புதன், 30 செப்டம்பர், 2020

இலக்கியம் புளி குழம்பு பற்றி உணவு இல்லறம் மனைவி

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 26 ஜன., 2019, பிற்பகல் 7:09
பெறுநர்: எனக்கு
Bala Bharathi
தீம்புளிப் பாகர் - புளிக்குழம்பு
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே"
- கூடலூர் கிழார் (குறுந்தொகை - 167)
கட்டித் தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையை உடுத்திக்கொண்டு, குவளை மலரைப் போன்ற, மைதீட்டிய கண்களில், தாளிப்பின் புகை நிறைய, தானே துழாவிச் சமைத்த, இனிய, புளிப்பையுடைய குழம்பை தன் கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகம் தன் மகிழ்ச்சியைக் காட்யடிது.
(புளிக்குழம்பைப் படித்தவுடன் யாருக்கெல்லாம் எச்சில் ஊறியது?)
- பாலா பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக