செவ்வாய், 10 அக்டோபர், 2017

சீமான் ஈவேரா புறக்கணிப்பு

(21/09/2017)
’நான் மதிப்பது விஜயகாந்த் ஒருவரைத்தான்’ - சீமான் சொல்லும் காரணம்
0 0 0
SHARES
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரிக்கு,
"தேர்வு அரசியல் கற்றலும், அதற்குத் தக நிற்றலும்" என்ற தலைப்பில்,
மாணவர்கள் மத்தியில் பேச வந்திருந்தார் சீமான். விழா முடிந்ததும், ஒரு
சிறிய நேர்காணல் நடத்த வேண்டும் என்று அழைத்தவுடன், எந்த வித
மறுப்புமின்றி வந்தார். அவரிடம் சில கேள்விகள்...
தமிழகத்தின் முக்கியத் தலைவரான பெரியாருடைய பிறந்தநாளில் அவரது
சிலைக்குக்கூட நீங்கள் மாலை போடவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளதே?
ஆம். மாலை போடவில்லை. நான் மாலை போடும் இரட்டை மலை சீனிவாசன் அய்யா
அவர்களுக்கு மற்ற கட்சியினர் மாலை போடுகிறார்களா?. அதேபோல மற்ற
கட்சியினர் அனைவரும் மாலை போடும் பெரியாருக்கு, நான் ஏன் மாலை போட
வேண்டும்?...
ஆரம்பத்தில் பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றி மேடைகளில் பேசிய நீங்கள்,
இப்போது அந்தக் கொள்கைகளைப் புறக்கணிப்பது போல தெரிகிறதே?
ஆரம்பத்தில், பெரியார் கொள்கைகளைப் பின்பற்றினேன். பின்பு, பெரியார்
கொள்கைகளைப் பின்பற்றும் நீங்கள், ஏன் முருகனை வழிபடுகிறீர்கள்? எனக்
கேட்டனர். பின்னர், பெரியார் கொள்கையிலிருந்து அவர்கள்தான் என்னை
ஒதுக்கிவைத்தனர். ஒருவேளை, நான் சென்று மாலை போட்டிருந்தால், சீமான்
ஓட்டுக்காகத்தான் பெரியாருக்கு மாலை போட்டான் என்பார்கள்.
அனிதாவை தமிழகம் மறந்துவிட்டதா?
அனிதாவை தமிழகம் மறக்கவில்லை. தமிழக அரசுதான் மறந்துவிட்டது.
ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது எங்கும் போராடவில்லையே?
அப்படியெல்லாம் இல்லை. முதலில் கல்லூரி மாணவர்கள் போராடினர். பின்பு,
பள்ளி மாணவ, மாணவிகள் போராடினர். போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மேலும், தற்போது தேர்வு நடைபெறும் காலம் என்பதால், மாணவர்களால் அதிகம்
போராட முடியவில்லை.
நமது உரிமை மறுக்கப்படும்போது அதைப் போராடித்தான் பெற வேண்டுமா?
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்காதா?
பிறகு, என்ன செய்வது? மக்கள் தேர்ந்தெடுத்த அரசு அப்படி. இப்படிப்பட்ட
அரசு ஆட்சிசெய்தால், போராடித்தான் உரிமை பெற முடியுமே ஒழிய,
வேறுவழியில்லை.
ஆட்சி கலைய வாய்ப்பு உள்ளதா?
ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. எத்தனை முறை ஆட்சி கலையும் வாய்ப்பு வந்தது.
ஆட்சி கலையவிட்டார்களா? எனவே, மத்தியில் உள்ள அரசு, தற்போது அவ்வளவு
சீக்கிரம் ஆட்சியைக் கலைக்க விடாது.
அப்படி ஒருவேளை ஆட்சி கலைந்தால் நாம் தமிழர் கட்சி தேர்தலைச் சந்திக்குமா?
ஆட்சி கலைந்தாலும் சரி, கலையாவிட்டாலும் சரி. எப்போது தேர்தல் வைத்தாலும்
அதைச் சந்திக்க நாங்கள் தயார். மற்றவர்களைப் போல, 'போர் வரட்டும்
பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறுபவர்கள் நாங்கள் அல்ல.
சீமானைத் தவிர வேறு ஒருவர் தமிழகத்தை ஆண்டால் நன்றாக இருக்கும் என
நீங்கள் நினைக்கும் நபர்?
இன்றைய தமிழக அரசியலில் அப்படி யாருமில்லை.
கடைசியாக, நீட் மூலம் மாணவர்களிடமும் அரசியல் விளையாடுகிறதே?
அரசியலே மாணவர்களைச் சுற்றிதான் நடந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் அன்று
முதல் இன்று வரை அரசியல், மாணவர்களைச் சார்ந்தே இயங்கிவருகிறது. ஆனால்,
நீட் என்பது சர்வதேச அரசியல். இன்னும் பத்து வருஷம் கழித்துப்
பார்த்தால், தமிழகத்தில் ஒரு மாணவன்கூட மருத்துவராகியிருக்க மாட்டான்.
அதற்குத்தான் இந்த நீட் தேர்வு.
நீங்கள் அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் பற்றி?
நான் அடுத்து 'பகலவன்' என்னும் திரைப்படம் இயக்கப்போகிறேன். அதுதொடர்பாக
தற்போது எதுவும் சொல்வதிற்கில்லை.
தமிழர்கள்தான் நாட்டை ஆள வேண்டும் எனக் கூறும் நீங்கள், தி.மு.க.,
அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க நீங்கலாக உள்ள தமிழகக் கட்சிகளோடு ஏன்
கூட்டணி வைக்கக்கூடாது?
நான் தயாராகத்தான் உள்ளேன். யார் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க,
அ.தி.மு.க-வுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்து விடுகிறார்கள். மற்ற
கட்சி என்று பார்த்தால், பா.ம.க., பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது. ஆதலால்,
தனித்துக் களம் காண்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
நடிகர்களின் அரசியல் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெயலலிதா இருந்த வரை ஒருத்தரும் அரசியல் பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது,
கருணாநிதியும் ஓய்வு எடுத்துவிட்டார். ஜெயலலிதா உயிரோடு இல்லை. அரசியலில்
உள்ள வெற்றிடத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். இந்த
விஷயத்தில் நான் மதிப்பது விஜயகாந்த் ஒருவரைத்தான். அவரும், நானும்தான்
ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த
காலகட்டத்திலேயே மக்களின் நலனுக்காக கட்சி ஆரம்பித்தோம்.
மீண்டும் மதுக்கடைகளை சத்தமில்லாமல் திறந்து வருகிறார்களே?
சத்தம் இல்லாமல் திறந்துவிடுகிறார்கள். ஆனால், சத்தம்போட்டு அமோகமாக
விற்பனைசெய்கிறார்கள். மக்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை
என்பதே உண்மை என்று முடித்தார் காட்டமாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ப.தினேஷ்குமார் தே.தீட்ஷித்
ஆ.மணிக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக