மரபு வழித் தமிழ்த்தேசியத் தக்கார் அவையம்
11-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 45 நாள்: 12.09.2017
தொடர் நாள்: 255
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
பெருந்தச்சு நிழல் நாட்கா ட்டியின்படி, இவ்வாண்டின் ஒன்பதாவது
முழுநிலவு வெற்றி பெற்றுள்ளது. தொடர் சாவில் இருந்து மீண்டு
06.09.2017-ல் நாள் முதிர் மதியமாகக் கடந்தது. அது புரட்டாசி மாதத்து
முழுநிலவு ஆகும்.
எந்த ஒரு முழுநிலவு முறையாக வெற்றி பெற்றாலும், அது அந்த மாதத்தின்
12-ம் நாளைக் குறிக்கும் என்பதும், அந்த நாளின் கிழமை வெள்ளி என்பதும்
வாய்ப்பாடு. பஞ்சாங்கம் ஒரு புறமும், ஆங்கில நாட்காட்டி இன்னொரு புறமும்
தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கும் இக்கால வேளையில் தமிழ் நாட்காட்டியை
மீட்க உதவிக்கு வரும் சான்றுகளுள் தஞ்சைப் பெரிய கோயில்
குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் பெரிய கோயிலின் வெற்றி, தோல்வி இரண்டிலும் இருந்து தக்க
படிப்பினையைப் பெற்று அதனை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய
பொறுப்பு எல்லாத் தரப்பு வல்லுநர்களுக்கும் அறிஞர்களுக்கும் இருக்கிறது.
ஜகதிப்படை:-
ஜகதி என்பது திண்ணை வரியில் ஓர் ஓடுவர்க்கத்தின் பெயர். பெருந்தச்சு
மரபினர் இன்னும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜகதியில் குத்து
ஜகதி என்றும் பதும ஜகதி என்றும் இருவகை. உபானம்,ஜகதி, குமுதகம், கண்டம்,
பட்டிகை என்ற ஐந்து கிடைமட்ட ஓடுவரிகளைக் கொண்ட திண்ணையை அதிட்டானம்
என்று அழைக்கின்றனர். அதிட்டானத்தின் கீழ் உப பீடம் என்ற ஒரு மேடையை
விரும்பினால் அமைத்துக் கொள்ளலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலில் உப பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்
பத்திமுறையானது துண்டுப் பத்திரிப்பு முறை. அதன்படி மேற்கட்டுமானம்
அமையவில்லை. திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதிட்டானம் 8x8=64 கால்புறவாய்க்
கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இரட்டைச் சுவர் முறை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஜகதிப் படையின் மேல் மட்டம் ஒரே நோக்கில் சுற்றோடு சுற்று ‘மட்டம்
ஆவளித்து’ சேர்மானம் செய்யப் பெற்றிருக்கும். கோடி, குச்சை களின் நிலைத்
தூக்கு நேர்த்தி செய்யப் பெற்றிருக்கும். அவற்றின் மீது பெரும் சுமை
ஏற்றப்பட்டு ஓராயிரம் ஆண்டுகள் கடந்த இந்த நிலையில் அந்த நீர்மட்டமும்
நிலைத் தூக்கும் மாறாமல் இருப்பது அந்த முயற்சியின் வெற்றி.
ஜகதிப்படையில் இதுவரை ஒரு சிறு விரிசலும் விலகலும் ஏற்படவில்லை.
அதிட்டானத்தின் ஜகதி வரியில் முதன்மையான கல்வெட்டுப் பொறிப்பு இடம்
பெற்றுள்ளது. அந்த வரியை “ஜகதிப்படை” என்று இரண்டு இடங்களில் அதே
கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. “உபபீட கண்டப் படை” என்று வேறு ஒரு
கல்வெட்டு குறிப்பிடுகிறது. “பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்” என்று
கருவூரார் தனது திருவிசைப் பாவில் குறிப்பிடுகிறார். அதனால் படை செய்தல்
என்பது நிலையும் படிதமும் நீங்காத அடுக்குகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கிடுகுப்படை, செங்கற்படை என்ற வழக்கு உள்ளமையால் ஜகதிப்படை என்பதும்
ஓர் அடுக்கு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஜகதி– சமற்கிருதச்சொல் இல்லை.
தமிழில் ‘ஜ’ இல்லை. செங்குத்து, செங்கதி, செங்கதிர் என்ற சொற்களின்
பயன்பாடே பேச்சு வழக்காக ஜகதி ஆகியிருக்க வேண்டும்.என்ன சங்கதி? என்ற
பேச்சு வழக்கு இன்றும் நம்மிடையே இருக்கிறது. நற்கதி, நிர்கதி, அதோகதி,
சிவகதி வரிசையில் இந்தச் செங்கதியும் கோயில்களில் ஒரு நோக்கத்தோடுதான்
பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். செம்போக்கு, செந்நெறி யொத்த பொருள்
உடையன.
திருச்சதையம்:-
நள்ளிரவைப் பிளந்து பொழுதளந்து, பிரும்ம வேளையை விடியும்
முன்பாகவும்,உவவு வேளையை விடிந்த நிலையிலும், செங்கதியை அதனை அடுத்தும்,
குமுதகம் என்னும் பொழுதை நண்பகல் உரசிக்கொள்ளும் வேளையிலும், கண்டம் என்ற
பகுதியைக் காலைப் பொழுதிலும்,பட்டிகை-கபோதகம்-வி யாழவரி உட்பட நள்ளிரவை
எட்டும் அளவிலும் பகுத்துப் படை செய்யும் ஆற்றல் நூலறி புலவர்களுக்கு
மரபறிவாக இருந்திருக்கிறது என்று சுட்டிக் காட்டச் சான்றுகள் உள்ளன.
தஞ்சைக் கோயிலின் ஐந்து அங்கங்கள் கொண்டதாக அதிட்டானம் இல்லை.
குமுதகத்தின் மீது பிரதிபந்தக் கட்டு போடப்பட்டுள்ளது. ஆலிங்கம், அந் தரி,
பிரதி, வாஜனம் எனும் இவை வியாழவரிக் கூறுகள். இவை இடப்பட்டால்
எதற்காகவும் அதனை உடைக்கக் கூடாது என்பது விதி. அதாவது வாசக்கால் வைக்க
வேண்டும் அதனால் வருக்கத்தை முறித்துக் கொள்கிறேன் என்று முன்வரக்
கூடாது. இந்தப் பிரதிபந்தக் கட்டு ஒரு சமண முயற்சி. எண்பட்டக் குமுதகமும்
கண்டமும் வெற்றுப் பட்டிகையும் தொன்மையானவை. தஞ்சைக் கோயில் பிரதிபந்தக்
கட்டு நிருபஸ்ரேணி என்ற யாளிப்படையைக் கொண்டுள்ளது. பதசாரம் எனும் சமண
நூலில் இதன் தொடர்ச்சியைத் தேடலாம்.
தென்பாண்டியர் மரபு வழியில் கோத்தொழில் மேற்கொண்ட தமிழர்கள் கதிரவனை
ஓட ஓட விரட்டிக் கட்டி உருட்டிய காலவேளை செங்கதிப்படைப் பொழுது. அதாவது
நண்பகலுக்கு முன்பாகவே செங்கதிரை எதிர்த்து அடிப்பது. தஞ்சைக் கோயிலில்
காலவேளை மாறுகிறது. முரசு அறையப்படவில்லை. திருப்பறையறைவு மட்டுமே
கேட்பிக்கப்பட்டது. பாண்டியர்கள் பகைவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
ஆயினும் சிக்கியிருப்பது தமிழ் இன அறிவு.
பிரதிபந்தம் என்றால் என்ன? வியாழவரி எது?
அது ஒரு சுற்றுக்கட்டு. ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் என்ற
நான்கு உறுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அமையும். இவற்றை நிலை மாற்றக்
கூடாது. ஊடறுத்து உடைக்கக் கூடாது. முன்னோர் நினைவு அலைகள் தொழிற்படும்
இடம். அதனால் மேடையின், கூரையின், தளத்தின் மேல் மட்டத்தை உருவாக்கும்
வருக்கமாகக் கையாளப்படுகிறது. வியாழவரி என்பது நான்கையும் சேர்த்தது.
‘வேழவரி’ என்ற சொல்லில் இருந்து அது பிறந்திருக்கலாம்.
ஜகதிப்படை ஆவணம்:-
மொத்தம் 72 கற்கள், 27 பத்திகள் அவற்றுள் பாந்து-15,
பத்திரிப்பு-12, இடப்புறமாக சண்டிகேசர் கோயிலுக்கு முன்பாகத் தொடங்கி
வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் நேர்த்தியாகக் கல்லில்
வெட்டப்பட்டுள்ள செய்திகள் மிகச் சிறந்த ஆவணம் ஆகும். இவை 99 விழுக்காடு
சிதைவின்றிக் கிடைத்திருக்கின்றன. சில சமற்கிருதச் சொற்களைத் தவிரப் பிற
அனைத்தும் நல்ல தமிழ்.
அந்த ஆவணத்தை நேரடியாக மறு வாசிப்பு செய்து இக்காலத் தமிழில் எளிதாக
அனைவரும் நேரில் பார்த்துப் படித்துப் புரிந்து கொள்ள வகை செய்யும் ஒரு
திட்டப் பணியை மேற்கொண்டு நிறைவு செய்திருக்கிறது “மரபு வழித் தமிழ்த்
தேசியத் தக்கார் அவையம்”. வேண்டுவோர் கேட்டுப்
பெறலாம்(thakkar.avaiyam@gmail. com) 15 ஏடுகளில் அச்சிட்ட ஆவணமாகவும் அவை
கிடைக்கும்.
தொடர்நாட்களில் அரசாணை:-
மன்னன் தனது 25-வது ஆண்டில் 275-வது நாள் விமானத்து ஸ்தூபித் தறியில்
வைக்கக் கொடுத்த செப்புக் குடம் ஒன்றும் அதன்மீது பொன் தகடு போர்த்தச்
செய்ததும் இந்த ஜகதிப் படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே ஆண்டு 312-ம்
நாளில் பொன்னின் கொள்கைத் தேவர் ஒருவர் 829 ¾ கழஞ்சு 3 மஞ்சாடி எடையில்
மன்னன் தந்துள்ளான்.படிமையை உயர்திணையில் குறிப்பிடுவது இங்கு கருதத்
தக்கது. அதே ஆண்டு 320-வது நாளில் அவரது திருத்தமக்கையார் பொன்னின் தளிகை
ஒன்றினைத் தந்திருக்கிறார்.
26-வது ஆண்டில் 14-வது நாளில் பொன்னின் திருப்பட்டம் ஒன்றைத்
தந்துள்ளான். அதே ஆண்டு 20-வது நாளில் கொடைகளை ‘ஸ்ரீவிமானத்தில்
வெட்டுக!’ என்று திருவாய் மொழிந்தான். அதே ஆண்டு27-வது நாளில் பொன்னின்
தளிகை ஒன்று தந்தான். அதே ஆண்டு 104-வது நாளில் பொன்னின் கிடாரம் ஒன்று
தந்தான். அதே ஆண்டு 318-வது நாளில் வெள்ளிப் பீடத்தில் தங்கப் படிமையாக
ஒருவரைத் தந்தான். அதே ஆண்டு 319-வது நாளில் பொன்னின் சின்னங்களைத்
தந்தான். மற்றபடி 23-வது ஆண்டு முதல் 29-வது ஆண்டுவரை தந்த கொடைகளின்
கணிசமான பகுதியை ஜகதிப்படையில் குறிப்பிட்டுள்ளான். அவை சற்றொப்ப 35,000
கழஞ்சு எடையுள்ள பொன்னின் பூசைப் பொருட்கள். அவற்றுடன்15 ஊர்கள், 60,000
கலம் நெல் இறை கட்டின காணிக் கடன் ஆக வரியாகத் தரச் செய்துள்ளான்.
இத்துடன் இக்கல்வெட்டு முழுமையடைகிறது. அதற்கு முன்னும் பின்னும்
வெற்றுக் கல். சிலகாலம் கழித்து இராஜேந்திர சோழனின் கல்வெட்டு கடைசியில்
இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கருவறை, அதனில் உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார், அதன்
முன்பாகக் கீழைத் திருமஞ்சன சாலை, அதனில் பூசைப் பொருட்கள், பொன்னின்
கொள்கைத் தேவர், இவை இன்று இல்லை. பொன்னின் கொள்கைத் தேவர் என்பது ராஜ
ராஜனின் சிலை இல்லை. கருவூராரின் சிலை இல்லை. சிவனின் சிலையும்
இல்லை.இலக்கண முறைமையின் அமைந்த சேயோன் முருகனின் படிமை என்று கருத
வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பொன் படிமை பித்தளைப் படிமையாக மாறி இன்று
குஜராத்தில் தனியார் ஒருவரிடம் இருக்கிறது. அதனை இன்னும் மீட்டுக்
கொண்டுவர முடியவில்லை. பொற்படிமையின் நிலை என்ன என்பது பெரிய கோயிலைப்
பராமரிக்கும் யுனெஸ்கோவுக்கும், இந்திய மற்றும் தமிழக அரசுக்கும்
தெரியலாம். இன்றைய வழிபாட்டு முறை முற்றிலும் இராசராசனின்
நோக்கத்திற்கும் திட்டத்திற்கும் எதிரானது.
கல்வெட்டு தரும் ஆறுதல், பூசைப் பொருட்களின் பெயர்கள்தான். அவை
இவைதான். ஸ்ரீபலித்தாலம், திரு ப்பட்டம்,திருமுடி, திருமகுடம்,
திருப்பொற்பூ,திருப்பள்ளித் தொங்கல் மகுடம், திருக்கொற்றக்குடை,
திருக்கைக் காரை, திருப்படிக்காரை, திருப் பட்டிகை, திருவாளி ஒரனை,
திருக்கைப்பொட்டு ஒரனை, திருக் கால்காரை உகிர்ப் புறவன ஒரனை,
திருவடிக்காரை, திருக்கால் மோதிரம்.
தட்டம், தளிகை, தவுக்கை, திரள்மணி வடம், தாமரைச் செயல்
திருப்பொற்பூ, தொழிற்பட்டிகை.
கெண்டி, கிடாரம், குடம், குறுமடல், கலசம், கலசப் பானை, காளம்,
காளங்காளம், காளாஞ்சி, குழல், கரண்டிகைச் செப்பு.
வட்டில், ஒட்டு வட்டில், மாநவட்டில்,நாரைத்தாள் வட்டில், இலைத்
தட்டு, ஈச்சொப்பிக்கை, படுகண், பத்திமடல்,கள்ளிப்பூ, கொக்குவா ய்,
தூக்கம், துடா, மண்டை, மணிவட் டம், கிளி, அன்னம்.
இந்தப் பெயர்கள் அனைத்தும் வகைக்கு ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றிலும் பல எண்ணிக்கைகள் உள்ளன. ஒவ்வொன்றின் எடையும் வெவ்வேறு
என்பதால் தனித்தனியே குறிப்பிடுகிறது ஜகதிப்படை.
பொன்னால் ஆன இப்பொருட்கள் இன்று அங்கு இல்லை.
மறைக்கப்பட்டுள்ளனவா?கொள்ளை போயினவா என்று தெரியவில்லை. இந்தப்
பெயர்களில் இருந்து அவற்றின் வடிவங்களை மீட்க முடியும். பல்லாயிரம்
வார்ப்படக் கலைஞர்கள் இன்றும் தமிழ் மரபில் உயிர்ப்புடன் இருக்கிறார்கள்.
அவர்களை மயக்கி மடை மாற்றித் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழ்ப் பகை.
அது ஆரிய வைதிகம், சைவச் சமணம் மற்றும் பவுத்த வைணவம்.
என்ன நடந்தது?
பொன்னின் கொள்கைத்தேவர் நாள் ஒன்றுக்கு மூன்று சந்தியிலும் அதாவது
உபானப்படை, குமுதகப்படை, கபோ தகப்படை பொழுதுகளில் நீராடுவார். அந்த
நீரில் ஏல அரிசியும் இலாமிச்ச வேரும் இடப்பட்டிருக்கும். 45 அக்கம் என்ற
வகையில் 8 நாட்களுக்கு ஒருமுறை ஏல அரிசியையும், இலாமிச்ச வேரையும்
தவறாமல் தருவதற்கு நிவந்தங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. 45x8=360.
ஆண்டு நாட்கள் 360. இது அசைக்க முடியாத சான்று.
பொன்னின் கொள்கைத் தேவருக்கு முன்பாகப் பொன்னின் தாலத்தால் ஒலி
எழுப்பினர். அந்த ஒலி விமானத்தின் உட்கூட்டின் வழியே கேணியாகப் பூத்தது.
பவனப் பிடாரன் பாவனை செய்தான். திருப்பதியம் விண்ணப்பம் செய்யப் பட்டது.
முன்புறமாக நாடக சாலை மேடையில் தளிச் சேரிப் பெண்டுகள் சிலம்பு ஒலி செய்ய
விலங்கல் செய்து ஆடல் நிகழ்த்தினர். ஆலய விடங்கன் உடுக்கை வாசித்தான்.
கொட்டு மத்தளமும் சகடையும் முழங்கின. இசை, கூத்து, படிமை இவை ஓர்மைப்
படுத்தப் பட்டன. இவற்றுடன் சிவயோகியர் நாடிகளை ஒழுங்கு செய்து
திருச்சதையம் செய்தனர். கடிகையார் கண்காணித்தனர். கருவூரார்
பெருமேற்பார்வை செய்தார். மன்னன் இயக்கினான். மரபறிவு மீண்டது.
படிப்பினை:-
10-ம் நூற்றாண்டில் தமிழ் நாட்காட்டி மீண்டது. அது ஒரே நாளில்
ஏற்பட்டது அல்ல. சற்றொப்ப 1000 ஆண்டுகள் உழவாரப் படையாளிகளின் பண்
மீட்பு, மண் மீட்பு, மரபறிவு மீட்பு இவற்றின் பயனாக விளைந்தது எனலாம்.
அடுத்த 1000 ஆண்டுகளில் இது சரிந்தது. அது ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல.
எல்லாம் வந்தேறுங்குடிகளின் கைங்கரியம்தான். இன்று மீண்டும் அது புரிந்து
கொள்ளப் படுகிறது. தமிழினத்து அறிஞர்கள் உற்றுணர்ந்து எடுத்துச் சொல்ல
விரும்புகிறார்கள். அவர்களை அரவணைக்கும் அரசு தேவை.
நெருங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டு:-
1.
தைப்பூசம்
12.01.2017
வெற்றி
 √
2.
மாசி மகம்
11.02.2017
வெற்றி
 √
3.
பங்குனி உத்தரம்
12.03.2017
தோல்வி
 x
4.
சித்திரைச் சித்திரை
10.04.2017
தோல்வி
 x
5.
வைகாசி விசாகம்
10.052017
வெற்றி
 √
6.
ஆனிக் கேட்டை
09.06.2017
வெற்றி
 √
7.
ஆடிப் பூராடம்
09.07.2017
வெற்றி
 √
8.
ஆவணித் திருவோணம்
07.08.2017
தோல்வி
 X
9.
புரட்டாசி உத்திராட்டதி
06.09.2017
வெற்றி
 √
சரியாக இன்னும் மூன்று முழுநிலவுகள். மூன்றாவது முழுநிலவின் மறு
நாளில் தொடங்கி 18 நாட்களில் ஆண்டு நிறைவு. மறுநாள் புத்தாண்டு. அன்றே
நிழல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பியிருக்கும்.
அன்றே
1. தைத்திங்கள் முதல் நாள்
2. வளர்பிறை 4-ஆம் நாள்
3. கிழமை ஞாயிறு
4. பொங்கல்
5. மஞ்சு விரட்டு
மேற்கண்ட ஐந்து கூறுகளையும் புதுப்பிக்க இரண்டு சட்டங்கள். அவற்றுள் சில
முரண். சிக்கலைச் சட்டத்திலும் காலக் கட்டத்திலும் தொட்டு தீர்க்க
வல்லுநர்கள். எடுத்துச் செல்ல இளந் தலைமுறை.
1. தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம்
2. மஞ்சு விரட்டுச் சட்டம்
இனிவரும் நாட்களின் அன்றாட நகர்வே ஆட்சிச் சக்கரத்தைத் தமிழ்
நாட்காட்டியின்படி நகர்த்தலும் என்று நம்பலாம்.
இது மரபு வழித் தமிழ்த் தேசி யத் தக்கார்அவையத்தின் வெளியீடு
11-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 45 நாள்: 12.09.2017
தொடர் நாள்: 255
------------------------------
பெருந்தச்சு நிழல் நாட்கா
முழுநிலவு வெற்றி பெற்றுள்ளது. தொடர் சாவில் இருந்து மீண்டு
06.09.2017-ல் நாள் முதிர் மதியமாகக் கடந்தது. அது புரட்டாசி மாதத்து
முழுநிலவு ஆகும்.
எந்த ஒரு முழுநிலவு முறையாக வெற்றி பெற்றாலும், அது அந்த மாதத்தின்
12-ம் நாளைக் குறிக்கும் என்பதும், அந்த நாளின் கிழமை வெள்ளி என்பதும்
வாய்ப்பாடு. பஞ்சாங்கம் ஒரு புறமும், ஆங்கில நாட்காட்டி இன்னொரு புறமும்
தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கும் இக்கால வேளையில் தமிழ் நாட்காட்டியை
மீட்க உதவிக்கு வரும் சான்றுகளுள் தஞ்சைப் பெரிய கோயில்
குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் பெரிய கோயிலின் வெற்றி, தோல்வி இரண்டிலும் இருந்து தக்க
படிப்பினையைப் பெற்று அதனை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய
பொறுப்பு எல்லாத் தரப்பு வல்லுநர்களுக்கும் அறிஞர்களுக்கும் இருக்கிறது.
ஜகதிப்படை:-
ஜகதி என்பது திண்ணை வரியில் ஓர் ஓடுவர்க்கத்தின் பெயர். பெருந்தச்சு
மரபினர் இன்னும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜகதியில் குத்து
ஜகதி என்றும் பதும ஜகதி என்றும் இருவகை. உபானம்,ஜகதி, குமுதகம்,
பட்டிகை என்ற ஐந்து கிடைமட்ட ஓடுவரிகளைக் கொண்ட திண்ணையை அதிட்டானம்
என்று அழைக்கின்றனர். அதிட்டானத்தின் கீழ் உப பீடம் என்ற ஒரு மேடையை
விரும்பினால் அமைத்துக் கொள்ளலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலில் உப பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்
பத்திமுறையானது துண்டுப் பத்திரிப்பு முறை. அதன்படி மேற்கட்டுமானம்
அமையவில்லை. திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதிட்டானம்
கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இரட்டைச் சுவர் முறை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஜகதிப் படையின் மேல் மட்டம் ஒரே நோக்கில் சுற்றோடு சுற்று ‘மட்டம்
ஆவளித்து’ சேர்மானம் செய்யப் பெற்றிருக்கும். கோடி, குச்சை
தூக்கு நேர்த்தி செய்யப் பெற்றிருக்கும். அவற்றின் மீது பெரும் சுமை
ஏற்றப்பட்டு ஓராயிரம் ஆண்டுகள் கடந்த இந்த நிலையில் அந்த நீர்மட்டமும்
நிலைத் தூக்கும் மாறாமல் இருப்பது அந்த முயற்சியின் வெற்றி.
ஜகதிப்படையில் இதுவரை ஒரு சிறு விரிசலும் விலகலும் ஏற்படவில்லை.
அதிட்டானத்தின் ஜகதி வரியில் முதன்மையான கல்வெட்டுப் பொறிப்பு இடம்
பெற்றுள்ளது. அந்த வரியை “ஜகதிப்படை” என்று இரண்டு இடங்களில் அதே
கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. “உபபீட கண்டப் படை” என்று வேறு ஒரு
கல்வெட்டு குறிப்பிடுகிறது. “பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்” என்று
கருவூரார் தனது திருவிசைப் பாவில் குறிப்பிடுகிறார். அதனால் படை செய்தல்
என்பது நிலையும் படிதமும் நீங்காத அடுக்குகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கிடுகுப்படை, செங்கற்படை என்ற வழக்கு உள்ளமையால் ஜகதிப்படை என்பதும்
ஓர் அடுக்கு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஜகதி– சமற்கிருதச்சொல் இல்லை.
தமிழில் ‘ஜ’ இல்லை. செங்குத்து,
பயன்பாடே பேச்சு வழக்காக ஜகதி ஆகியிருக்க வேண்டும்.என்ன சங்கதி? என்ற
பேச்சு வழக்கு இன்றும் நம்மிடையே இருக்கிறது. நற்கதி, நிர்கதி,
சிவகதி வரிசையில் இந்தச் செங்கதியும் கோயில்களில் ஒரு நோக்கத்தோடுதான்
பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். செம்போக்கு, செந்நெறி
உடையன.
திருச்சதையம்:-
நள்ளிரவைப் பிளந்து பொழுதளந்து, பிரும்ம வேளையை விடியும்
முன்பாகவும்,உவவு வேளையை விடிந்த நிலையிலும், செங்கதியை அதனை அடுத்தும்,
குமுதகம் என்னும் பொழுதை நண்பகல் உரசிக்கொள்ளும் வேளையிலும், கண்டம் என்ற
பகுதியைக் காலைப் பொழுதிலும்,பட்டிகை-கபோதகம்-வி
எட்டும் அளவிலும் பகுத்துப் படை செய்யும் ஆற்றல் நூலறி புலவர்களுக்கு
மரபறிவாக இருந்திருக்கிறது என்று சுட்டிக் காட்டச் சான்றுகள் உள்ளன.
தஞ்சைக் கோயிலின் ஐந்து அங்கங்கள் கொண்டதாக அதிட்டானம் இல்லை.
குமுதகத்தின் மீது பிரதிபந்தக் கட்டு போடப்பட்டுள்ளது. ஆலிங்கம், அந்
பிரதி, வாஜனம் எனும் இவை வியாழவரிக் கூறுகள். இவை இடப்பட்டால்
எதற்காகவும் அதனை உடைக்கக் கூடாது என்பது விதி. அதாவது வாசக்கால் வைக்க
வேண்டும் அதனால் வருக்கத்தை முறித்துக் கொள்கிறேன் என்று முன்வரக்
கூடாது. இந்தப் பிரதிபந்தக் கட்டு ஒரு சமண முயற்சி. எண்பட்டக் குமுதகமும்
கண்டமும் வெற்றுப் பட்டிகையும் தொன்மையானவை. தஞ்சைக் கோயில் பிரதிபந்தக்
கட்டு நிருபஸ்ரேணி என்ற யாளிப்படையைக் கொண்டுள்ளது. பதசாரம் எனும் சமண
நூலில் இதன் தொடர்ச்சியைத் தேடலாம்.
தென்பாண்டியர் மரபு வழியில் கோத்தொழில் மேற்கொண்ட தமிழர்கள் கதிரவனை
ஓட ஓட விரட்டிக் கட்டி உருட்டிய காலவேளை செங்கதிப்படைப் பொழுது. அதாவது
நண்பகலுக்கு முன்பாகவே செங்கதிரை எதிர்த்து அடிப்பது. தஞ்சைக் கோயிலில்
காலவேளை மாறுகிறது. முரசு அறையப்படவில்லை. திருப்பறையறைவு மட்டுமே
கேட்பிக்கப்பட்டது. பாண்டியர்கள் பகைவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
ஆயினும் சிக்கியிருப்பது தமிழ் இன அறிவு.
பிரதிபந்தம் என்றால் என்ன? வியாழவரி எது?
அது ஒரு சுற்றுக்கட்டு. ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் என்ற
நான்கு உறுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அமையும். இவற்றை நிலை மாற்றக்
கூடாது. ஊடறுத்து உடைக்கக் கூடாது. முன்னோர் நினைவு அலைகள் தொழிற்படும்
இடம். அதனால் மேடையின், கூரையின், தளத்தின் மேல் மட்டத்தை உருவாக்கும்
வருக்கமாகக் கையாளப்படுகிறது. வியாழவரி என்பது நான்கையும் சேர்த்தது.
‘வேழவரி’ என்ற சொல்லில் இருந்து அது பிறந்திருக்கலாம்.
ஜகதிப்படை ஆவணம்:-
மொத்தம் 72 கற்கள், 27 பத்திகள் அவற்றுள் பாந்து-15,
பத்திரிப்பு-12, இடப்புறமாக சண்டிகேசர் கோயிலுக்கு முன்பாகத் தொடங்கி
வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் நேர்த்தியாகக் கல்லில்
வெட்டப்பட்டுள்ள செய்திகள் மிகச் சிறந்த ஆவணம் ஆகும். இவை 99 விழுக்காடு
சிதைவின்றிக் கிடைத்திருக்கின்றன. சில சமற்கிருதச் சொற்களைத் தவிரப் பிற
அனைத்தும் நல்ல தமிழ்.
அந்த ஆவணத்தை நேரடியாக மறு வாசிப்பு செய்து இக்காலத் தமிழில் எளிதாக
அனைவரும் நேரில் பார்த்துப் படித்துப் புரிந்து கொள்ள வகை செய்யும் ஒரு
திட்டப் பணியை மேற்கொண்டு நிறைவு செய்திருக்கிறது “மரபு வழித் தமிழ்த்
தேசியத் தக்கார் அவையம்”. வேண்டுவோர் கேட்டுப்
பெறலாம்(thakkar.avaiyam@gmail.
கிடைக்கும்.
தொடர்நாட்களில் அரசாணை:-
மன்னன் தனது 25-வது ஆண்டில் 275-வது நாள் விமானத்து ஸ்தூபித் தறியில்
வைக்கக் கொடுத்த செப்புக் குடம் ஒன்றும் அதன்மீது பொன் தகடு போர்த்தச்
செய்ததும் இந்த ஜகதிப் படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே ஆண்டு 312-ம்
நாளில் பொன்னின் கொள்கைத் தேவர் ஒருவர் 829 ¾ கழஞ்சு 3 மஞ்சாடி எடையில்
மன்னன் தந்துள்ளான்.படிமையை உயர்திணையில் குறிப்பிடுவது இங்கு கருதத்
தக்கது. அதே ஆண்டு 320-வது நாளில் அவரது திருத்தமக்கையார் பொன்னின் தளிகை
ஒன்றினைத் தந்திருக்கிறார்.
26-வது ஆண்டில் 14-வது நாளில் பொன்னின் திருப்பட்டம் ஒன்றைத்
தந்துள்ளான். அதே ஆண்டு 20-வது நாளில் கொடைகளை ‘ஸ்ரீவிமானத்தில்
வெட்டுக!’ என்று திருவாய் மொழிந்தான். அதே ஆண்டு27-வது நாளில் பொன்னின்
தளிகை ஒன்று தந்தான். அதே ஆண்டு 104-வது நாளில் பொன்னின் கிடாரம் ஒன்று
தந்தான். அதே ஆண்டு 318-வது நாளில் வெள்ளிப் பீடத்தில் தங்கப் படிமையாக
ஒருவரைத் தந்தான். அதே ஆண்டு 319-வது நாளில் பொன்னின் சின்னங்களைத்
தந்தான். மற்றபடி 23-வது ஆண்டு முதல் 29-வது ஆண்டுவரை தந்த கொடைகளின்
கணிசமான பகுதியை ஜகதிப்படையில் குறிப்பிட்டுள்ளான். அவை சற்றொப்ப 35,000
கழஞ்சு எடையுள்ள பொன்னின் பூசைப் பொருட்கள். அவற்றுடன்15 ஊர்கள், 60,000
கலம் நெல் இறை கட்டின காணிக் கடன் ஆக வரியாகத் தரச் செய்துள்ளான்.
இத்துடன் இக்கல்வெட்டு முழுமையடைகிறது. அதற்கு முன்னும் பின்னும்
வெற்றுக் கல். சிலகாலம் கழித்து இராஜேந்திர சோழனின் கல்வெட்டு கடைசியில்
இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கருவறை, அதனில் உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார், அதன்
முன்பாகக் கீழைத் திருமஞ்சன சாலை, அதனில் பூசைப் பொருட்கள், பொன்னின்
கொள்கைத் தேவர், இவை இன்று இல்லை. பொன்னின் கொள்கைத் தேவர் என்பது ராஜ
ராஜனின் சிலை இல்லை. கருவூராரின் சிலை இல்லை. சிவனின் சிலையும்
இல்லை.இலக்கண முறைமையின் அமைந்த சேயோன் முருகனின் படிமை என்று கருத
வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பொன் படிமை பித்தளைப் படிமையாக மாறி இன்று
குஜராத்தில் தனியார் ஒருவரிடம் இருக்கிறது. அதனை இன்னும் மீட்டுக்
கொண்டுவர முடியவில்லை. பொற்படிமையின் நிலை என்ன என்பது பெரிய கோயிலைப்
பராமரிக்கும் யுனெஸ்கோவுக்கும், இந்திய மற்றும் தமிழக அரசுக்கும்
தெரியலாம். இன்றைய வழிபாட்டு முறை முற்றிலும் இராசராசனின்
நோக்கத்திற்கும் திட்டத்திற்கும் எதிரானது.
கல்வெட்டு தரும் ஆறுதல், பூசைப் பொருட்களின் பெயர்கள்தான். அவை
இவைதான். ஸ்ரீபலித்தாலம், திரு
திருப்பொற்பூ,திருப்பள்ளித் தொங்கல் மகுடம், திருக்கொற்றக்குடை,
திருக்கைக் காரை, திருப்படிக்காரை, திருப்
திருக்கைப்பொட்டு ஒரனை, திருக்
திருவடிக்காரை, திருக்கால் மோதிரம்.
தட்டம், தளிகை, தவுக்கை,
திருப்பொற்பூ, தொழிற்பட்டிகை.
கெண்டி, கிடாரம், குடம்,
காளங்காளம், காளாஞ்சி, குழல்,
வட்டில், ஒட்டு வட்டில், மாநவட்டில்,நாரைத்தாள் வட்டில், இலைத்
தட்டு, ஈச்சொப்பிக்கை, படுகண்,
தூக்கம், துடா, மண்டை, மணிவட்
இந்தப் பெயர்கள் அனைத்தும் வகைக்கு ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றிலும் பல எண்ணிக்கைகள் உள்ளன. ஒவ்வொன்றின் எடையும் வெவ்வேறு
என்பதால் தனித்தனியே குறிப்பிடுகிறது ஜகதிப்படை.
பொன்னால் ஆன இப்பொருட்கள் இன்று அங்கு இல்லை.
மறைக்கப்பட்டுள்ளனவா?கொள்ளை போயினவா என்று தெரியவில்லை. இந்தப்
பெயர்களில் இருந்து அவற்றின் வடிவங்களை மீட்க முடியும். பல்லாயிரம்
வார்ப்படக் கலைஞர்கள் இன்றும் தமிழ் மரபில் உயிர்ப்புடன் இருக்கிறார்கள்.
அவர்களை மயக்கி மடை மாற்றித் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழ்ப் பகை.
அது ஆரிய வைதிகம், சைவச் சமணம் மற்றும் பவுத்த வைணவம்.
என்ன நடந்தது?
பொன்னின் கொள்கைத்தேவர் நாள் ஒன்றுக்கு மூன்று சந்தியிலும் அதாவது
உபானப்படை, குமுதகப்படை, கபோ
நீரில் ஏல அரிசியும் இலாமிச்ச வேரும் இடப்பட்டிருக்கும். 45 அக்கம் என்ற
வகையில் 8 நாட்களுக்கு ஒருமுறை ஏல அரிசியையும், இலாமிச்ச வேரையும்
தவறாமல் தருவதற்கு நிவந்தங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. 45x8=360.
ஆண்டு நாட்கள் 360. இது அசைக்க முடியாத சான்று.
பொன்னின் கொள்கைத் தேவருக்கு முன்பாகப் பொன்னின் தாலத்தால் ஒலி
எழுப்பினர். அந்த ஒலி விமானத்தின் உட்கூட்டின் வழியே கேணியாகப் பூத்தது.
பவனப் பிடாரன் பாவனை செய்தான். திருப்பதியம் விண்ணப்பம் செய்யப் பட்டது.
முன்புறமாக நாடக சாலை மேடையில் தளிச் சேரிப் பெண்டுகள் சிலம்பு ஒலி செய்ய
விலங்கல் செய்து ஆடல் நிகழ்த்தினர். ஆலய விடங்கன் உடுக்கை வாசித்தான்.
கொட்டு மத்தளமும் சகடையும் முழங்கின. இசை, கூத்து, படிமை இவை ஓர்மைப்
படுத்தப் பட்டன. இவற்றுடன் சிவயோகியர் நாடிகளை ஒழுங்கு செய்து
திருச்சதையம் செய்தனர். கடிகையார் கண்காணித்தனர். கருவூரார்
பெருமேற்பார்வை செய்தார். மன்னன் இயக்கினான். மரபறிவு மீண்டது.
படிப்பினை:-
10-ம் நூற்றாண்டில் தமிழ் நாட்காட்டி மீண்டது. அது ஒரே நாளில்
ஏற்பட்டது அல்ல. சற்றொப்ப 1000 ஆண்டுகள் உழவாரப் படையாளிகளின் பண்
மீட்பு, மண் மீட்பு, மரபறிவு மீட்பு இவற்றின் பயனாக விளைந்தது எனலாம்.
அடுத்த 1000 ஆண்டுகளில் இது சரிந்தது. அது ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல.
எல்லாம் வந்தேறுங்குடிகளின் கைங்கரியம்தான். இன்று மீண்டும் அது புரிந்து
கொள்ளப் படுகிறது. தமிழினத்து அறிஞர்கள் உற்றுணர்ந்து எடுத்துச் சொல்ல
விரும்புகிறார்கள். அவர்களை அரவணைக்கும் அரசு தேவை.
நெருங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டு:-
1.
தைப்பூசம்
12.01.2017
வெற்றி
 √
2.
மாசி மகம்
11.02.2017
வெற்றி
 √
3.
பங்குனி உத்தரம்
12.03.2017
தோல்வி
 x
4.
சித்திரைச் சித்திரை
10.04.2017
தோல்வி
 x
5.
வைகாசி விசாகம்
10.052017
வெற்றி
 √
6.
ஆனிக் கேட்டை
09.06.2017
வெற்றி
 √
7.
ஆடிப் பூராடம்
09.07.2017
வெற்றி
 √
8.
ஆவணித் திருவோணம்
07.08.2017
தோல்வி
 X
9.
புரட்டாசி உத்திராட்டதி
06.09.2017
வெற்றி
 √
சரியாக இன்னும் மூன்று முழுநிலவுகள். மூன்றாவது முழுநிலவின் மறு
நாளில் தொடங்கி 18 நாட்களில் ஆண்டு நிறைவு. மறுநாள் புத்தாண்டு. அன்றே
நிழல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பியிருக்கும்.
அன்றே
1. தைத்திங்கள் முதல் நாள்
2. வளர்பிறை 4-ஆம் நாள்
3. கிழமை ஞாயிறு
4. பொங்கல்
5. மஞ்சு விரட்டு
மேற்கண்ட ஐந்து கூறுகளையும் புதுப்பிக்க இரண்டு சட்டங்கள். அவற்றுள் சில
முரண். சிக்கலைச் சட்டத்திலும் காலக் கட்டத்திலும் தொட்டு தீர்க்க
வல்லுநர்கள். எடுத்துச் செல்ல இளந் தலைமுறை.
1. தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம்
2. மஞ்சு விரட்டுச் சட்டம்
இனிவரும் நாட்களின் அன்றாட நகர்வே ஆட்சிச் சக்கரத்தைத் தமிழ்
நாட்காட்டியின்படி நகர்த்தலும் என்று நம்பலாம்.
இது மரபு வழித் தமிழ்த் தேசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக