செவ்வாய், 10 அக்டோபர், 2017

வள்ளுவர் பறையடித்தல் 7ம் நூற்றாண்டு சான்று பறையர்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# பதிவு_4 ..
சிறந்த பறையர் பற்றிய திரிபுகள் விளக்க பதிவுகள் 50 ல் 4..
+++++
# வள்ளுவர் சாதி என்பார் அரசரின் செய்தியை யானை மீது ஏறி அறிவிக்கும்
# முரசரைவார் என்பதை விளக்கும் கொங்கு வேளிரின் # பெருங்கதை எனும் நூலில்
சொல்லப்பட்ட 7 ஆம் நூற்றாண்டு பாடல் சான்று....
++++++++++
# பாடல் >>>
"ஏற்றுரி போர்த்த விடியுறழ் தழங்குகுரற்
கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி
முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநா ளென்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்"
- பெருங்கதை ( 2;28-33)
++
# பொருள்>>
ஏற்றுரி போர்த்த- காளையினது தோலாற் போர்க்கப்பட்டது. இடியை ஒத்து
முழங்கும் குரலையுடைய முரசம் என்க.
தழங்கு குரல்-தழங்குரல் என நின்றது.
கோல் தொழில் - செங்கோல் நடத்தும் தொழில்.
பெரிய முரசக் கொட்டிலிலே அரசவையோர் காணும்படி கொற்றவைக்கு மடை கொடுத்து
வாழ்த்தித் திருநாள், படை போர்மேற்செல்லும் நாள், மணநாள் என்னும்
இந்நாள்களினன்றிப்,
# பிற நாட்களிலே முரச முழக்குதலில்லாத செல்வத்தையும், சேனையையும், உடைய
முதிய வள்ளுவன், வெண்மை நிறமுடைய சாந்தம் மாலை துகில் முதலியவற்றை
அணிந்து கொண்டு, யானையின்மேல் அணையிடத்தே ஏறியிருந்து பருத்த அதன்
எருத்தத்தில் ஏற்றி என்க.
நாடு அறிய முரசத்னத வள்ளுவ முதுமகன் அணிந்து பெறீஇ, வேழத்து அணை மிசை
அமர்ந்து அதன் எருத்தத்தே ஏற்றி என இயைக்க.
++++++
ஆதலால் வள்ளுவர் பெயர் தொடர்புடைய தெய்வப்புலவர் ஐயன் # திருவள்ளுவர்,
வள்ளுவர்(பறையர்) சாதி என்பது வரலாற்று புரட்டாகும்...

Vijay Pallava
பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலி யோச்சி
முற்றவை காட்டுக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்
35 நறுவெண் சாந்தொடு மாலை அணிந்து
மறுவில் வெண்டுகில் மருங்கணி பெறீஇ
அணைமிசை அமர்தந் தஞ்சுவரு வேழத்துப்
பணையெருத் தேற்றிப் பல்லவர் சூழத்
30 - 38; பெரும்பணைக் கொட்டிலுள்...பண
ையெருத் தேற்றி
(பொழிப்புரை) பெரிய முரசக் கொட்டிலிலே அரசவையோர் காணும்படி கொற்றவைக்கு
மடை கொடுத்து வாழ்த்தித் திருநாள், படை போர்மேற்செல்லும் நாள், மணநாள்
என்னும் இந்நாள்களினன்றிப் பிற நாட்களிலே முரச முழக்குதலில்லாத
செல்வத்தையும், சேனையையும், உடைய முதிய வள்ளுவன், வெண்மை நிறமுடைய
சாந்தம் மாலை துகில் முதலியவற்றை அணிந்து கொண்டு, யானையின்மேல்
அணையிடத்தே ஏறியிருந்து பருத்த அதன் எருத்தத்தில் ஏற்றி என்க.
நாடு அறிய முரசத்னத வள்ளுவ முதுமகன் அணிந்து பெறீஇ, வேழத்து அணை மிசை
அமர்ந்து அதன் எருத்தத்தே ஏற்றி என இயைக்க.
(விளக்கம்) 30, பணைக் கொட்டில் - முரசமிருக்கும் கொட்டில்.
31. முற்றவைக்கு அம்முரசினைக் காட்டி என்க. கொற்றவை வெற்றித்திருவாகிய
இறைவி. பழிச்சி-வாழ்த்தி.
35. மங்கலச்செய்தியை அறிவித்தற்கு அறிகுறியாக வெண்மை .நிறமுடைய சாந்த
முதலியவற்றை அணிந்து என்க.
37. அமர்தந்து; அமர்ந்து-இருந்து,
38. பணை எருத்து-பருத்த பிடர்,
இது பல்லவ தேசத்து பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக