ஞாயிறு, 8 அக்டோபர், 2017

நம்மாழ்வார் காலம் கிபி 800 முன்னும் பின்னும்

Karthikeyan Rathinavelu
நம்மாழ்வார் காலம்?
Aathimoola Perumal Prakash
வைணவக் கொள்கையில் ஈடுபாடுடைய பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான
நம்மாழ்வார் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று பொதுவாக அறியப்பட்டாலும்
அவர் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் குலத்தில் பிறந்தவர் என்பதைக்
கீழ்காணும் தகவல்கள் மூலம் அறியலாம்.
பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண
அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்த டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
என்னி பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடை தாயாருடைய
ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய
ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர்
இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசார வைணவ ஆழ்வார்கள்
பன்னிருவரு ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின்
தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க
வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு
(தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினரான
சான்றோர்குலத்தை சேர்ந்தவர்.
8 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
இவரது காலம் கிபி 800 களின் தொடக்கம்
“மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ் “ என்று
மட்டுமே நாதமுனிகள் கூறுகிறார். வேறு குறிப்புகள் இல்லை. வழுதி என்ற
பெயர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களைக்
குறிப்பிடுவதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது.
குருபரம்பரை, அதிகார சங்கிரம் போன்ற நூல்களில் நம்மாழ்வாரின் காலத்தை
சரியாகக் குறிப்பிடவில்லை. ஆழ்வார்களில் கடைபட்டவராகவே கூறுகின்றன.
பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் சில சொற்பிரயோகங்கள் கற்பனைகள்
நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிலவற்றில் காணப்படுவதால் அவர் ஆண்டாளின்
காலத்திற்கு பின்பட்டவர் என்ற முடிவுக்கு வருவோமேயானால் வல்லபதேவன் என்ற
பாண்டிய மன்னன் மூலம் பெரியாழ்வாரின் காலத்தை எட்டாம் நூற்றாண்டு என்று
உறுதி செய்யப்பட்டுள்ளதால் நம்மாழ்வாரின் காலம் எட்டாம் நூற்றாண்டிற்கு
பிறகு என்று முடிவு கொள்ளலாம்.
இந்த இடத்தில் இரகுநாத பட்டர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு புலவர்
பாடியுள்ள குழைக்காதர் பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கிய நூலில்
நம்மாழ்வாரை பற்றிய குறிப்புகள் உள்ளன. தென்திருப்பேரையில் உள்ள
எம்பெருமானுக்கு நம்மாழ்வார் தனது நாயகி பாவத்தில் சூட்டிய பெயர் மகர
குழை காதர் என்பதாகும். திரு வாய்மொழி யோர் நாலாயிரஞ் செய்த
குருகை முனி என்பதால் சடகோபன் வேதம் அறிந்தவர் திருக்குருகூரில்
அவதரித்தவர் என்பது புலனாகிறது .மாறன் கலம்பகம்,ஆதிநாதன் வாகனமாலை ,
நம்மாழ்வார் பதம் போன்ற இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட
பழந்தமிழ் நூல்களில் மாறன் வழுதி நாடன் என்ற சொற்பிரயோகம் மீண்டும்
மீண்டும் வருவதால் நம்மாழ்வார் அரச குலத்தைச் சேர்ந்தவர் என்பது
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.
4 நிமிடங்களுக்கு முன்
Karthikeyan Rathinavelu
2 நிமிடங்களுக்கு முன் ·
மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
Wikipedia -வில் இவரது காலம் கிமு 3102 என்று குறிப்பிடபட்டுள்ளது ?உண்மையா?
சற்றுமுன் · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
இல்லை. அது வைணவர்களின் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக