ஞாயிறு, 8 அக்டோபர், 2017

நீட் கிராமங்களுக்கு எதிரானது தொடக்கத்திலேயே நிராகரித்த நீதிபதி கபீர்

நீட் தேர்வு முறையை ஆரம்பத்தில் நிராகரித்து தன் தீர்ப்பை எழுதினார்
நீதியரசர் அல்தமஸ் கபீர்.
அப்போது அவர் கூறியதாவது
"நகரங்களில் நவீன நாகரிக மருத்துவர்கள் தேவைப்படுவது போல் கிராமங்களில்
ஏழை டாக்டர்கள் (bare foot doctors) தேவைப்படுகிறார்கள்.
நீட் முறையை அனுமதித்தால் இந்தியாவில் கிராமத்திற்கு நகரத்திற்குமான
இடைவெளி அதிகரிக்கும்.
எனவே நீட் நிராகரிக்கப்பட வேண்டும்."
அனிதாவின் மரணம் கபீர் தீர்ப்பை மெய்ப்பித்துள்ளது.
ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும், ஏழ்மையை அறிந்து உணர்ந்த மருத்துவர்
ஆகியிருப்பார் அந்தப் பெண்.
பின்னர் அப்பீல் அரசியல் சாசன பெஞ்சுக்குப் போனது.
அதன் தலைமை நீதிபதி அனில் தவே. அவர் ஏற்கனவே கபீர் தீர்ப்புக்கு மாறாகச் சொன்னவர்.
எனவே நீட் புத்துயிர் பெற்றது.
இன்று கபீர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் எழுதியது சத்திய வாக்கு என்று
நிரூபிக்கப்பட்ட
ுள்ளது.
அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விலை மிக அதிகம்.
நன்றி: Shyam Shanmugaam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக