|
சனி, 7 ஜூலை, 2018, பிற்பகல் 2:15
| |||
எனக்கும் 2013 வரை ம.பொ.சி பற்றி தெரியாது. ஒருநாள் லைப்ரரி சென்று படித்தேன். அதில் திரட்டியவை இது.
இது 2013 ஆம் ஆண்டு எழுதிய பத்தி.
ம.பொ.சி பற்றி அவர் என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள இளைஞர்கள் இதைப் படிக்கலாம்.
ம.பொ.சி அப்படி என்னதான் செய்தார்...
முகிலை இராசமாணிக்கம் எழுதிய “தமிழக எல்லை போராட்டங்கள் புத்தகத்தை படித்து இந்த பத்தியை எழுதுகிறேன்.
ம.பொ.சிவஞானம் என்பதின் அப்பரிவேசனே ம.பொ.சி
இவர் என்ன செய்தார்?
.
தமிழ்நாட்டுக்காக எவ்வளவோ செய்தவரை இப்படியா அறிமுகப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தாலும் 1990களில் பிறந்த ஒரு வாலிபனுக்கு ம.பொ.சி தெரியவதில்லை.(எனக்கும் கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும்).அதனால் அவர் செய்த போராட்டங்களைப் பற்றி கொஞ்சம்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன.மதராஸ் ஸ்டேட்டில் இருந்து கேரளா,கர்நாடகா,மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
அப்படிப் பிரிக்கையில் திருத்தணி,சித்தூர்,திருப்பதி எல்லாம் ஆந்திரமாநிலத்துடன் போக, ’குமரி முதல் வேங்கடம்’ வரை தமிழ்நாட்டுக்குதான் சொந்தம் என்று போராடி திருத்தணியையும்,சென்னையையும் மீட்டுக் கொடுத்த முக்கியமான சக்தி ம.பொ.சி.
அவருடைய கொள்கைகளை யாருக்காகவும் காம்பிரமைஸ் செய்யவே இல்லை.காமராஜர்,ராஜாஜி,மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் தளுக்காக இருக்க முயற்சி செய்ய, ம.பொ.சி மட்டும் நேரடியாக இருந்தார்.தமிழ்நாட்டின் உரிமை மீது அவர் சமரசமே செய்ய வில்லை.
ம.பொ.சி திருப்பதி வரை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று சொன்னார்.அதற்கு பல ஆதாரங்கள் கொடுத்தார்.
1911 வரை திருப்பதி வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்தது.வசதிக்காக அது பிரிக்கப்பட்டு தெலுங்கு பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உடபட்டது.
அது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து திருவாலங்காடு வழியே திருத்தணி வழியே திருப்பதி வரை கூட்டங்கள் கூடி பேசினார்.பல கூட்டங்களில் ஆந்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆனால் ம.பொ.சி வெற்றிகரமாக அவர் பயணத்தை முடித்தார்.அந்த பயணத்தில் முழங்கிய முக்கிய கோசம்
“வேங்கடத்தை விடமாட்டோம்
வேங்கடம் தமிழகத்தின் எல்லை
தமிழா தூங்காதே!
தணிகை ( திருத்தனி) தமிழர்களுக்கே!
திருப்பதி தமிழ்நாட்டுக்கு கிடைக்காததிற்கு தமிழ் பொதுஜனங்களின் புத்தியும் காரணம் என்று நம்பினார் ம.பொ.சி.
தமிழர்கள் திருப்பதிக்கு கூட்டம் கூட்டமாக போகவேண்டும்.அதன் மூலம் தமிழ் மொழியின் ஆதிக்கம் திருப்பதியில் தெரிய வேண்டும் என்றும் அதன் மூலம் திருப்பதி தமிழகத்திற்கு என்ற தார்மீக கருத்திற்கு வலு கிடைக்குமென்றும் நம்பினார்.
ஆனால் தமிழக மக்கள் திருவரங்கம்,ஆழ்வார் திருநகரி,திருப்பெரும்புதூர் போன்றவற்றுக்குத்தான் போனார்களே தவிர திருப்பதியை சரியாய் கவனிக்கவில்லை என்று எண்ணினார்.ஆனால் ஆந்திரர்களுக்கு திருப்பதியே எல்லாம்.அவர்கள் எல்லாம் திருப்பதில் குவிந்து குவிந்து அவர்களுடைய இடமாகவே ஆக்கிவிட்டதாக ம.பொ.சி வருத்தப்பட்டார்.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் திருப்பதி,திருத்தணி,சித்தூர் மாவட்டம். இம்மூன்றும் தமிழகதிற்கானவை என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
இவருக்கு உற்ற துணையாக ராஜாஜி நிற்கிறார்.ம.பொ.சியின் வடஎல்லை போராட்டத்தின் தீவிரத்தை உணர கீழ்காணும் கதையை ம,பொ.சியே சொல்கிறார்.
<ஆந்திர மாநிலம் பிரிக்கபட வேண்டும் என்று தியாகி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருக்கிறார்.அவர் மேல் உள்ள மதிப்பால் நான் அவரைப் பார்க்கப் போனேன்.
அவரை வணங்கினேன்.பொட்டி ஸ்ரீராமுலுவுடன் ‘ஆந்திரகேசரி பிரகாசம்’ என்பவரும் இருந்தார்.
பிரகாசம் என்னிடம் ஆந்திரா பிரிக்கப்பட்டால் கொஞ்ச வருடங்கள் சென்னையை தற்காலிக தலைநகராக பகிர்ந்து கொள்ள என்னிடம் கேட்டார்.
நான் ’அது முடியாது’ என்று சொல்ல ஆந்திரகேசரி பிரகாசம் ஆவேசமாக”உங்களுக்கு மாவட்டத்தின் தலைநகரே மாநிலத்தின் தலைநகர் மாதிரி முன்னேறிக்கிடக்கிறது.உதாரணமாக உங்கள் ஈரோட்டைப் பாருங்கள்.எப்பேற்பட்ட வளர்ந்த நகரம்.
ஆனால் எங்களுக்கு ஆந்திரத்தில் அப்படியான எந்த நகரமும் இல்லை.அதனால் தெலுகர்கள்,சென்னையில் தற்காலிக அரசை நியமிக்க உதவ வேண்டும் என்று சொன்னார்.
“அது நடக்காது” என்று கடுமையாக மறுத்து வெளியே வந்தேன்.>
இன்னொரு கட்டத்தில் ம.பொ.சியின் கடும் போராட்டம் தாங்காமல் முதலைமச்சர் பதவியில் உள்ள ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலமை.ராஜாஜி எவ்வளவோ கேட்டும் ம.பொ.சி அதற்கு இணங்கவில்லை. நின்று போராடி சிறை சென்றார்.
பொட்டி ராமுலு உண்ணாவிரதத்தில் உயிர் துறக்க, ஆந்திரம் கொந்தளித்து நேரு ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புதல் கொடுக்கிறார்.
ஆந்திரர்கள் சென்னையை அவர்களுக்கு வேண்டும் என்று தீர்மானமாக கேட்கிறார்கள்.
சென்னையை தற்காலிக தலைநகரமாகவாது கேட்கிறார்கள்.ம.பொ.சி வெறித்தனமாக மறுக்கிறார்.
உடனே மாநகராட்சியை கூட்டி சென்னையை குடுக்க முடியாது என்று உரையாற்றி தீர்மானம் கொண்டுவரச் செய்கிறார்.
ஒருவேளை சென்னையை ஆந்திரத்திற்கு கொடுத்து விட்டால் சென்னைக்கும் ஆந்திரத்திற்கும் இடையே உள்ள தமிழக் பகுதிகள் எங்கே போகும்.அதுவும் ஆந்திரத்திற்கா? என்று கேள்வி எழுப்பினார்.
அங்கே ‘சென்னை மனதே’ என்று ராயலசீமா தெலுகர்கள் போராடி சிக்கலை அதிகப்படுத்துகின்றனர்.
நேரு ‘வான்சூ’ என்னும் ராஜஸ்தானிய நீதிபதியை விசாரிக்க சொல்கிறார்.
வான்சூவிடம் ம.பொ.சி பல இலக்கிய,உண்மை ஆதாரங்களை கொடுத்து திருத்தணி,சென்னை,திருப்பதி எல்லாமும் தமிழகத்துக்கே என்று விளக்குகிறார்.
இருப்பினும் நீதிபதி சொன்ன ஆலோசனைப்படி சென்னையை இருமாநிலங்களுக்கும் தற்காலிகமாக கொடுக்கலாம் என்று நேரு எண்ணுவதாக செய்திகள் வர ம.பொ.சி கவலையானார்.
பின் ராஜாஜியுடன் ஆலோசனை செய்தபடி, ராஜாஜி நேருவிடம் போய் “சென்னையை தற்காலிகமாக ஆந்திரத்திற்கு உபயோகிக்க கொடுத்தால் நான் பதவி விலகுவேன்.அதன் பின் வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல நேரு யோசிக்கிறார்.
பின் ம.பொ.சியின் மிக அருமையான உண்மையை விளக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தின் உரையை நேரு படிக்க நேரிடுகிறது.
இதற்கிடையில் 2000 தந்திகள் நேருவுக்கு போகிறது.அதில் இப்போது சென்னையை கொடுத்தால் பின் அது இரண்டு இனத்திற்கான மாபெரும் கலவரமாக வெடித்து, தமிழ்நாடு ஆந்திர எல்லைபகுதி நிரந்தர பதட்ட பகுதியாக ஆகிவிடும் என்ற செய்தி இருந்தது.
ராஜாஜியின் மிரட்டல்,ம.பொ.சியின் உரை.2000 தந்திகள் எல்லாம் சேர்த்து நேருவை யோசிக்க வைத்தன.
முடிவாக சென்னை தமிழகத்திற்கே சொந்தமானது, ஆந்திரா அதன் இடத்திலேயே ஒரு நகரத்தை தலைநகரமாக கொள்ளும் என்கிற நிம்மதி பெருமூச்சு விடும் அறிக்கையை நேரு வாசிக்கிறார்.
இப்படியாக சென்னையை மீட்டு தமிழகத்தில் ஒட்ட வைத்தவர் ம.பொ.சி அவர்களே.
இன்னும் இவர் போராடியதில் 1960 ஆம் ஆண்டு திருத்தனியில் 460 கிராமங்களும்,சித்தூரில் 26 கிராமங்களும் தமிழ்நாட்டில் இணைந்தன.ம.பொ.சியின் போராட்டத்தில் தமிழகத்திற்கு 415 சதுர கிமீ நிலம் கிடைத்தது.
இனிமேல் ம.பொ.சி யாரென்று கேட்டால் உடனே சொல்லுங்கள்... “அவர் உரிமையை மீட்டவர்” என்று.
நன்றி : @Vijaybhaskar vijay

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக