| வெள்., 9 ஆக., 2019, முற்பகல் 11:17 | |||
பாரதிசெல்வன் இலரா
காஷ்மீரில் யாருக்காக இயற்றப்பட்டது 35A?? -அ.முத்துக்கிருஷ்ணன்
மிகச்சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீர் பண்டித்துகள் தான் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்கிற முழக்கத்தை முன்வைத்து மகாராஜா ஹரிசிங்கிடம் முறையிட்டார்கள். பஞ்சாபி முஸ்லிம்கள் மற்றும் வெளியாட்கள் தொடர்ந்து காஷ்மீரில் நிலம் வாங்கி வருகிறார்கள் இது எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, தொடர்ந்து வெளியாட்கள் இங்கே குடியேறி எங்கள் வேலை வாய்ப்பை பறித்து வருகிறார்கள் ஆகையால் உடனடியாக காஷ்மீரிகளாக அல்லாதவர்கள் இங்கு நிலம் வாங்குவதை தடுக்க ஒரு சட்டத்தை இயற்ற வழியுறுத்தினார்கள். ஆக இந்த தடை சட்டம் உருவாக காரணமே காஷ்மீரி பண்டித்துகள் தான் என்பதை வரலாற்றின் பக்கங்களுள் ஒரு சிறிய பயணம் செய்தாலே நாம் கண்டுணரலாம்.
ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் இதே சட்டம் ரத்து செய்யப்படுவதை அதே காஷ்மீரி பண்டித்துக்கள் கொண்டாடி மகிழ்வது வரலாற்றின் பெரும் நகைமுரண்.
வரலாற்றாசிரியர் பண்டித் ப்ரேம் நாத் பசாச் தனது காஷ்மீருக்கு உள்ளே எனும் நூலில் இவ்வாறாக பதிவு செய்கிறார், “நிலம் எல்லாம் மகாராஜாக்களுக்கு சொந்தமானதாக இருந்தது, அதை குத்தகைக்காரர்கள் வந்து விவசாயம் செய்ய எடுத்துக்கொள்வார்கள் இந்த நிலத்தை மறு குத்தகைக்கோ அல்லது விற்கவே அவர்களால் இயலாது, அந்த நிலத்திற்கு வருடாந்திர வரி செலுத்தும் வரை நிலம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்குள்ள மக்களுக்கு புதிய பிரச்சனை ஒன்று எழுந்தது. அதாவது வெளியாட்கள் வந்து காஷ்மிரில் உள்ள வேலை வாய்ப்புகளை அபரிக்கிறார்கள், அதனால் எங்களுக்கு இங்குள்ள நிர்வாக பதவிகள் கிடைப்பதில்லை, இதனை அடுத்து 1912ல் புதிய வரைமுறைகள் வகுக்கப்பட்டது. இந்த முறையும் “வந்தேறிகளை வெளியேற்று” முழக்கத்தை காஷ்மீர் பண்டித்துகளே முன்வைத்தார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலாக அரசு வேலைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்கள், அவர்கள் நிலம் வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாகவும் இல்லை.
1922ல் அமைச்சர்களின் கூடுகை ஒன்று அவர்களின் மன்னர் ஹரிசிங் தலைமையில் கூடியது, அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி இனி ஒவ்வொரு அரசு உத்தியோகத்திற்கும் வெளியாட்கள் நியமிக்கப்படும் போது இந்த நபரை எந்த பிரத்யேக காரணத்திற்கான நியமிக்க வேண்டும் அதற்கான விரிவான விளக்கத்தை அமைச்சரவையின் மூத்த அதிகாரிகளுக்கு ஆவணப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும், அதே வேலையில் அதே உத்தியோகத்திற்க
ு தகுதியான நபர் காஷ்மீருக்குள் இல்லை என்பதையும் அந்த ஆவணங்கள் நிருவ வேண்டும். அதே போல் வெளியாட்களுக்கு காஷ்மீரில் எந்த உதவித்தொகையோ அவர்களுக்கான பயிற்சி தொகையோ காஷ்மீர் அரசு ஏற்காது என்றும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. விவசய நிலம், வீடு கட்டுதல் என அனைத்து சலுகைகளும் இனி காஷ்மீரிகளுக்கு எனும் சட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. ஹரி சிங் மகாராஜாவாக பதிவியேற்றதுமே 1927, ஜனவரி 31 அன்று இவை எல்லாம் சட்டமாக இயற்றப்பட்டன.
வரலாற்றாசிரியர் பசாச் இந்த திருத்தங்கள், போராட்டங்கள் நிகழ்ந்த காலத்தை மிக விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். அதில் அவர் இந்த விவாதங்களில் எப்பொழுதும் இஸ்லாமியர்களின் கருத்துக்கள் அறியப்படத்தில்ல
ை அல்லது அவர்கள் வெளியே தான் நிறுத்தப்பட்டார்கள் என்கிறார். “ அன்றைய காஷ்மீரின் இஸ்லாமியர்கள் என்பவர்கள் தங்களின் உடலை போர்த்தவே போதிய உடையில்லாதவர்களாக, கந்தலான உடை அணிந்தவர்களாக, காலில் செருப்பு இல்லாதவர்களாக. ஒரு இஸ்லாமிய விவசாயி பார்க்க தெருவில் பிச்சை எடுப்பவரை போலவே காட்சியளித்தார், இவர் எங்கே அரசு உத்தியோகத்தை சென்று அலங்கரிக்க.
இஸ்லாமியர்கள் விவசாயத்தில் ஈடுபட்டார்கள், அவர்கள் வெயில் காலத்தில் ஆறு மாதம் உழைத்து அரசிற்கு வரிகளையும் கடனாக பணம் வாங்கிய வட்டிக்காரர்களுக்கு வட்டியையும் செலுத்தவே பெரும் பாடுபட்டார்கள். பெரும் பகுதியான இஸ்லாமியர்கள் விவசாய கூலிகளாகவே இருந்தார்கள். கிராமங்களில் இஸ்லாமியர்கள் விறகு வெட்டுபவர்களாகவும், தண்ணீர் எடுத்து வருபவர்களாகவும் இருந்தார்கள், அவர்கள் எல்லா விதமான உழைப்பு (அழுக்கான) தொடர்பான வேலைகளை செய்தார்கள். காஷ்மீரில் ஒரு இந்து என்பவன் இந்த சமூகத்தால் மதிக்கத்தக்கவனாக, ஒரு முஸ்லிம் என்பவன் கீழானவனாகவும் பார்க்கப்பட்டான். இந்த காஷ்மீரி பண்டித்துகள் தான் “ காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே” என்கிற போராட்டத்தை முன்வைத்தார்கள்.
வரலாற்றாசிரியர் பசாச் மேலும் எழுதுகிறார், 1927ல் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன் பஞ்சாபிகள் அரசு உத்தியோகங்களில் எடுக்கப்படுவது முற்றாக நின்று போனது. ஆனால் இந்த சட்டதிருத்தத்தால் பள்ளத்தாக்கில் உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்துவிடவில்லை. மகாராஜா ஹரி சிங் அவர்களின் தோக்ரா ஆதாரவு அல்லது தோக்ரா சாய்வினால் ஜம்முவில் வசித்தவர்கள் குறிப்பாக ராஜ்புத்துகளுக்கு எல்லா அனுகூலன்களும் கிடைத்தன, இப்பொழுது கூட பஞ்சாபிகள் விரட்டியடிக்கப்பட்டு அந்த குமாஸ்தா பணியிடங்களுக்கு காஷ்மீர் பண்டுத்துகள் வந்தார்கள் ஆனால் உயர் பதவிகள் எல்லாம் ராஜ்புத்துகளுக்கே சென்றன, இப்பொழுதும் முஸ்லிம்கள் இந்த சித்திரத்திற்கு வெளியே வெகுதூரத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் கவணிக்க வேண்டும்.
அதனால் இந்த சட்டப்பிரிவு 35A என்பது பஞ்சாபிகளை விரட்டியடிக்க காஷ்மீரி பண்டித்துகளின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மிர் மகாராஜா இயற்றியது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
சாதியம் ராஜ்புத் ராஜபுத்திரர் ஹரிசிங் பஞ்சாபி குடியேற்றம் பிராமணர் காஷ்மீரம் காஷ்மீரிகளுக்கே முழக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக