புதன், 20 செப்டம்பர், 2017

சீனா பஞ்சம் ஆனாலும் ஏற்றுமதி மாவோ விமர்சனம் கம்யூனிசம் பொதுவுடைமை கம்யூனிஸ்ட்

Rajasubramanian Sundaram Muthiah
பொதுவுடமைவாதிகளுக்கு மட்டுமான கேள்வி. மற்றவர்கள் பதில் சொல்ல தடை
எனச்சொல்லி கீழுள்ள கேள்வியை கேட்டிருந்தேன். அந்த கேள்வி கேட்டு பல
நாளாகியும் பதில் வராததால் அந்த கேள்வியையும் அதுக்கு பொதுவுடமைவாதி
அல்லாத ஜெய் தந்த பதில்களையும் கீழே இருக்கு. அதற்கு அடுத்த கட்ட
கேள்விகளும் இருக்கு. பாப்பும் இதுக்காவது நம்ம பொதுவுடமைவாதிங்க பதில்
சொல்வாங்களான்னு.
_________________
என் பழைய கேள்வி: 1959 முதல் 1962 வரை சீனாவில் இருந்து ஏற்றுமதி
செய்யப்பட்ட உணவு பொருட்களின் அளவு எவ்வளவு?
ஜெய் தந்த பதில்: 4.2 million tons in 1959 and stayed at 2.7 million
tons when the nation suffered
the horrific death rate of 25.4 per thousand in 1960. ( source :ON THE
CAUSES OF CHINA'S AGRICULTURAL
CRISIS AND THE GREAT LEAP FAMINE)
__________________
மேலே ஜெய் சுட்டிக்காட்டியுள்ள நூலில் குறிப்பிடப்பட்ட டன்களின் (ஒரு டன்
= 1000 கிலோ) அளவு உணவு தாணியங்களுக்கு மட்டும் பொருந்தும். கிழங்கு
காய்கறிகள் புலால் உணவுகள் ஏற்றுமதி அளவு பற்றி தகவல்கள் இன்னும் உள்ளன.
அவற்றை எல்லாம் சேர்த்தால் 25% கூடலாம். 1961, 1962 நடந்த ஏற்றுமதி பற்றி
அவர் குறிப்பிடவில்லை. சரி இனி அடுத்தக்கட்ட கேள்விகளுக்கு வருவோம்.
_____________________
இத்தனை டன்கள் ஏற்றுமதியான போது தான் சீனாவில் பெரும் பட்டினிச்சாவு
நடந்தது. 5 கோடி மக்கள் பட்டினியில் இறந்தனர். இந்த காலத்தில் தான் மாவோ
சீனத்தை ஆண்டுகொண்டிருந்தார். அது பொதுவுடமை புரட்சியின் காலமாக
எழுதப்பட்டுள்ளது.
அடிப்படைக்கேள்வி: நிலங்கள் பொதுவுடமையாக்கப்பட்ட குடிகளில் 5 கோடி பேர்
மாண்டுள்ளனர். அவர்களின் பொருளாதாரம் அந்த அளவு வீழ்ச்சி கண்டது. ஆனால்
இன்னொரு பக்கம் 420 கோடி கிலோ தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்தோர் வளம் கொழிக்க வாழ்ந்தனர். இந்த இரு தரப்பு மக்களின்
பொருளாதாரத்துக்கும் இவ்வளவு மலையளவு வேற்றுமை ஏன்? இதை செய்வது தான்
பொதுவுடமையா?
துணைக்கேள்விகள்:
ஐந்து கோடி பேர் பட்டினியில் செத்த போது நடந்த 420 கோடி கிலோ தானியங்கள்
மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது எப்படி?
அந்த தானியங்களை வாங்கியது யார்? ஏற்றுமதி செய்தது யார்?
ஏற்றுமதி செய்வோருக்கு அத்தனை தானியங்கள் வாங்க காசு அல்லது வேறு மூலதனம்
எங்கிருந்து கிடைத்தது?
நான் சீனாவில் 5 கோடி பேர் இறந்தது பற்றி பதிவிட்ட போது அது பஞ்சத்தாலும்
மாவோவுக்கு தெரியாமல் நடந்த அவரின் கீழுள்ள தலைவர்களும் செய்த தவறுன்னும்
சொன்னவர்கள் இதுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
5 கோடி மக்களை சாகடிக்கும் அளவுக்கு அவர்களிடம் இருந்த பொருளாதார
கட்டமைப்பை சிதைத்ததும்,,,,
420 கோடி கிலோ தானியங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த
மக்களின் கட்டமைப்பை வலிமைப்படுத்திய
தும் தான் மாவோ காலத்தில் நடந்த பொதுவுடமை புரட்சியா?
பொதுவுடமை என்பது 5 கோடி மக்களின் பொருளாதாரத்தை சாகும் வரை விட்டதும்''''',
420 கோடி கிலோ தானிய ஏற்றுமதி செய்த சமூகத்தை வளம் கொழிக்க வைப்பதும் தானா?
இது பொதுவுடமையின் சிக்கலாக பார்க்கலாமா? இல்லை மாவோவின் மீது பழியை
போட்டு பொதுவுடமை சரி எனச்சொல்லி காக்கப்போகிறார்களா பொதுவுடமைவாதிகள்?
இதுற்காகவாவது பொதுவுடமைவாதிகள் பதில் சொல்வார்களான்னு பாப்போம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக