செவ்வாய், 29 செப்டம்பர், 2020
ஜெயலலிதா தெலுங்கு தமிழ் கலப்பு பூர்வீகம்
aathi1956
வியா., 6 டிச., 2018, முற்பகல் 9:36
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# ஜெயலலிதா தமிழரா?
ஜெயலலிதாவின் தாய் வழி முன்னோர்களின் சொந்த ஊர் ஆந்திராவின் நெல்லூராம், ஆனால் தமிழ்ப் பேசுவார்களாம், அதனால் தமிழர்களாம், தமிழகத்தின் திருவரங்கத்திற்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வந்து குடியேறியவர்களாம், பூர்வீகம் தமிழ்நாடாம்.ஆனால் ஆந்திராவிற்கு எப்போது சென்று குடியேறினார்கள் என்று தெரியாதாம்..
அதுபோல தந்தை வழி சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள நங்கபுரமாம், இவர்களும் இரு தலைமுறைகளுக்கு முன்பு கர்நாடகா மைசூரில் குடியேறியவர்களாம், தமிழர்களாம்...
மேற்கண்டவாறு ஜெயலலிதாவின் உறவினர்களின் பேட்டிகளை தந்தி தொலைக்காட்சி ஓட்டிக் கொண்டிருக்கிறது...
இதில் தந்தை வழி, தாய் வழி உறவினர்களான அந்த இருவரும் பேசுவது கன்னட உச்சரிப்பு தமிழாக உள்ளது...தந்தை வழி உறவினர் தங்கள் தாய் மொழி தமிழ் தான் என்று பேட்டியில் கூறவில்லை... ஏன் நெறியாளரும் தாய் மொழி என்னவென்று கேட்கவேயில்லை...
தந்தை வழி உறவினர்கள் தங்கள் பெயருக்கு முன் ஊர் பெயரான நங்கபுரம் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் என்கிறார் அவர்... ஊர் பெயரை தன் பெயருக்கு முன் இட்டுக் கொள்ளும் பழக்கம் கன்னட தெலுங்கு பிராமணர்களிடம் மட்டுமே உண்டு... தமிழ் ஐயங்கார்களிடம் அப்பழக்கம் இல்லை... ஐயங்கார் என்ற பெயரை தமிழ்நாடு வாழ் கன்னட பிராமணர்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க
து... தன்னையே கன்னடத்து பாப்பாத்தி என்று அழைத்துக் கொண்ட பெண்மணியை வலிந்து தமிழராக்க முயற்சிக்கிறதா தந்தி தொலைக்காட்சி???
# எது எப்படியோ?... கொஞ்சமும் தமிழ்ப் பற்றின்றி, தனித் தமிழில் பேசுவதை சட்ட மன்றத்திலேயே கேலி செய்தவர். தமிழுக்காக எந்த ஆக்கப்பூர்வமான பணிகளையும் தன் ஆட்சிக் காலத்தில் செய்யாதவர். திராவிட இயக்கத்தின் அச்சு அசலான ஆட்சியைத் தவிர அவர் வேறெதையும் தரவில்லை...
இவரைத் தமிழரென்று எண்ண முடியவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக