Kumarimainthan
எம தருமன் எனும் தோழர், நாடார்களைப் போல் ஏன் பள்ளர், பறையர் செல்வத்தில்
உயர்ந்திருந்தும் குமுக ஏறபு பெற முடியவில்லை என்று கேள்வி
எழுப்பியிருந்தார். நாடார்களின் போராட்டச் சூழல் சற்று வேறுபட்டது.
அவர்கள் மட்டும் செறிந்து வாழும் ஓர் ஒதுக்கிடமாகிய நெல்லை மாவட்டத்தின்
வளம் குன்றிய தென் கோடியிலும் குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டிலிருந்த
விலகியிருந்த புறத்தாய நாடு என்ற பகுதியிலும் வாழ்ந்திருந்தனர
். சாணார்கள் என்பது அவர்கள்து சாதிப் பெயர். நாடான் என்பது ஊர்த்தலைவன்
ப்ட்டம். பாண்டியராட்சியில் நாடுகள் என்ற ஆட்சிப் பிரிவுகள் இருந்தன.
அவற்றின் ஆள்வினையை(நிர்வ
ாகத்தை) நாடான்கள் என்ற அலுவலர்கள் கவனித்து வந்தனர்.
வழிப்பறிக்காரர்களான மறவர்கள், கள்ளர்களுக்கும் இவர்களுக்கும் மோதல்
இருந்தது இயல்பு. பாண்டிய அரசு அரசுரிமைப் போட்டிகளால் வலுவிழந்திருந்த
சூழலில வெள்ளாளர்களாகிய உழு தொழிலாளர்களை குறிப்பாக பெண்களை இந்த
நாடான்கள் வன்கொடும்மைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது. இந்தப்
பின்னணியில் நாய்க்கர்களின் கீழ் பாண்டிய நாடு வந்த போது அவர்களுடன்
மறவர் - கள்ளர்களும் அரியநாத பிள்ளையோடு சேர்ந்து போரிட்டு நாடான்களை
அகற்றி அவற்றைப் பாளையங்களாக்கினர். அவற்றில் 34 பாளையங்கள் வரை மறவர்
பாளையங்களாக்கினர் (இந்த எண்ணிக்கை பலவாறாகக் கூறப்படுகிறது) இவற்றில்
சில கட்சி மாறிய பழைய நாடான்களுக்கும் கொடுக்கப்பட்டிர
ுக்கலாம். இந்த நாடான்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக
இருந்திருக்க முடியாது என்பது என் கருத்து.
பாளையங்கோட்டைக்கும் தென்காசிக்கும் தெற்கில் அப்போது கேரளத்தின் கைகளில்
இருந்ததால் அங்கு நாடான்கள் பதவி தொடர்ந்தது. இந்தப் பகுதிகளில்
துருக்கர் நாயக்கர், ஆங்கிலர் படையெடுப்புகளில் போரிட்டு எதிரியிடம்
மண்டியிடாத வீரர்களும் மக்களும் வந்து அங்கு வாழ்ந்த சாணார்க்களுடன்
தாங்களும் சாணார்கள் என்ற அடையாளத்துடன் குடியமர்ந்தனர். தங்கள
குடித்தலைவனை அவர்களும் நாடான் என்று அழைத்தனர். இது மழைவள்ம் குறைந்த
தேரிப்பகுதியாக இருந்ததால் பனை தவிர வேறு வளமில்லை. எனவே பனையேறி பதனீர்
எடுத்து கருப்பட்டி எடுத்து பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களை
முடிந்த பொருட்களாக்கி வெளியில் சென்று விற்பதே ஒரே வழியாக இருந்தது.
நிலங்களெல்லாம் பழைய நாடான்கள் கைகளில் இருந்தன. இவற்றில் "பாட்டம்" என்ற
குத்தகை முறையில் பதனீர் இறக்கினர். ஒரு நாள் பதனீர் நாடானுக்கு, அதாவது
நில உடைமையாளனுக்கு என்றால் மறுநாள பதனீர் பனையேறிக்கு என்பது நடைமுறை.
இப்படிக் கிடைக்கும் கருப்பட்டியையும் பிற பொருட்களையும் விற்க
வேண்டுமென்றால் இந்த்த் தேரிக்காட்டை விட்டு வெளியே சென்று வர வேண்டும்.
அதற்கு இவர்களைச் சூழ்ந்திருந்த வழிப்பறிக் கொள்ளையரான மறவரகளை
எதிரகொண்டாக வேண்டும். எனவே இவர்கள் 50,100 வண்டிகளில் சேர்ந்து
சென்றனர். (இப்படிப்பட்ட அணிவகுப்புதான் சாத்து என்றும் தலைவன சாத்தன்
என்றும் நம் மரபில் கூறப்படுகினறனர்.) வெளியூர்களில் தாங்கள்
கொண்டுசெல்லும் பண்டங்களை விற்றுவிட்டு திரும்பும் போது தமக்கு வேண்டிய
பொருட்களை வாங்கி வந்தனர். இப்படிப் புறப்பட்ட சாத்துகள் நாளடைவில்
நெல்லை, சாத்தூர, சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, தேனி
போன்ற ஊர்கள வரை சென்று திரும்பினிர். வழியில வண்டிகள் தங்கி
இளைப்பாறுவதற்கென்று பேட்டைகள் அமைத்தனர். அவற்றில் முகாமையானவை மேலே
நாம் குறிப்பிட்டவை.
இந்தப் பேட்டைகளைப் பராமரிப்பதெற்கென்று மகமை என்ற பெயரில் கட்டணம்
தண்டப்பட்டது. அதில் திரண்ட பணம் இப்போது வாணிகர்களாகிவிட்ட
வண்டிக்காரர்களுக்குக் கடன்கொடுக்கும் நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றன.
தொடரும்.....
29 ஆகஸ்ட் 2016,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக