வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அழிந்துபோன தமிழ் நூல்கள் பட்டியல் பாவாணர்

aathi1956 aathi1956@gmail.com

புத., 4 ஜூலை, 2018, பிற்பகல் 10:43
பெறுநர்: எனக்கு
அழகன் ஆசிரியர் கவலையாக
உணர்கிறார்.
ஆரியனாலும்,வந்தேறி வடுகனாலும் தமிழர் இழந்த சொத்துகள்:
------------------------------------------------------------
அழிந்துபோன தமிழ்நூல்கள்
ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைந்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொன்னூல்களிற் கூறப் படுகின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது.
அகத்தியருக்கு முந்திய தமிழ்நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது.
தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட “எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன” வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட “கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையகவலுமென இத் தொடக்கத்தனவும்” கடைக்கழகத் தாராற் பாடப்பட்ட “பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும்” இப் போதில்லை.
தலைக்கழகக்காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக்கழகத் திலக்கணமாகிய மாபுராணமும் இசைநூலும் பூத புராணமும் இப்போதில்லை.
இனி, அடிநூல், அணியியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந் திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல்,கலியாணகாதை, களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கைபாடினியம், குண்டலகேசி, குண நூல், கோள்நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கைபாடினியம், சிறுகுரீஇயுரை, சுத்தானந்தப்பிர
காசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனா பதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை, பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது), புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத் தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதரகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக்கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமி
ருந்தவை யிப்போதில்லை.
பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி, ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடகநூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அரு ணிலை விசாகன் தமிழ்ப் பாரதம், பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம், திருவல்லையந்தாதி முதலியவை, இதுவரை யறியப்படாத நூல்களாகச் சாஸனத் தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன.
கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல்களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரி யற்றிய அரும்பைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை.
இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணா யிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந்தன வென்றொரு வழிமுறை வழக்குள்ளது.பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை,
“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”
என்னும் செய்யுளாலறியலாம்.
மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்துபோனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர்நிலைக் கல்வி யிழந்தமையும், இருபெருங் காரணங்களாகும்.
தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவ ராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதி னுஞ் சிறந்தவுமான எத்துணையோ நூல்கள் இறந்துபட்டன.
(ஒப்பியன் மொழிநூல்,பாவாணர்)
-------------------------------------------------------------
இலக்கியம் நூல் புத்தகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக