செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஐநா ஜெனிவா மனிதவுரிமை நாம்தமிழர் பேச்சு நாதக சீமான்

சீனி. மாணிக்கவாசகம் , 9 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழக சபையில் நடப்பது என்ன???
===================================
(சகோதரர் Sumesh Kumar -ன் நேரடி கள ஆய்வு)
-----------------------------------------------------------------------
நீண்ட பதிவுதான் என்றாலும் இதனை கட்டாயமாக படித்து தெரிந்து (தெளிந்து)
கொள்ளுங்கள்...
சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டி, சுவிஸ் நாட்டில்
உள்ள ஜெனீவா நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
கழக சபையின் வெளிமுற்றத்தில் ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள
தமிழர்கள் ஒன்று கூடி, கண்டன மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
நடத்துவது வழக்கம். ஆண்டுக்கு இருமுறை அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர்
மாதங்களில் ஐநா சபையில் மனித உரிமை மீறல்கள் சார்ந்த விவாதங்கள்,
தீர்மானங்கள் மற்றும் அதன் மீதான சர்வதேச நாடுகளின் வாக்கெடுப்பு
நடைபெற்று வருகின்றது. இந்த இரண்டு சமயங்களிலும் தமிழர்களால் எழுச்சி
பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதன் வாயிலாக, அந்த கூட்ட தொடர்
அரங்கேறும் போது அழுத்தம் கொடுக்கப்படும். அதாவது ஐநா சபை முற்றத்தின்
வெளியில் நடக்கும் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், சில பிரதிநிதிகள் உள்ளே
சென்று, நமது கோரிக்கைகளை ஒரு மனுவாக எழுதி கொடுத்துவிட்டு வருவது
வழக்கம். அவர்களும் அதை கவனத்தில் எடுப்பதாக தொடர்ந்து கூறி
வருகிறார்கள்.
அதேசமயம் கடந்த சில வருடங்களாக புதிய முயற்சியாக, பொதுநலன் நோக்கோடு
பதியப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஈழத்தமிழர் போராட்டக்
குழு பிரதிநிதிகள், நேரடியாக ஐநா சபை உள்ளேயே சென்று தமது கருத்துக்கள்
குற்றச்சாட்டுகள் போன்றவற்றை உலகத்தமிழர்களின் குரலாக சர்வதேச நாடுகளின்
பிரதிநிதிகள் முன்பு எடுத்துரைக்கும் விதமாக, சில கட்டமைப்பை சிறப்பாக
அமைத்து செயல்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசின்
கோர முகம் மற்றும் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனவர்களின் உண்மை
முகங்கள் ஆகியவற்றை சர்வதேசத்தின் முன்பு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு
சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த சீரிய முயற்சிக்கு மேலும் வலு
சேர்க்கும் விதமாக பேராசிரியர் பால் நியுமன் அவர்களையும் அந்த போராட்டக்
குழு, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக உள்ளே அழைத்து சென்று
பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் பேராசிரியர் பால்
நியுமன் அவர்கள் மே-17 இயக்கத்தில் இருந்தார்.
பேராசிரியர் பால் நியுமன், இலங்கைக்கு நேரில் சென்றும், அங்கு வாழும் சில
நெருங்கிய நண்பர்களின் தொடர்புகளை பயன்படுத்தியும், சொந்த செலவில் துணிகர
முயற்சிகளின் ஊடாக ஊடகங்களில் வெளிவராத பல செய்திகளை சேகரித்து, அவற்றை
ஐநா மனித உரிமைகள் கழகத்தில் புள்ளி விபரங்களோடும் ஆதாரங்களோடும்
சமர்ப்பித்ததோடு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட சாட்சிகளை தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் மூலம் நேரடியாக அழைத்து வரச்செய்து அவர்களின் உண்மை வாக்கு
மூலங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இனப்படு கொலைகளுக்கான நீதிப்
போராட்டதிற்கு இன்னொரு வடிவத்தில் பலம் சேர்த்தார் என்ற விடயம் நம்மில்
பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஐநா முற்றத்தின் வாயிலில் கூடி நின்று
ஆர்ப்பாட்டம் செய்துவந்த எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு இவைகள்
தெரியாது இருந்தது. இதனை பயன்படுத்தி திருமுருகன் காந்தி, பேராசிரியர்
பால் நியுமன் வழியில் அவ்வப்போது ஐநா மன்றத்தின் உள்ளே அவருடன் இணைந்து
வந்து தானும் பங்கு பெற்றதை பதிவு செய்து போவார்.
பிறகு பால் நியுமன் அவர்கள் மே-17 இயக்கத்தின் செயல்பாடுகளில் சந்தேகம்
வந்ததை அடுத்து, அங்கிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து தனது
சீரிய பணியை தொடர்ந்து செய்து வருவதை அனைவரும் அறிவர்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றிய செய்திகளை அறிந்த பாமக தந்து
பசுமை தாயகம் நிறுவனம் மூலமாகவும், மே 17 திருமுருகன் காந்தி மற்றும்
மதிமுக வைகோ ஆகியோர் தங்களையும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஊடாக உள்ளே
சென்று பேச வாய்ப்பு கேட்டு அவ்வப்போது செல்வார்கள் – சில சமயங்களில்
கூகிளில் (google) இருந்து தேடிப் படித்ததை பேசிவிட்டு செல்வார்கள்.
மேலும் மறக்காமல் வந்ததை பதிவு செய்யும் விதமாக படம் பிடித்தும்
செல்வார்கள். அதே சமயம் அவர்கள் தங்களை தவிர வேறு யாரும் அங்கு தமிழர்
பிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று மிகவும் கவனத்துடன் செயல்பட்டு
வந்தார்கள்.
ஆனால் இதற்கு நேர்மாறாக பேராசிரியர் பால் நியுமன் அவர்கள் ஒவ்வொரு முறை
ஐநா சபை மனித உரிமைகள் கழகத்திற்கு செல்லும் போதும், பல்வேறு நாடுகளில்
இருக்கும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மட்டும் ஆதரவாளர்களை தேடி
வாய்ப்புள்ளவர்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுத்து தயார்படுத்தி,
அவர்களுக்கு சிறப்பு அனுமதி வாங்கிக்கொடுத்து உள்ளே அழைத்து
செல்கின்றார்.
அங்கு அவர்களை தமிழீழ படுகொலைக்கான நீதி கேட்கும் பிரதிநிதிகளாக
அமரவைத்து, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஆங்கிலத்தில் பேச வைத்து,
நமக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச
பிரதிநிதிகளுக்கு உணர்த்தும் விதமாக கட்டமைப்பு செய்து வருகின்றார்
என்பது பலருக்கும் தெரியாது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வருடம்
செப்டம்பர் மாத அமர்வில், பெரும் எண்ணிக்கையில் பலரையும் அவர் தனக்கு
தெரிந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் உள்ளே அழைத்து சென்று சிங்கள பேரினவாத
அரசுக்கு எதிரான ஆதாரங்களை எடுத்துரைக்கும் பிரதிநிதிகளாக
முன்னிறுத்தினார்.
இதே பாணியின் ஊடாகத்தான் இயக்குநர் கவுதமன் அவர்களும் அவ்வப்போது வந்து
பேசி செல்வார். இந்த முறை இந்த குழு பேசிவரும் தலைப்புகள் இலங்கையின்
உள்நாட்டு விசாரணை மீதான நம்பிக்கையின்மை, போரினால் காணாமல் போனவர்களின்
நிலைமை, தனித்தமிழீழ பொதுவாக்கெடுப்பு, சிங்கள ராணுவத்தினால்
அபகரிக்கப்பட்ட காணிகள், வெள்ளை வேன் ஆள் கடத்தல் போன்றவை...
நிற்க !
இந்த இடத்தில் ஒரு விடயத்தை கட்டாயம் உங்களிடம் பகிர வேண்டிய கடமை எனக்கு உள்ளது…
நேற்று காலை நடைபெற்ற இந்த மனித உரிமை கழகத்தின் முதல் நாள் அமர்வில்
போரினால் காணாமல் போனோரின் நிலைமை என்ன என்ற தலைப்பின் கீழ் ஒரு விவாதம்
வந்தது. அதில் முக்கிய சாட்சியாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல்
பொறுப்பாளர் அண்ணன் தமிழ் செல்வனின் மனைவி சசிரேகா அவர்களின் வாக்குமூலம்
அரங்கத்தின் உள்ளே தமிழில் பதியப்பட்டது. அதனை பேராசிரியர் பால் நியுமன்
அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சர்வதேச சபைக்கு எடுத்து
விளக்கினார்.
அதே அமர்வில் மதிமுகவின் வைகோ அவர்களும் உடனிருந்து கூடுதல் விளக்கங்கள்
கொடுக்கின்றேன், எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று வேறு ஒரு தன்னார்வ
தொண்டு நிறுவனத்திடம் ஒப்புக்கொண்டுதான் ஜெனீவா வந்தார். ஆனால் காலையில்
அரங்கத்தின் உள்ளே நுழைந்துவுடன் அங்கு அவருக்கு அருகே போடப்பட்டிருந்த
நாற்காலியில் பேராசிரியர் பால் நியுமன் அமர்ந்து இருப்பதை பார்த்த வைகோ
அவர்களின் முகம் இருண்டு விட்டதின் காரணம் அங்கு யாருக்கும் புரியவில்லை.
அப்போது தன்னை பேச அழைத்த விழா ஏற்பாட்டு பெண்ணிடம் ஆங்கிலத்தில் 'I have
my self respect & dignity - So i don't come to speak' கோபமாக சொல்லி
விட்டு அந்த அமர்வில் பேச வராமல் அரங்கை விட்டு வெளியேறி விட்டார். இது
அங்கு அமர்ந்து இருந்த இயக்குநர் கவுதமன் உட்பட அங்கிருந்த அனைவரும்
பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் !
எங்கு சென்றாலும் தனக்கென்று தனி இடம் தர வேண்டும், தனி மரியாதை தர
வேண்டும் என்று புகழுக்காகவும் பெருமைக்காகவும் நடித்து வருபவர் வைகோ
என்றெல்லாம் கிண்டல் செய்து வரும் பல பதிவுகளை முகநூலில் படித்து
இருக்கின்றோம். ஆனால் முதன் முறையாக அவரின் இந்த உண்மை முகத்தை நேரில்
பார்த்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாததாக எங்களுக்கு அமைந்தது.
ஒருவழியாக அன்றைய அமர்வின் விவாதங்கள் முடிந்தவுடன், மாலை நான்கு
மணியளவில் வெளியே ஈகை சுடர் முருகதாசன் திடலில் நடைபெற்றுக் கொண்டிருந்த
நிகழ்ச்சியை பார்க்க போகலாம் என்று நாங்கள் சிலர் வெளியே சென்றோம்.
அங்கு மேடையில்… " 1989-ல் நான் தலைவரை சந்தித்த போது, சயனைடு குப்பியை
எனது கழுத்தில் மாட்டிவிட்டார்... நான் என்றும் ஈழத்திற்காக உயிரை கூட
இழக்க தயங்க மாட்டேன்....." இப்படி உணர்ச்சிவசமாக மேடையில் வைகோ பேசுவதை,
அங்கிருந்த ஒன்றுமறியாத சாமானிய தமிழர்கள் மெய்மறந்து
கேட்டுக்கொண்டிருந்ததை பார்த்து எங்களுக்குள் சிரித்துக்கொண்ட
ே நடந்தோம்.
'ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல அவசியம்' என்று அண்ணன் சீமான் அடிக்கடி
சொல்வதை நினைத்துப் பார்த்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டு கடந்தோம்… !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக