக சாம்ராஜ்யம்
என்றும் குறிப்பிட்டுக் கொண்டது. விஜயநகரப் பேரரசர்கள் விரூபாட்சன் எனும்
விஜயநகர சிவனையும், வேங்கடாசலபதி எனும் திருப்பதித் திருமாலையும் முதன்மைத்
தெய்வங்களாக வணங்கினர். கிருஷ்ண தேவராயர் தனது ஜாம்பவதி கல்யாணம் எனும்
சமஸ்கிருத நூலில் விரூபாட்சனைக் "கர்நாடக ராஜ்ய ரக்ஷாமணி " (கருநாடக அரசைக்
காக்கும் மாணிக்கம்) எனப் புகழ்கிறார். இதனாலேயே,
ஃ விஜயநகர ஆட்சிக்காலம் முதற்கொண்டு, வடநாட்டு இசுலாமிய அரசுகளும்
வெளிநாட்டுப் பயணிகளும் விஜயநகர அரசை மட்டுமின்றி, விஜயநகரப்
பேரரசர்களாலும்
அவர்தம் மரபினராலும் ஆளப்படும் அனைத்துப் பகுதிகளையும் கருநாடகம் என்று
அழைக்கும் வழக்கம் தோன்றியது.
ஃ பின்னாளில் ஆற்காட்டிலிருந்து ஆண்ட நவாபும் கருநாடக நவாப் என்றே
அழைக்கப்பட்டார்.
ஃ அறுநூறாண்டுக் காலம் விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர்
ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த பாளையக்காரர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த (இப்போதும்
இருக்கிற) தமிழகத்திற்கும் கருநாடகம் என்ற பெயர் ஏற்பட்டது.
ஃ தமிழகத்தின் கிழக்குச் சோழமண்டலக் கடற்கரை கருநாடகக் கடற்கரை ஆனது.
தமிழிசை தெலுங்கு மயமான (குறிப்பாக, தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சிக்
காலத்தில்) பின்பும், அது தெலுங்கிசை என்றோ, ஆந்திர இசை என்றோ அழைக்கப்படாமல்
கருநாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஃ விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் பழமைவாதத்தை - சாதியமைப்பைக்
கடுமையாகப் பின்பற்றியதாலேய
ே பழமைவாதத்தை வெகுமக்கள் கருநாடகம் என்று
குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது, இன்றும் பழமைவாதியை "அவர் சுத்தக்
கருநாடகம்!" என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக