வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பரதவர் மதமாற்றம் அரேபியர் பரவர் போர் போர்த்துக்கேயர்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 7 ஜூலை, 2018, பிற்பகல் 1:40
பெறுநர்: எனக்கு

அமல் அரசு.மை
# பரதகுலம் # எப்படி # கிறிஸ்தவ
# மதத்தைச் # தழுவினர்
பரதர் அரசாட்சி விட்டு மீனவர்களாக மாறிபோய் இருந்த காலம்
1529 - 1533 நடந்த நிகழ்ச்சி
பரதவகுலப் பெண் ஒருத்தி பணியாரம் விற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அராபிய மூர் ஒருவன் அவளிடம் கேலி பேச, அப்பெண் தன் கணவனிடம் கூறினாள்.
கோபத்துடன் வந்த அப்பெண்ணின் கணவன் அவ்வராபியனிடம் இது குறித்து சண்டையிட்டான். சண்டையின் உச்சக் கட்டமாக அப்பெண்ணின் கணவனது காது அறுபட்டுக் காதில் அணிந்திருந்த கடுக்கன் விழுந்து விட்டது. காது கடுக்கனை அறுப்பது என்பது பெரிய அவமானகரமான செயலாக பரதர் அக்காலத்தில் கருதப்பட்டமையாலும், ஏற்கனவே பரதர் மூர் முத்து வாணிபம் தொடர்பாக பிரச்சினை இருந்தமையால்
இதற்கு பழிவாங்க முனைந்த பரவர்கள் அராபிய # மூர்களின் # பண்டக
# சாலைகளுக்கும் # மரக்கலங்களுக்கும்
# நெருப்பிட்டழித்தனர் . # பல # அராபிய
# மூர்களை # கொலை #செய்தனர் .
ஆரம்பத்தில் தீவிரமான தாக்குதல் தொடுத்து பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி மூர்படையை ஓடவிட்ட பரதகுல மக்களால் பொருளியல் செல்வாக்கு மிகுந்த மூர்களின் எதிர்த்தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தூத்துக்குடியின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பாளையக்காரர்களின் ஆதரவோடு பரதவர்களைக் கடுமையாகப் பழிவாங்கத் தொடங்கினர் அராபியர்.
பரதவரின் தலை ஒன்றை கொண்டுவருபவர்க்கு ஐந்து பணம் கொடுப்பதாக அறிவித்தார்கள் அராபியர். ஐந்துபணம் பின்னர் இரண்டு பணமாக குறைக்கப்படும் அளவிற்கு பரதவர்களின் தலைகள் ஏராளமாக வரத்தொடங்கியது.
கள்ளிக் கோட்டையிலிருந்து வந்த ஜான் டெக்ரூஸ் என்ற (குதிரை வணிகன்) அல்லது போர்ச்சுகல் தூதுவர் இவற்றை நேரில்கண்டான். அராபிய மூர்களின் கொடூரமான தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, கொச்சியிலிருந்த போர்ச்சுக்கீசிய
ர்களின் உதவியை நாடும்படி பரதவர்களுக்கு அறிவுரைகூறினான்.
அதன்படி பரவதவர்களின் ஊர்த்தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று கொச்சி சென்று போர்ச்சுக்கீசிய அதிகாரிகளைச் சந்திதித்தது. தாங்கள் பரதகுல சேர சோழ பாண்டியர்கள் தற்போது அரசாட்சியில் இல்லை எமக்கு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் உதவும் படி கேட்டனர் அதற்கு பரதவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவினால் அவர்களுக்கு உதவுவதாக போர்ச்சுக்கீசியர்கள் கூறவே, சம்மதித்து
அங்கே ஒரு பத்திரம் எழுதி கொடுத்தனர்
அந்த பத்திரத்தில் எங்கள் குலதொய்வமாகிய மதுரை மீனாட்சி அம்மன் மீது ஆனையாக நாங்கள் வணங்கும் குமரிஅம்மன் மீது ஆனையாக இயேசுவை தவிர வேறுயாரையும் வணங்க மாட்டோம் என சத்தியம் சொய்து எழுதப்பட்டு இருந்தது
இது மாத்திரம் போதாது எல்லோரும் மாற வேண்டும் என அவர்கள் கூற அங்கிருந்து ஆல் அனுப்பபட்டார் மிக்கேல் வாஸ்
உதவி கேட்டுச் சென்ற பரதகுலத் தலைவர்கள் அங்கேயே கத்தோலிக்கராக மதம் மாறினர். ‘ஒரு கையில் வாளுடனும் மறுகையில் சிலுவையுடனும்’ வந்த போர்ச்சுக்கிசியர்கள் கடற்கரை கிராமங்களில் வாழும் பரதவர்களை மதம் மாற்றுவதற்காக மிக்கேல் வாஸ் என்ற விகார் ஜெனரலையும் மூர்களிடமிருந்து பரதவர்களைப் பாதுகாக்க ஒரு படையையும் கப்பல் வாயிலாக அனுப்பிவைத்தனர். வலிமை வாய்ந்த போர்ச்சுக்கல் படையின் பாதுகாப்பைப் பரதவர் பெற்றதால்
# 1537ல் # பரதர் # போர்சுகல் # படையுடன்
# அரேபிய #மூர்களை #வேதாளை
# என்ற # ஊரில் # வைத்து # வஞ்சம்
# தீர்தார்கள்
இந்த வேதாளை போர் பரதர்களின் கடைசி போர்
மிக்கேல் வாஸ் பரதவகுல மக்களை முழமையாகக் கத்தோலிக்கராக மதம் மாற்றினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த பெரிய குழும மதமாற்றமான இது 1533இல் நிகழ்ந்தது இதில் கிட்டதட்ட 30000 பேர் மதம் மாற்றபட்டனர்
தமக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் போது ஞானதந்தையாக இருந்த போர்ச்சுகல் படை வீரர்களின் குடும்ப பெயர்கள் பரதர் ஏற்றுக் கொண்டனர்
வெகு சிலர் அவற்றை ஏற்றுக் கொள்ள வில்லை
மானுவல் டெக்ஷிலா அடிகள் இச்சம்பவத்தை “ நம் ஆண்டவர் ஒரு காதைக் கிழித்து ஆயிரம் ஆத்மாக்களை இரட்சித்தார்” என்று குறிப்பிடுகின்றார்.
கிடைக்கும் வரலாற்று குறிப்புகளில் வருடம் குழப்பம் உள்ளது
#வேதாளை # போர்
1537 ஆம் ஆண்டில் ஜமோரின் மூன்று கேப்டன்கள், பைட் மராகர், குஞ்சாலி மராகர், மற்றும்
அல் இப்ராஹிம் கோராமாண்டல் கடலோர அரேபிய முஸ்லீம்களை காப்பாற்றுவதற்கு ஃபிஷர்-கோஸ்ட்டை ஒரு வலுவான படையுடன் தாக்கினர். அவர்கள் பரவர் கிராமங்களைத் தாக்கி பலர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் வேதாளைக்குச் சென்று இலங்கைக்கு பயணம் செய்ய காத்திருந்தனர். போர்ச்சிகிஸ் ஒரு பெரிய படை் மற்றும் பரவர் உதவியுடன் அந்த அரபு நாட்டு முஸ்லீம் முகாமை தாக்கினர். பல அரபு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். வேதாளை மற்றும் அருகிலுள்ள கிராமங்களை எரிந்தனர் அவற்றின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, படகுகளும் எரிந்தன. இன்றும் கூட வேதாளையில் நூற்றுக்கணக்கான அதில் இறந்தவர்களின் கல்லறைகளை காணலாம். வரலாற்றாளர்கள் இந்த போரில் இறந்த தியாகிகள் என குறிப்பிடுகிறார்கள். மேலும், பரவர்கள்் காயல்பட்டிணம் நோக்கிச் சென்றபின் அவ்வூரை தீயிட்டனர். அரேபிய முஸ்லீம்கள் அருகிலுள்ள பகுதிகளுக்கும், இலங்கைக்கும்் தப்பி ஓடினர். போர்ச்சுகீசியர்கள் மற்றும் பரவாகள் கை அங்கு ஓங்கியது மற்றும் அரபு முஸ்லீம் வர்த்தக சக்தியை முறியடித்தது. செயின்ட் சவேரியார் கடிதத்தின் படி [dt. 28 அக்டோபர் 1542] "வேதாளை வென்ற பிறகு யாரும் மூர் முஸ்லிமை நினைத்துப் பார்க்கவில்லை, அவர்களில் எவரும் பரவருக்கு எதிராக தலையெடுக்க தைரியமும் இல்லை"
இந்த நிகழ்வின் பிறகும் பரதகுலம் மதம் மாறி வாழ்ந்தாழும் கிறிஸ்தவ முறைகளை முழுவதும் பின் பற்றாமல் சங்கட காலங்களில் தாய் வழி தெய்வங்களை வணங்கி வந்தனர்.
இதை அறிந்து சரி செய்ய போர்ச்சுகிசியரால் அழைத்து வரபட்டவரே புனித சவேரியார்
பரதகுல ஆண்கள் காதில் கடுக்கன் அனிவது வழக்கம் கடுக்கன் வளையத்தில் முத்து கோர்த்து இருக்கும் இது பாண்டியர். மாணிக்கம் கோர்க்க பட்டிருந்தால் சோழர் பவளம் போட்டு இருப்பவர் சேரன் பரதகுல வழக்கம்
பின்னாளில் கிறிஸ்தவ மதம் மாரிய பின் கடுக்கன் சிலுவையுடன் கூடிய காது வாளி யாக மாறியது
சவேரியார் பரதகுலம் வரலாறு வேறு பதிவில் - நன்றி! : ஞானராஜ் கோமஸ்
3 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
இரா அருண்மொழித்தச்சன் மற்றும் 19 பேர்
Aathimoola Perumal Prakash
தமிழின் முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கம் இது பற்றி கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக