புதன், 30 செப்டம்பர், 2020

கம்பன் கழகம் நிறுவிய இசுலாமியர் இராமாயணம் நூல் புத்தகம் இலக்கியம்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 19 ஜன., 2019, பிற்பகல் 4:34
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
மு. மு. இஸ்மாயில் -- நினைவு நாள் இன்று (1921 பிப்ரவரி 21 – 2005 சனவரி 17)
# நீதியரசர் ; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர்.
மு. மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் 1921, பிப்ரவரி 8ஆம் நாள் பிறந்தார். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை உறவினர்கள் வளர்த்தார்கள்.
இஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours)பெற்றார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டில் சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். கல்லூரியில் தன் பேராசிரியர் கே. சுவாமிநாதனுடன் ஏற்பட்ட உறவால், இஸ்மாயிலுக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.
1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார்.
1959 ஆம் ஆண்டு முதல் 1967 சனவரி வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
இவர், 1967 பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
1967 நவம்பர் முதல் 1979 நவம்பர் 5 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.
1979 நவம்பர் 6 ஆம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டும் சூலை மாதத்தில் மு. மு. இஸ்மாயிலைக் கலந்தாலோசிக்காம
லேயே வேறு மாநிலத்திற்கு மாற்றினார். அதனைக் கண்டித்து 1981 சூலை 8 ஆம் நாள் தன் பதவியைத் துறந்தார்.
# தற்காலிக ஆளுநர்:-
1980 அக்டோபர் 27 ஆம் நாள் முதல் நவம்பர் 4 ஆம் நாள் வரை இஸ்மாயில் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகப் பணியாற்றினார்.
# சட்டக்கமிசன் தலைவர்:-
2005 ஆம் ஆண்டில் சட்டக் கமிசன் தலைவராகப் பணியாற்றினார்.
# சென்னை கம்பன் கழகம் :-
மு. மு. இஸ்மாயிலுக்கு இளமையிலிருந்தே கம்பராமாயணத்தில் ஈடுபாடு இருந்தது. நாளடைவில் அவ்வீடுபாடு புலமையாக மலர்ந்தது. அதன் விளைவாக 1975 ஆம் ஆண்டில் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகிய நண்பர்களின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை அவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
# எழுத்துப்பணி :-
1.மெளலானா ஆசாத் வாழ்க்கை வரலாறு.
2.அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்.
3 .இனிக்கும் இராஜநாயகம் சொற்பொழிவு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள
ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான்
அறக்கட்டளைச் சொற்பொழிவு
4.மும்மடங்கு பொலிந்தன, வானதி பதிப்பகம்.
5.கம்பன் கண்ட சமரசம்,
வானதி பதிப்பகம்.
6.உந்தும் உவகை திறனாய்வு வானதி, பதிப்பகம்.
7 .இலக்கிய மலர்கள் திறனாய்வு வானதி, பதிப்பகம்.
8.ஒரு மறக்க முடியாத அனுபவம் திறனாய்வு, வானதி பதிப்பகம் கல்கியில் 1985 திசம்பர் 8 இதழில்
தொடங்கி தொடர வெளிவந்தவை.
9. கம்பன் கண்ட ராமன் திறனாய்வு, வானதி பதிப்பகம்.
10 செவிநுகர் கனிகள் திறனாய்வு, வானதி பதிப்பகம்.
11 வள்ளலின் வள்ளல் வரலாறு
12 பழைய மன்றாடி திறனாய்வு வானதி பதிப்பகம்
13 மூன்று வினாக்கள் திறனாய்வு வானதி பதிப்பகம்
14 நினைவுச்சுடர்
15 தாயினும்…
16 உலகப் போக்கு
17 நயத்தக்க நாகரிகம்.
# எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர்
17 ஜனவரி, முற்பகல் 9:05 · Facebook for Android · பொது

தமிழறிஞர் சங்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக