வியாழன், 21 செப்டம்பர், 2017

தமிழர் பழமை பற்றி பார்ப்பனர் ஆய்வாளர் எழுதியவை மூத்தகுடி

தமிழன் இடம்பெயர்ந்தவனா...?
உலக நூல் வல்லாரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் உலகில் முதன் முதல்
மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
(சான்றுகள்: பி.டி.சீனிவாச ஐயங்கார் எழுதிய,The Stone Age Of India, page
3. (2) V.R.இராமச்சந்திர தீட்சதர் எழுதியுள்ள, Origin and Spread Of The
Tamils, Page 55,56..)
”தமிழகம்” என்னும் நிலத்தின் பெயரும், ”தமிழர்” என்னும் மக்கள் பெயரும்,
அவர் தோன்றிய காலத்தைப் போலவே தொன்மை வாய்ந்தன. இவை இரண்டும் ”தமிழ்”
என்னும் மொழியின் அடியாகவே உண்டானவை.
(சான்று: மகாவித்துவான் இரா.இராகவையங்கார் எழுதிய, ”தமிழ் வரலாறு”)
இங்கு திராவிடம், திராவிடர் என்கிற கோட்பாடுகள் முற்றிலுமாக அடிபட்டுவிடுகின்றன.
அன்றைய தமிழர்கள் பூமிக்கு வழங்கியப் பெயரே ”நானிலம்” என்பது.
இபபெயரினின்றே தமிழர்கள் எத்தகைய தரைநூல் அறிவும், இயற்கை அறிவும் பெற்ற
உயர்நத நாகரிகத்திற்கு உரிமையுடையவர்களாக இருந்தார்கள் என்பது புலனாகும்.
நிலப்பாகுப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு, எழுந்த நாகரீகத்தை அடிப்படையாகக்கொ
ண்டே, தமிழர்கள் அக, புற ஒழுக்கங்களை படைத்து தனிநாகரிகத்திற்கு
சொந்தக்காரர்களாக விளங்கினர்.
(சான்று: நானிலப்பாகுபாடு கட்டுரை, ஆசிரியர் S.V.வரதராச ஐயங்கார். 1959.
இதில் அவர் கூறுகிறார். ”தமிழர்களின் இந்த நாகரிகம் நனி சிறந்தது. உலகின்
வேறு எந்த நாட்டினிரின் நாகரிகத்திற்கும் பின்னடையாதது,
பிற்படாதது...உலகின் தலைசிறந்த நாகரிகங்களில் ஒன்றாக தமிழர் நாகரிகம்
விளங்கியது)
நானிலப்பாட்டை இயற்கை செல்வங்களை அடிப்படையாக வைத்தே தமிழர்கள்
அமைத்தனர். குறிஞ்சி இங்கு குறிஞ்சி என்னும் மரம் சிறப்புடையதாக
இருந்ததால் இந்த நிலப்பரப்பிற்கு குறிஞ்சி. முல்லை இங்கு முல்லைக்கொடி,
மருதம் இங்கு மருத மரம். நெய்தல் இங்கு நெய்தல் கொடி சிறப்பு வாய்ந்ததால்
இப்பெயர் பெற்றது.
இவ்வாறு தமிழர்கள் இயற்கையாக அமைந்த நிலங்களை பாகுபாடு செய்து, அவற்றை
இலக்கண வாயிலாக துறைப்படுத்தி, அந்த இலக்கண அமைதியோடு வாழ்வியல் வகுத்து,
அந்த வாழ்வியலின் அடிப்படையில் இலக்கியங்கள் எழுதப்பட்டு உலகின்
தன்னேரில்லா நாகரிகத்திற்கு தனி உரிமைப் பெற்றவர்களாக தமிழர்கள்
விளங்கினர்.
அத்தகைய இலக்கியங்களை கற்குந்தோறும், தமிழர்களின் உலகியல் அறிவும், அதனை
நுனித்து உணர்ந்து இலக்கிய வாயிலாக வெளிப்படுத்திய அவர்களது திறனும்
நன்கு வெளிப்படும்.
தமிழன் நாகரிகமே உலகின் தலைசிறந்த நாகரிகம்.
with Kasi Krishna Raja
(இன்றைய ஆங்கில இந்து நாளேடில் ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரை
வெளிவந்துள்ளது. ( How Genetics is settling the Aryan Migration
Debate..by Tony Joseph) இதில் இந்தியாவில் உள்ளவர்கள் யாவரும்
வந்தேறிகள் என கடைசிவரி முடிகிறது. இதற்கு எதிர்வினையாக எனது இந்தப்
பதிவு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக