ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஓணம் தமிழர் பண்டிகை இலக்கியம் மகாபலி மாபலி மாவேள் மாவேல்

கூர்ங்கோட்டவர்
ஓணம் என்ற தமிழர் நிகழ்வு:
ஓணம் என்பது பொதுப்புத்திக்க
ு தோன்றுவது போல் மலையாளிகள் கொண்டாடும் விழாவே கிடையாது. பாண்டியநாட்டை
பொறுத்தவரை அது வெற்றிவிழா. தமிழ்த்தேசத்தில் ஒரு முக்கியமான பகுதியை
பொறுத்தவரை துக்க விழா. ஓணம் பாண்டிய நாட்டு விழா என்பதற்கு ஏராளமாக
சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன். அதனால் ஓணத்தை
மலையாளிகள் அல்லாத நாயர் நம்பூதிரிகளுக்க
ு தாரை வார்க்காமல் அதை தமிழர் நிகழ்வாக மீட்டெடுப்போம்.
மாயோன் மேய ஓண நன் நாள் - மதுரைக் காஞ்சி அடி 591
திருவோணத் திருவிழவு - பெரியாழ்வார் திருமொழி 6
ஐப்பசி ஓண விழா - திருஞானசம்பந்தர
், தேவாரம் 503, திருமறை 2
அதெல்லாம் இருக்கட்டும். அது என்ன பாண்டிய நாட்டில் வெற்றிவிழா?
தமிழ்த்தேசத்தில் ஒரு முக்கியமான பகுதியை பொறுத்தவரை துக்க விழா? அந்த
துக்கவிழா கொண்டாட வேண்டிய பகுதி எது? என்பதை தேடுங்கள். உண்மையான வாமனன்
யார் என்றும் உண்மையான மாவலி யாரென்றும் தெரியும். தமிழர்களுக்குள்
நடக்கும் போர்களில் வென்றவனை கடவுளாகவும் தோற்றவனை கொடியவனாகவும்
கட்டமைத்த உண்மைகள் வெளிவரும்.
நான் பணியாற்றும் தமிழரால் தொடங்கப்பட்ட காக்னிசன்டு
தொழில்நுட்பத்தீர்வகத்தில் கோவை வட்டாரத்துக்கு ஓணத்துக்கே விடுமுறை.
பாண்டிய நாட்டினரும் சேர நாட்டினரும் சென்னையை விட கோவையில் தான் அதிக
விழுக்காடு பணியாற்றுகிறார்கள். ஆனால் கோவை வட்டாரத்துக்கு என்
அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பொறுத்தவரை வட்டார விடுமுறை கிடையாது.
சென்னையில் அப்படியே தலைகீழ். சென்னை அலுவலகங்களில் வடமாநிலத்தவரும்
மார்வாடிகளும் அதிகமாக பணியாற்றுவதால் அங்கு விநாயகர் சதுர்த்திக்கு
வட்டார விடுமுறை. ஓணத்துக்கு கிடையாது. நான் கோவை அலுவலகம் என்றாலும்
தனிப்பட்ட காரணத்தால் ஓணம் கொண்டாடக்கூடாது!!! அதனால் மிழலைக்கூற்றத்தை
தவிர்த்த தமிழ்த்தேசப்பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு ஓணத்திருநாள்
வாழ்த்துக்களையும் மிழலைக்கூற்றத்தை சேர்ந்த தமிழர்களுக்கு என் ஆழ்ந்த
வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. - Rajasubramanian
Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்)
25 ஆகஸ்ட், 10:48 PM · பொது

பி.நமசிவாயம் நாட்டார்.
மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் கூறுங்கள் நான் இப்போது வசிக்கும் பகுதி
வரலாற்று சிறப்பு மிக்க மிழலை கூற்றத்தில்் மழவர் மாணிக்கம் எனும் ஊர்
இங்கு ஓணம் விழாவாக கொண்டாடப்படா விட்டாலும் மாவாலி குறித்த பாடல்கள்
கோவில் மற்றும் குடும்ப விழாக்களிலும் பாடப்படுகிறது. மழவர் பெரு விழாவான
பூந்தொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏன் இது மிழலையின் துக்கவிழா
என ஆவலாக உள்ளது.
இப்பகுதியின் அரசன் மாவேல் எவ்வி.
அவரது அன்ன சத்திரங்களை நினைவூட்டும் நிகழ்வுகளும் இன்றுவரை நாட்டாரால் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக