செவ்வாய், 10 அக்டோபர், 2017

தநாவிப பட்டியல்சாதி பெண் பாலியல் வன்முறை காவல்துறை க்கு பதிலடி

தமிழ்ச் செல்வன்
சாதி ஒழிந்த தமிழ்த்தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தில்
தோழர் தமிழரசனுக்குப் பிறகு தோழர் லெனினுக்குப் பெரும் பங்குண்டு!
தோழர் லெனின் தான்
புத்தூரில் அண்ணக்கிளி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை அரச பயங்கரவாதமும்
காவல்துறை அராசகமும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய போது ஆயுதம் ஏந்தி
தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தார்
தமிழ்நாடு விடுதலைப்படையில் தோழர் லெனின் தலைமையிலான முதல் நடவடிக்கை அது தான்
அவருடைய கடைசி நடவடிக்கை எது தெரியுமா?
முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் வசந்தா என்ற மிகப்
பிற்படுத்தப்பட்ட பெண்ணை அதே அரச பயங்கரவாத காவலர்கள் பாலியல்
துன்புறுத்தலுக்குள்ளாக்கி கொன்றதை கண்டித்து
தாக்குதலுக்கு முயன்ற போது தான் அவர் தன் இன்னுயிரை ஈந்தார்.
ஊருக்காகவும் சேரிக்காகவும்
அந்த ஊரையும் சேரியையும் பிரித்துவைத்துள்ள
அதன் வழி தமிழர்களை தமிழ்த்தேசிய இனத்தையே அடிமைப்படுத்தி வைத்துள்ள
# இந்திய , (எடுபிடி தமிழக )அரசுக்கு
# அரசப்படைகளுக்கு
அரசின் அங்கங்களாக உள்ள
# சாதிஆதிக்கப் பண்ணைகளுக்கு
# பெரும்பணக்காரர்களுக்கு
# முதலாளிகளுக்கு
# பார்ப்பனீய -
# சாதி அரசியல் தரகர்களுக்கு
எதிராக
நாம் ஆயுதம் ஏந்தவேண்டுமே தவிர
ஊரிலும் சேரியிலும் வாழும் பெரும்பான்மை உழைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல!
அவர்களிடம் நாம் செய்யவேண்டியதெல
்லாம்
அவர்களைப் பிரித்தாளும்
ஆளும் வர்க்க சாதி ஆதிக்கச் சக்திகளை அம்பலப்படுத்துவதும்
அம்மக்களை தமிழர்களாக தமிழ்த்தேசிய இன மக்களாக தேசியத்தன்மையில் அணிதிரட்டுவதுமே!
ஊருக்கும் சேரிக்கும் மட்டுமல்ல
ஊருக்குள்ளும் சாதியப் பொருளியல் முரண் உண்டு!
இதைக் கணக்கில் கொள்ளாமல்
ஊரிலுள்ள உழைக்கும் தமிழ் மக்களை வென்றெடுக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது
சாதி ஒழிப்பில் தாழ்த்தப்பட்ட மக்களே முன்னணி சக்தியாக திகழ்ந்தாலும்
மேற்கண்ட கடமையை நிறைவேற்றாமல் சாதி ஒழிப்பு சாத்தியமல்ல
இதுவே சாதி ஒழிப்பில் தமிழ்த்தேசியப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம்
இதுவே சாதிஒழிப்பையும் தேசிய விடுதலையையும் இணைக்கும் வழிமுறை
இதையேத் தோழர் தமிழரசன் ,தோழர் லெனின் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்தனர்.
இதை மறுத்து சாதி ஒழிப்பை பேச முயல்வது # சாதியவாதத்திலேயே கொண்டு போய் நிறுத்தும்.
ஆம் !
தேசியப் பார்வையற்ற சாதிஒழிப்பும்
சாதி ஒழிப்பற்ற தேசியப் பார்வையும்
என்றும் எப்போதும் சாதியவாதத்தை நோக்கியேப் பயணிக்கும்
---+++++++++++++++((((
பாட்டாளிவர்க்கத் தலைமையில்லாமல் உழைக்கும் மக்களை அணிதிரட்டாமல்
தாழ்த்தப்பட்டோர்களால் அதிகாரத்தையும் நிலத்தையும் ஒரு போதும் கைப்பற்ற
முடியாது( தோழர் தமிழரசன்)
அண்ணன் செந்தமிழ் குமரன்

ஒற்றுமை சாதிஒற்றுமை tnla ஆயுதக்குழு போலீஸ் தாக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக