ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மபொசி இந்து எதிர்ப்பு மதவெறி எதிர்ப்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

3/10/15
பெறுநர்: எனக்கு
தமிழ்ச் செல்வன் தமிழ் உடன் Arul Natesan
'தமிழ்மண் மீட்புப்
போராளி' ம.பொ.சிவஞானம் நினைவு நாள்
3.10.1995 இந்து மகாசபை மொழிவழி நாட்டுப்பிரிவினையை எதிர்த்து ’ஜனபாதம்’
என்ற அமைப்பை உருவாக்கத் திட்டம் அளித்தபோதும், இந்து மகாசபையினர்
மொழிவழி நாட்டை எதிர்த்தபோதும், சிலம்புச் செல்வர்.ம.பொ.சி அவர்கள் அதை
மறுத்துக் கீழ்க்கண்டவாறு விடையளித்துள்ளார்.
”காங்கிரசின் தயக்கத்தைச் சாதகமாகக் கொண்டு மதவாதிகளும் முதலாளிக்
கூட்டத்தாரும் தேசிய இனங்களின் உரிமைக் கிளர்ச்சிக்கு எதிராகப் பிரசாரம்
செய்துவருகின்றனர்.
இந்து மகாசபை, மொழிவழி நாட்டுப்பிரிவினையை ஏற்க மறுப்பதோடு, அதற்கு
எதிராகவும், பிரசாரம் செய்து வருகிறது. காரணம் என்ன?
தமிழர், ஆந்திரர், கன்னடர், மாராட்டியர், வங்காளியர் என்று மொழிவழியே இன
உணர்ச்சி வளர்ந்துவிட்டால், இந்து, முஸ்லிம்களிடையே வேற்றுமை குறைந்து
ஒற்றுமை வளரும்;
அப்புறம் ”அகண்ட இந்துஸ்தான்” கொள்கையும், ’இந்தி-இந்து-இந
்துஸ்தான்’ என்ற கோஷங்களும் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்பதே ஆகும்.
மற்றும், மொழிவழி இன உணர்ச்சி வளர்ந்ததால் மதத்தின் பேரால் அரசியலில்
புகுந்து அனர்த்தம் செய்ய மக்கள் இடந்தர மாட்டார்கள் அல்லவா?
ஆகவே, மதவாதிகள் மொழிவழிப் பிரிவினையை எதிர்ப்பில் வியப்பொன்றும் இல்லை.
”சுதந்திர இந்தியாவைத் தங்கள் சுரண்டல் புமியாக்க் கொண்டுவிட்ட வடஇந்திய
முதலாளிக் கூட்டமும் மொழிவழி நாட்டுப் பிரிவினையை
எதிர்க்கிறது.(சிலம்புச் செல்வர்.ம.பொ.சி., பிரிவினை வரலாறு, பக்கம்
10-11.)
மொழிவழி மாநிலங்கள் அமைவதை இந்துத்துவத்தின் அடிப்படையில் எதிர்ப்பவரை
இப்படியெல்லாம் சாடுகிறார் சிலம்புச் செல்வர்.ம.பொ.சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக