புதன், 30 செப்டம்பர், 2020

மலையகம் அமைச்சர் காளை தமிழகம் ஜல்லிக்கட்டு இல் சாதனை

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 19 ஜன., 2019, பிற்பகல் 2:16
பெறுநர்: எனக்கு
மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் இருந்து வெளியேறும் ஒரு காளை, ஒரு மாடுபிடி வீரரின் ‘கால் சட்டையை’ கொம்புகளால் குத்திக் கழற்றிக் கொண்டு ஓடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. 729 காளைகளுடன், 691 வீரர்கள் களமிறங்கி சாகசம் செய்து கவர்ந்தனர். பல காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி மிரட்டியபடி தப்பிச் சென்றன. வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் பரிசுகள் குவித்தனர். இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளையும் களமிறங்கியது. வாடிவாசலில் இருந்து துள்ளி வெளி வந்து களத்தில் நின்று விளையாடிய இந்த காளையை அடக்க வீரர்கள் பலரும் முயன்றனர்.
யாராலும் பிடிக்க முடியாமல் திணறிய நேரத்தில் ஒரு வீரர் மட்டும் மாட்டின் திமிலை பிடிக்க முயன்றார். அப்போது அவரை முட்டி மோதி. அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற கால் சட்டையையும், ஜட்டியையும் கிழித்து விட்டு. ‘இனி வேறு யாரும் வருகிறீர்களா’ என வீரர்களை பார்த்து ஒரு மிரட்டல் பார்வையையும் வீசிவிட்டு மைதானத்தை விட்டு ஓடியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது கால்சட்டையை மாட்டின் கொம்புகளிடம் பறி கொடுத்தாலும், மீண்டும் புதிய கால்சட்டை வாங்கி அணிந்து கொண்டு திரும்பிய அந்த வீரர், மேலும் சில மாடுகளைப் பிடித்துக் காட்டி தனது வீரத்தை மெய்ப்பித்தார்.

ஒற்றுமை ஈழம் தமிழகம் தொடர்பு சல்லிக்கட்டு ஏறுதழுவுதல் நகைச்சுவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக