சனி, 5 டிசம்பர், 2020

நீலகேசி நூல் ஆறு மதம் பட்டியல் சமணம் ஆசீவகம் வேறு வேறு கிபி 6 நூற்றாண்டு சைவம் வைணவம் இல்லை

 

aathi tamil aathi1956@gmail.com

வெள்., 9 ஆக., 2019, பிற்பகல் 4:16
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
# நீலகேசி Vs # ஆசீவகம் ( # Ājīvika)
ஆசீவகம் சமணம் அல்ல அது ஒரு தனித்த மதம் என்பதற்கு சான்று ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #நீலகேசி. நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. காலம் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறு மதத்தின் மக்களிடம் செய்யும் வாதமே இந்த நீலகேசி காப்பியம். இந்த காலகட்டத்தில் இருந்தது வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே என்று தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் இந்து மதம் என்ற மதம் ஒன்று இல்லவே இல்லை என்பதும் தெரிகிறது. சமணம் வேறு ஆசீவகம் வேறு என்பதற்கும் சான்றாக இதுவே அமைகிறது. இதில் உள்ள கொள்கைகளை வைத்தே ஆசீவகத்தின் கொள்கையை பெரிதாக அறியமுடிகிறது. இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமான ஒன்று. அது யாதெனின், நீலகேசி வாதம் செய்த சமயங்களாவன,
1. புத்தம்
2. ஆசிவகம்
3. சாங்கியம்
4. வைசேடிகம்
5. வேத மதம்
6. பூத வாதம்
(7. ஏழாவதாக வாதம் செய்த நீலகேசியின் சமணம்)
மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லை. ஜைன (நிகண்ட வாதம்) நெறியினருக்குக் குழப்பமில்லாமல் தெரியும் தன் நெறியும் ஆசீவக நெறியும் வேறு என்று. அதேபோல, ஆசீவக நெறியினருக்கும் தெரியும் தன் நெறியும் ஜைன நெறியும் வேறு வேறு என்று. அதனால்தான், ஜைனர்கள் தாங்கள் இயற்றிய இந்நூலில் ஆசீவக நெறியை ஒரு தனி நெறியாகக் காட்டுகின்றனர். இவ்வாறு நெறிகளையும் வாதம் செய்து தவறு எனக்கூறி ஜைன நெறியின் கோட்பாடுகளை பரப்புவதே இந்நூலின் நோக்கம்.
சமயம் நல்லிணக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக