ஞாயிறு, 8 அக்டோபர், 2017

நீட் இரண்டாம் இடம் பிடித்த வடயிந்தியர் பிராய்லர் மாணவர் வெளிநாடு போகாத தமிழக மருத்துவ மாணவர்

விஜயராகவன் தமிழன்
# பகிரப்பட்டது
நீட் தேர்வில் இரண்டாவது இடம்.
பெயர் : முகேஷ் கண்ணா.
எப்படி கிடைத்தது இந்த இடம்? வெறும் சிபிஎஸ்இ
பள்ளிக்கூட கல்வி மட்டும் கொடுத்த்தா? ஆம் என்று பதில் சொல்லட்டும் நீட்
தேர்வு அவசியம் என ஒப்புக் கொள்கின்றேன்.
# முகேஷ் 'ன் அப்பா : தொழில் அதிபர்.
( தொழில் அதிபர் பிள்ளைகள் தான் டாக்டர் ஆகனும், முதல் தகுதி இது தான்)
அவரே சொல்றார் கேளுங்கள்...
நீட் தேர்வில் 2-வது இடம் பிடித்தது குறித்து முகேஷ் கண்ணா நிருபர்களிடம்
கூறியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டில் பிளஸ்-2 தேர்வு எழுதினேன். அதில் 1165 மார்க்
எடுத்திருந்தேன். மருத்துவ கட் ஆப் 193.75 ஆக இருந்தது. ஆனால் டாக்டர்
சீட் கிடைக்கவில்லை. என்ஜினீயரிங் கட் ஆப் 199.25 இருந்தது.
இதனால் கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் படித்தேன்.
ஆனால் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே எனது வேட்கையாக இருந்தது.
இதற்கிடையே நீட் தேர்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீண்டும்
டாக்டர் கனவு எனக்கு துளிர்விட்டது. எனது முடிவை பெற்றோரிடம்
தெரிவித்தேன். அவர்கள் அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து என்ஜினீயரிங் படிப்பை நிறுத்தி விட்டு சான்றிதழ் வாங்கினேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோவையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட்
தேர்வுக்கு தயாரானேன்.
ஏற்கனவே எனது பெரியப்பா மதுரையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார்.
அவரது மகனும் டாக்டருக்கு படித்து குழந்தைகள் நல மருத்துவத்தை
ஐதராபாத்தில் தற்போது படித்து வருகிறார். எனவே நானும் இதேபோல் டாக்டராக
வேண்டும் என்பது கனவாக இருந்தது.
இதனால் 8 மாதமாக கடுமையாக உழைத்தேன். கடந்த மே 7-ந்தேதி நடந்த நீட்
தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன். தற்போது இதில் மாநில அளவில் 2-வது
இடத்தை பிடித்துள்ளேன். எனது டாக்டர் கனவு நனவாகி உள்ளது.
இப்ப புரியுதா?
இங்க சமச்சீர்கல்வியை தரம் உயர்த்தி, எந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு
கொண்டு வர சொல்கின்றார்களோ அந்த சிபிஎஸ்இ இந்த வாய்ப்பை தரவில்லை.
தனியார் பயிற்சி தான் கொடுத்திருக்கு. அதுவும் வேறு எந்த வேலையும் இன்றி
வெறும் கொஸ்டியன் பேங்கை கரைத்து வாய்வழி ஊற்றி எக்ஸாம் ஹாலில் வாந்தி
எடுத்துட்டு வந்திருக்கார்.
இது தான் தரமான கல்வியா? உலக அறிவோடு போட்டியிடும் கல்வித்தரமா?
இந்த வசதிகள் கிராம , நகர்புற மக்களுக்கு கிடைக்குமா?
இப்படியெல்லாம் மருத்துவம் படித்துவிட்டு, கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் வேலை
செய்யமாட்டான். அடுத்த வருடம் அமெரிக்காவில் வாய்ப்பு கிடைக்கும் என
வீட்ல உட்கார்ந்து அமெரிக்க தகுதி தேர்வுக்கு தயாராவான்.
# NOTE:
JIPMER, AIMS, PGIMER Chandigargh போன்ற மருத்துவ கல்லூரிகலில் போட்டித்
தேர்வு எழுதி மருத்துவம் படித்த மருத்துவர்களில் 70% பேர் இன்று
இந்தியாவில் இல்லை..
ஆனால் தமிழகத்தில் +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் பயின்ற
மாணவர்கள் 80% க்கும் மேல் தமிழகத்தில் தான் பணியாற்றுகிறார்கள்.
இதில் 52% பேர் அரசு மருத்துவர்களாக சேவை செய்கிறார்கள்.
இதனால் தான் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில்
பொது சுகாதார துறை சிறப்பாக உள்ளது..
இந்த நீட் தேர்வு என்பது நமது பொது சுகதாரதிற்கு வைக்கப்பட்ட வேட்டு..
# TNagainstNEET

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக