வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஈவேரா பெண்ணடிமை கருத்துகள் பெண்ணுரிமை

//பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும்
பெண்கள் பொதுவாகஉண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.//

// தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது,
மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர்
வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட
வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?//

// பெண்கள் பிள்ளை பெறுவதில்லை
என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது
என்ப தோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக்
கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்
காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப்
பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றி யும் அவனுக்கு
அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.//

“குடி அரசு” - தலையங்கம் -
12-08-1928
-------
ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற
நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா
போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம்
நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது
புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள்
எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் –
தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்
கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்.
--------
‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-
பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.
பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு
ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப்
போடுவதே வேலையாகும்)
--------
”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே
அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.
(குடியரசு21-09-1946)
--------
100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று
களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து
கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள்
எதுவும் செய்யாமல்//
// பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில்
உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
‘‘ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று
ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை
சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே
இருக்காது’’
---------
 ‘‘திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை
அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக்
கேடாகவும் இருக்கிறது’’
--------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக