புதன், 20 செப்டம்பர், 2017

கண்டுபிடிப்பாளர் கொலை இலுமினாட்டி தண்ணீரில் இருந்து ஹைட்ரோஜன் பிரித்தவர் மூன்று ஆண்டு செயல்படும் மின்கலம் டெஸ்லா புற்றுநோய் மருத்துவம் எரிபொருள் புதுமுயற்சி கண்டுபிடிப்பு

காலை வணக்கம் உறவுகளே!!

உலகை  மாற்றும்  கண்டுபிடிப்புகளும் கொலைகளும்

#ஸ்டான்ட்லி_மேயர்

இவர்தான்  உலகை  மாற்றக்கூடிய  கண்டுபிடிப்பை  கண்டுபிடித்தார், ஆனால்
இவர்  ஒரு  உணவு  விடுதியில்  படுகொலை  செய்யபட்டார். ஒயில் நிறுவனங்கள்
இவர் கண்டுபிடிப்பை   பொய்  என்று  பரப்புரை  செய்து,  இவரை  மர்மமான
முறையில்  கொலை  செய்தது,  சரி  அப்படி  என்ன கண்டுபிடித்தார்  ஸ்டான்லி
மேயர் ,

தண்ணீரில்  இருந்து  ஹைட்ரஜனை  பிரித்து  அதை  இயக்க ஆற்றலாக
மாற்றக்கூடிய மகிழுந்து (தண்ணீர் கார்) #Water_Car ஒன்றை
கண்டுபிடித்தார்,  நாசாவில்  செயற்கைக்கோள் பிரிவில்  பணிபுரிந்த
ஸ்டான்லி  மேயருக்கு ஹூஸ் ஹூ என்ற  விருதை  கொடுத்து  அமெரிக்கா  இவரை
கௌரவ படுத்தியது, இந்த  மகிழுந்து  ஆராச்சிக்கு  பிரிட்டன் பிரான்ஸ்
உள்ளிட்ட மேற்க்கத்திய  நாடுகள்  உதவ  முன்வந்தது  இந்த  நிலையில்  இவர்
1998ம்  ஆண்டு  ஒரு  உணவு  விடுதியில்  மர்மமான  முறையில்
கொலைசெய்யப்பட்டார்.

#டிமிட்ரி_பெற்றோனாவ்

என்ற  விஞ்ஞானி  2010ம்  ஆண்டு  ஒரு  கண்டுபிடிப்புக்காக சில
மாதங்களிலேயே   கொலை செய்யபட்டார், இவர்  என்ன  கண்டுபிடித்தார்,
#பிளாஸ்மா_பேட்டரி  ஒரு  முறை  இவர்  கண்டுபிடித்த  பிளாஸ்மா  மின்
கலத்தில்  மின்சாரத்தை  சேமித்தால்( சார்ச் செய்தால்) சுமார்  மூன்று
ஆண்டுகளுக்கு  இந்த  மின்கலம் வேலை செய்யும் இதை  இவர்  ரஷ்ய  ராணுவ
அதிகாரிக்கு  நிருபித்து  உதவி கேட்டார்  ஆனால்  ரஷ்ய  ராணுவம்  இதை
ரஷ்யாவுக்கு  மட்டும்  தான் தயாரிக்க  வேண்டும்  என்று  சொன்னது  ஆனால்
டிமிட்ரி பெற்றோனாவ்  எனது  கண்டுபிடிப்பு உலகம்  முழுமைக்கும்   பயன்பட
வேண்டும்  அப்போதுதான்  உலகம்  மின்சார செலவில்  இருந்து  காக்கப்படும்
என்றார்( இந்தியாவா  இருந்தா  ஆண்டி  இந்தியன் ஆக்கி ஒயரை  வாயிலே
வைத்து  அதே  இடத்தில்  கொன்று  இருப்பார்கள்  என்பது  வேறுகதை)  இதனால்
இவர்  எப்போதும்  போகும் ரெட் ஸ்டார்  உணவு  விடுதிக்கு  போனவர்
திரும்பி  வரவே  இல்லை  அதன்  பிறகு  சில  மாதங்கள்  கழித்து வோல்கா
நதிக்கரையில்  பிணமாக  கிடந்தார் இவரது  கண்டுபிடிப்பும்  வீணாக
போனது.இவரை  பற்றிய  எந்த  தகவலும்  இதுவரை  இல்லை  இவருடைய
புகைப்படத்தை  கூட  ரஷ்யா  இதுவரை  வெளியிட  வில்லை..

#டாம்_ஓகுல்_ஜுயல்_ஏபிசிஎல்_கர்பரேட்டர்.
1981ம் ஆண்டு  மர்மமான  முறையில் வீட்டிலேயே இறந்தார், இவர்  அதிகமாக
போதைபொருள்  உட்கொண்டதாக அமெரிக்க  அரசு  அறிக்கை  தாக்கல் செய்தது,
இவர்  கண்டுபிடித்தது  மகிழுந்துக்கு  பயன்படுத்தப்படும்  கார்பரேட்டர்
அட  இதில்  என்ன  சிறப்புன்னு  கேட்குறீர்களா?  காம்  ஒகுள்
கண்டுபிடித்த  காற்பறேடர் வெறும்  மூன்று லிட்டர் பெட்ரோலை பயன்படுத்தி
நூற்றி  அறுபது  கிலோமீட்டர்  பயணம்  செய்யமுடியும் 1977ல் எழு  லிட்டர்
பெட்ரோலை  மகிழுந்துக்கு  போட்டு  முன்னூறு  கிலோமீட்டர்  பயணம்
செய்துள்ளது தான்  இவர்  கண்டுபித்த கார்பறேட்டர் சிறப்பு 1970களில்
உலகின்  உச்சியில்  இருந்த டாம் ஒல்குள் 1981 இவரின்  இறப்பிற்கு  பிறகு
இந்த காற்பறேட்டரும்  உலகில்  இல்லாமல்  போனது..

#நிக்கோலா_டெஸ்லா
1943ம்  ஆண்டு  ஒரு  உணவு  விடுதி  அறையில் தனிமையில்  இறந்துபோனார்
இவரின்  கண்டுபிடிப்புகள் ஏராளம்  வந்து  இருக்க வேண்டியது  ஆனால்  உதவ
ஒருவரும்  இல்லாததால் இவரின் பல கண்டுபிடிப்புகள் இல்லாமலேயே போனது,
நியான் விளக்கு ,இண்டக்சன் மோட்டார் ,ஆல்டர்நேடிவ் கரண்ட் முதலியவை
இவரின்  கண்டுபிடிப்புகள் மனித  சமூகத்தையே  அடுத்த  கட்டத்துக்கு
கொண்டு  போய் இருக்கவேண்டியவை  ஆனால் இவரது கண்டுபிடிப்புகளுக்கு  உதவிய
ஜெபி.மார்கன் டெஸ்லோவின் வைஃபை மின்சாரகண்டுபிடிப்பை வெறுத்தார் , நிரந்த
 மின்சாரத்தில் (கம்பிவட மின்சாரம்) முதலீடு  செய்து  உள்ளபோது நிக்கோலா
டேஸ்லாவிற்கு உதவி செய்து  வந்தார் ஆனால்  டெஸ்லாவின் புதிய
கண்டுபிடிப்பான  ஒயர்லஸ் கரண்ட்  ஜெபி  மார்கோனின்  நிரந்தர  மின்சார
முதலீட்டை  பாதிக்கும்  என்று  கருதி  அவருக்கு  உதவுவதை  நிறுத்தினார்
வேறு  யாரும்  உதவ  கூடாது  என்று  ரகசிய  உடன்படிக்கையும்  செய்தார் ,
நிக்கோலா டெஸ்லாவின்  கம்பி இல்லா  மின்சார  கண்டுபிடிப்பு  இப்போது
நாம்  பயன்படுத்தும் wifi கனெக்சன்  போல  கண்டுபிடித்தார் எங்கு
வேண்டுமானாலும்  எவ்வளவு  வேண்டுமானாலும் உற்பத்தி  செய்யகூடிய  கம்பி
இல்லா  wifi மின்சாரத்தை  கண்டுபிடித்தார் ,ஒரு  செல்போன்  டவர்  மூலமாக
எல்லா  செல்பிசிகளும்  இயக்கம்  பெறுவது  போல்  ஒரு  டவர்  மூலமாக  எல்லா
 வீடுகளுக்கும்  தேவையான  மின்சாரத்தை  கம்பி  இல்லாமலேயே இலவசமாக
மக்கள்  பயன்படுத்தும்  படி  நிகோலா டெஸ்லா   கண்டுபிடித்தார்  இவரின்
இந்த  கண்டுபிடிப்புக்கு  பாராட்டி  இருக்க வேண்டிய  உலகம்  இவருக்கு
உதவாமல்  தனிமையில்  விட்டதால்  மனம்  வெதும்பி  செத்தார்  என்றும்
இல்லை  மர்மான  முறையில்  கொலை செய்யபட்டார்  என்றும்  இருவேறு
கருத்துக்கள்  நிலவி  வருகிறது

கேன்சருக்கு  மருந்து  கண்டுபிடித்தவர்கள்  தான்  உலகில்  அதிகமாக
கொலைசெய்யப்பட்டு  இருக்கிறார்கள்  இதில்  2015ம்  ஆண்டு  மட்டும்
பார்மா(மெடிகல்) கம்பெனிகளால்   மட்டும் 11 விஞ்ஞானிகள் கொலைசெய்ய
பட்டுள்ளார்கள் கேன்சருக்கான (புற்றுநோய்) மருந்து  விற்பனை
பாதிக்கப்பட்டு விடகூடாது  என்பதாலேயே  இந்த கொலைகள்  நடந்துகொண்டு
உள்ளது.

*முகநூல் SimonTamilar*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக