புதன், 5 ஏப்ரல், 2017

பிராமண சத்திரிய மோதல் ஆதித்த சோழர் கொலை பார்ப்பனர் 1

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
Puli Vamsam - புலி வம்சம்
"பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் படுகொலையும்"
(நண்பர்களே, நான் தற்பொழுது புலிவம்சப் புதினத்தின் பதினைந்தாம்
அத்தியாயம் எழுதிவரும் நிலையில், அடுத்துவரும் மற்றொரு அத்தியாயத்தில்
ஆதித்த கரிகாலன் படுகொலை நிகழ்வு பற்றி விவரிக்க இருப்பதால், திரு. நடன
காசிநாதர் அவர்கள் ஆதித்த கரிகாலன் படுகொலை குறித்து எழுதிய
கட்டுரையொன்றை உங்கள் பார்வைக்கு வைப்பது பொருத்துமாக இருக்கும்
என்றெண்ணி, அக்கட்டுரையை இங்களிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், இந்திய
வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்த இந்தப் பரசுராமனின் சூளுரையே,
தொடர்ச்சியாய்ச் சோழ அரசர்கள் மருமமான வகையில் மாண்டதும் அல்லது
கொல்லப்பட்டதும், அதற்கான வரலாற்றுக் குறிப்புகள் மறைத்தழிக்கப் (?)
பட்டதும், இன்று இத் தமிழ்மண் மிகவும் சுருங்கிப்போனதற்கான ஒரு முக்கியக்
காரணமாகவும், தமிழன் உலகெங்கும் புறக்கணிக்கப்பட்டு அவதியுறுவதற்கான
முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது என்பது கண்கூடு. இனி,
கட்டுரையைக் காண்போம்)
கட்டுரை:
சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி. 985இல் முடிபுனைந்திருக்கிறான்.
முடி புனைந்து ஒரு சில ஆண்டுகள் ஆவதற்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த
காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக் கிறான் என்பது அவனது
மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து
காந்தளூர்ச் சாலையைத் தாக்கியதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று
கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆதித்த கரிகாலச் சோழன் கொலை
பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன்,
அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்
றனர். சுந்தரசோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில
சூழ்ச்சிக்காரர் களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்.
இத்துன்பச் செய்தி கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோயிலின் ஒரு பகுதியாக
விளங்கும் உடையார் குடி அனந்தீசுவரன் கோயில் கல்வெட்டினால் 1
தெரியவருகிறது. இவ்வூர், கல்வெட்டுகளில் “வீர நாராயணபுரச்
சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப் பெறுகிறது. ஆதலால் இது முதலாம்
பராந்தகச் சோழனால் ஏற்படுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனருகில்தான் இப்பராந்தகச் சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற வீரநாராயண
ஏரியும் உள்ளது.
வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம
்தான் வைணவ இலக்கியங்களில் பேசப்படும் வீரநாராயணபுரம் ஆகும். இவ்வீரநாராயணபுர
த்தில்தான் வைணவப் பெரியார் நாதமுனியும், அவரது திருப்பெயரர் யமுனாசார்யா
என்று வழங்கப்பெற்ற ஆளவந்தாரும் தோன்றினர். 2 ஆதலால் நான்கு வேதங்களும்
கற்ற பிராமணர்கள் இவ்வூரில் முதலாம் பராந்தகன் காலம் முதலே வைணவ
ஆசாரியார்கள் காலம் முடிய வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
இங்குப் பெரும்பாலும் பிராமணர்கள்தான் நில உடைமையாளர்களாக
விளங்கியிருக்கின்றனர் என்பதையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உடையார்குடிக் கல்வெட்டு
இவ்வூர் அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில்
பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் கீழே காண்போம்.
1) ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்
மர்க்கு யாண்டு 2ஆவது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாராயணச் சதுர்வேதி
மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்க ளுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்
“பாண்டியனைத் தலை கொண்ட கரிகால சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)...
(இவன்) றம்பி
2) ரவிதாஸனான பஞ்சவன் ப்ரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி
சோழ ப்ரஹ்மாதிராஜனும் இவகள் உடப்பிறந்த மலையனூரானும் இவகள் தம்பிமாரும்
இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிம(£ர்) பேராலும் (இவகள்...) றமத்தம்
3) பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த
மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை
வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ் வனைவர் (முறி)யும்
நம்மாணைக் குரியவாறு கொ
4) ட்டையூர் ப்ரஹ்மஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத்
தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவ
ாறு குடி யடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை
குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர... 3
மேலே காணப்பெற்ற கல்வெட்டில், “பாண்டியன் தலை கொண்ட கரிகாலச் சோழனை”க்
கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப் பெற்றிருக்கிறது.
அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின்
பெயர்களையும் குறிப்பிட்டிருக
்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பிராமணர்கள் (பிரமாதிராஜர்)
என்பதைக் காட்டுகின்றன. அப்பிராமணர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச்
செய்தார்கள் என்பது வரலாற் றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து
வருகிறது.
கொலைக்கான காரணம்
ஆனால் சில வரலாற்றறிஞர்கள் சில ஊகங்களை வெளிப்படுத்தியி
ருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் வரலாற்றுப் பேரறிஞர் என்று
போற்றப்படும் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், கண்டராதித்த சோழரின் மகனும்,
சுந்தரசோழனின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான உத்தமசோழன்தான் இவ்வந்தணர்களை ஏவி
ஆதித்த கரிகாலனைக் கொன்றிருப்பான் என்று கருதியுள்ளார். 4 இக்கருத்து
முற்றிலும் தவறு என்று வரலாற்றிலும், தமிழிலக்கியத்தி
லும் சிறந்த அறிஞரான தி.வை. சதாசிவ பண்டாரத்தார் தக்க சான்றுகளுடன்
மறுத்திருக்கிறார். 5 இருப்பினும் அவர் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத சென்னை
விவேகாநந்தர் கல்லூரிப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் கருத்தே
மேலோங்கி நிற்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். 6
“இக்கட்டுரை உள்நோக்கம் கொண்ட கட்டுரை என்றும், தம் மரபினரைப் பாதுகாக்க
எடுத்துக்கொண்ட முயற்சி” என்றும் தெரிவித்து வரலாற்று அறிஞர் க.த.
திருநாவுக்கரசு தம் கட்டுரையன்றில் சாடியிருக் கிறார். இவர், ஆதித்த
கரிகாலன் பாண்டியனை வென்று அவனது தலையைக் கொண்டதால், பாண்டியனின் மரபினர்
இவ்வந்தணர்களில் ஒருவனான “பஞ்சவன் பிரமாதிராசன்” மூலம் ஆதித்த கரிகாலச்
சோழனைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று புது விளக்கம்
தந்துள்ளார். 7 இவர், “பஞ்சவன் பிரமாதிராசன்” பாண்டியர்களின் அரசு
அலுவலர் என்று கருதியிருக் கிறார். இவர் குறிப்பிட்டுள்ள “பஞ்சவன்
பிரமாதிராச னின் முழுப்பெயர் “ரவிதாசன் பஞ்சவன் பிரமாதி ராசன்”.
“ரவிதாசன்” என்பது ரவி குலத்தவனின் (சூரிய குலத்தினனின்) அடியான் என்று
பொருள். எனவே, சூரியகுல அடியானாகிய பஞ்சவன் பிரமாதிராசன் சோழர்,
பாண்டியர்களை வென்றபொழுது “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருதுப் பெயரைச்
சோழவேந்த னால் சூட்டப்பட்டவனாகலாம். ஆதலால் அவன் சோழ அதிகாரியே தவிர
பாண்டியனின் அரசதிகாரியில்லை.
கொலைக் கரணியம் யாது?
இந்தச் சூழ்நிலையில், ஆதித்த கரிகாலச் சோழனைக் கொன்ற தீயவர் யாவர்?
அவனைக் கொன்ற தற்கான கரணியம் யாது? என்பது நம்முன் நிற்கும்
வினாக்களாகும். இதற்கு விடை காண வேண்டு மென்றால் தொன்மத்தையும்,
இலக்கியத்தையும், கல்வெட்டு, செப்பேட்டு வரிகளையும் நாம் ஆராய வேண்டுவது
தேவையாகிறது.
தொன்மம் கூறுவது என்ன?
சூரிய குலத்தில், கேகயநாட்டுக் கிருதவீரியனுக்கும், சுகந்தைக்கும்
பிறந்தவன் கார்த்த வீரியன். இவன் ஒரு சத்திரியன். இவன் சமதக்கினி
முனிவரிடமிருந்த
ு “ஓமதேனு” எனும் பசுவைக் கவர்ந்ததனால் பரசுராமர் இவனைக் கொன்றார். இதைக்
கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில்
சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன்,
சமதக்கினி முனிவர் தேவியார் இருபத்தொரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு,
அவன் தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர்
கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல மரபினர்களை அழிப்பதாக உறுதிகூறி இருபத்
தொரு தலைமுறை கருவறுத்தனன். அப்போது தப்பிய வர்கள் கார்த்தவீரியனின்
புதல்வர்களாகிய சயத்துவசன், வீரசேனன், விருடணன், மதுசூரன் அல்லது
ஊர்ச்சிதன் ஆகியோராவர் என்று மச்சிய புராணம் கூறுகிறது. 8
இத்தொன்மத்தில் சூரிய குலத்தின் 21 தலைமுறைச் சத்திரியர்களைப் பரசுராமர்
பூண்டோடு அழித்தார் என்பது மையக் கருத்தாகும். ஆனாலும் அவரிடமிருந்து
தப்பியவர்களும் சிலர் இருந்தனர் என்பதுமாகும்.
இலக்கியக் கூற்று
இத்தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை
மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.
“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக்
கன்னி யேவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போன் யாரென நினைஇ
........................
காவற் கணிகை தனக்காங் காதலன்
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுத லில்லான்
ககந்தனா மெனக் காதலிற் கூஉய்
அரசா ளுரிமை நின்பால் இன்மையின்
பரசுராம னின்பால் வந்தணுகான்”
அதாவது, பரசுராமன் (மழுவாள் நெடியோன்) அரசகுலத்தை (சத்திரிய குலத்தை)
அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகர் நோக்கி வந்து
கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை
மகனான ககந்தனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்ட
ு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ
அரசனிடம் கூறியதுதான் அச்செய்தி. 9 சோழர் சூரிய குலத்தைச் சார்ந்த
சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழவேந்தன் காந்தமனைத் தாக்கவந்
திருக்கிறான்.
மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்ந்து
பார்ப்போமா னால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள்மீது
பரசுராமனுக்கும் அவரது மரபினருக்கும் தொடர்ந்து சினமும் எரிச்சலும்
இருந்திருக்கிறத
ு என்பது தெரியவரும்.
கல்வெட்டு, செப்புப் பட்டயச் சான்று
இயல்பாகவே கற்றறிந்த அந்தணர்கள் சத்திரியர் மீது மனக்கசப்பு

பிராமணர் சத்திரியர் பரசுராமன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக