செவ்வாய், 10 அக்டோபர், 2017

பிடல் காஸ்ட்ரோ முருங்கை கொண்டுபோனார் நோயெதிர்ப்பு மருத்துவம் ஹைட்டி கியூபா மூலிகை

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ம் வருடம் மிகப்பெரிய
பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ
கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி
உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை
அனுப்பினார்கள். அந்த செய்தியில் " இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான
மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது.
இந்த தகவலை கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள
மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப்
பேசியுள்ளார். ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன
செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்த
கூட்டத்தில் விவாதித்தார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பின்லே
இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா
ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' என சொல்லியிருக்கிறார்.
"அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள்"
என கேட்டார் ஃபிடல். "இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத்தான், நோய்
எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது"
என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ. இந்தியா என பெயரை கேட்டவுடனே
காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன. ஏனெனில் அவருக்கு இந்தியா மேல்
எப்போதுமே தனிப் பாசம் உண்டு. டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய
முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது. காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன்
அடைந்திருந்தார்கள். இதனால், இந்தியா மேல், இவர்களுக்கு கூடுதல் அன்பு
இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவோட அதிபர்
கிடையாது. அதிகாரம் இல்லாமல் இருந்தால் என்ன? உதவி செய்ய மனசு போதுமே.
உடனே, டாக்டர் கெம்பா ஹெர்கோவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ.
இந்த டாக்டர் முதலில் வந்தது தமிழ்நாட்டிற்குத்தான். முருங்கை சாகுபடி,
மருத்துவப் பயன்பாடு என அதிகமான தகவல்களை சேகரித்தார். அதற்கடுத்து
ஆந்திரா, கேரளாவிற்கும் சுற்றுப்பயணம் செய்து முருங்கை பற்றிய தகவல்களை
திரட்டினார். கியூபாவிற்குப் போகும்போது இந்திய முருங்கைச் செடிகளையும்
மறக்காமல் எடுத்துக்கொண்டு சென்றார். ஹைட்டி தீவு மக்களுக்கு, நோய்
தாக்கிய மக்களுக்கு முருங்கைக் கீரைகளை இறக்குமதி செய்தும்
கொடுத்திருக்கிற
ார். காலரா நோயும் கட்டுக்குள் வந்தது. இந்தத் தீவு மக்களுக்கும் இந்திய
முருங்கை மரங்களை வளர்த்து, கீரை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.
அந்த டாக்டர் எடுத்துக்கொண்டு சென்ற முருங்கைச் செடிகள்தான், காஸ்ட்ரோ
வீட்டுத்தோட்டம் தொடங்கி, கியூபா முழுக்க வளர்ந்து நிற்கிறது. ‘‘என்னுடைய
ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்புக்க
ும் இந்திய முருங்கைக் கீரைதான் காரணம் என்பது நம்மில்
பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
11 மணிநேரம் · நண்பர்கள்
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன் மற்றும் 15 பேர்
தமிழ் மணி த.தே.கு.க
ஃபிடல் காஸ்ட்ரோ கம்யூனிச புரட்சியாளர் கிடையாது.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 9 மணிநேரம் முன்பு
Arutchelvan Thiru
தமிழனுடைய முருங்கைக்கீரை வேண்டும்,ஆனால் தமிழர்கள் ஆகாது என்று
முதலாளித்துவத்துடன் கைகோர்த்து ஈழத்துக்கு எதிராய் நின்றவன் பிடரல்
காசுட்ரோ.
பிடித்திருக்கிறது · 7 · பதிலளி ·
புகாரளி · 8 மணிநேரம் முன்பு
Chandraseker M பதிலளித்தார் · 3 பதில்கள்
Aathimoola Perumal Prakash
ஆ ஊ னா இந்தியா! தமிழகத்தில்தான் வேப்ப மரங்களும் தென்னை மரங்களும் பனை
மரங்களும் முருங்கை மரமும் முன்னோர்களால் திட்டமிட்டு நடப்பட்டுள்ளது.
வடக்கே போகப்போக இவற்றில் எதையுமே காணமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக